வயநாட்டில் ராகுல்காந்தியின் அலுவலகம் சூறை: பினராயி விஜயன் கண்டனம்

கேரளா: வயநாட்டில் ராகுல்காந்தியின் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உள்ளது. ராகுல் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

எனக்கு பதவி மீது ஆசையில்லை.. பதவியிலிருந்து விலகத் தயார்.. மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே!

தனக்கு பதவி மீது ஆசையில்லை என்றும், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார் எனவும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி முற்றியுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் உத்தவ் தாக்கரே, காணொலி மூலம் தொண்டர்களிடையே உரையாற்றினார். தனக்கு கழுத்து மற்றும் தலையில் மிகுந்த வலி இருப்பதாகவும், கண்ணையே திறக்க முடியாத நிலையில், அதை குறித்து கவலைக் கொள்ளவில்லை என்ற உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவுக்காக தான் வகித்த துறையையே விட்டுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். … Read more

ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டம்

டெல்லி: இன்று புதுடெல்லி, விஞ்ஞான் பவனில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒன்றிய அமைச்சகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் மாண்புமிகு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர் குமார் அவர்கள் தலைமையில், மாண்புமிகு இணை அமைச்சர் குமாரி பிரதிமா பூமிகா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  மேலும் இக்கூட்டத்தில் … Read more

திரும்ப மறுக்கும் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்.. மகாராஷ்டிராவில் வெடிக்கிறதா வன்முறை?

அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேயின் கை நாளுக்குநாள் ஓங்கி வரும் நிலையில், மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் மேலும் சிக்கல் அடைந்து வருகிறது. மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் மகா விகாஸ் ஆகாடி அரசை காக்க தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் முகாம், அசாம் தலைநகர் குவஹாத்தியில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. மேலும் சில சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டே … Read more

வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை: ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்

புதுடெல்லி: புதிய தொழிலாளர் விதிகள் முக்கிய மாநிலங்களில் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் கூடுதல் வார விடு முறை, அதிகமான பிஎப் தொகை உள்ளிட்ட பல பலன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்கவுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் … Read more

DRDO மற்றும் இந்திய கடற்படை இணைந்து நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி..!

தரையில் இருந்து செங்குத்தாக பாய்ந்து சென்று வானில் 25 முதல் 30 கிலோ மீட்டர் வரையிலான குறுகிய தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை, டிஆர்டிஒ மற்றும் இந்திய கடற்படையால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் சண்டிபூர் கடற்கரை அருகே நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகணை அழித்ததாகவும், அதிவேக வான் இலக்கைப் பிரதிபலிக்கும் விமானத்திற்கு எதிராக சோதனை நடத்தப்பட்டதாகவும் … Read more

மும்பை முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்க அறிவிப்பு

மகாராஷ்ட்ரா: மும்பை முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்க அறிவுத்தப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து போலீசாருக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் ராகுல் காந்தி அலுவலகம் சூறை.. சுவர் ஏறிச் சென்று அட்டூழியம் செய்த கும்பல்

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடினர். கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது. இதனால் அடிக்கடி வன்முறையும் அங்கு வெடிக்கிறது. சமீபத்தில் அம்மாநில முதலமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தை நடத்தியது. திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களுக்கு பதிலடியாக தற்போது வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தியின் அலுவலகத்தை இடது சாரி அமைப்பை சார்ந்தவர்கள் சூறையாடியுள்ளதாக குற்றச்சாட்டு … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரிய பாஜக..!

குடியரசுத் தலைவர் தேர்தலில், திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தருமாறு காங்கிரஸ் கட்சியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஜே.பி.நட்டா, குடியரசுத் தலைவர் தேர்தலில் அரசியல் தேவையில்லை என்றும், ஒரு மனதாக தேர்வு நடைபெற வேண்டும் எனவும் கூறினார். இதேபோல, தேசிய மாநாட்டு கட்சியின் ஃபருக் அப்துல்லா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா ஆகியோரையும் தொடர்பு கொண்டு ஜே.பி.நட்டா … Read more

நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம்; 100 கிலோ கேக் வெட்டி 5000 பேருக்கு தடபுடல் விருந்து வைத்த தொழிலதிபர்

பெலகாவி: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா துக்காநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா மர்தி. தொழில் அதிபரான இவர், கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர். இவர் தனது வீட்டில் ஒரு நாய் வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு கிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளார். தனது வளர்ப்பு நாய் மீது சிவப்பா, அவரது குடும்பத்தினர் மிகுந்த அன்பு கொண்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்று வளர்ப்பு நாய் கிரசுக்கு சிவப்பா பிறந்தநாள் கொண்டாடினார். இதற்காக கிராமத்தில் வசிக்கும் … Read more