சரத்பவார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகை கேதகி சிதலே விடுவிப்பு.!

மராத்தி நடிகை கேதகி சிதலே ஒரு மாத சிறைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் கேதகி சிதலே, மே 14ம் தேதி கைது செய்யப்பட்டார். தானே சிறையில் இருந்து வெளியே வந்த கேதகி சிதலே புன்னகையுடன் காரில் சென்றார்.  Source link

60வது பிறந்த நாளையொட்டி ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை; தொழில் அதிபர் அதானி தாராளம்

புதுடெல்லி: இந்திய தொழிலதிபர் அதானி தனது 60வது பிறந்த நாளையொட்டி ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளார். அதானியின்  மொத்த சொத்து மதிப்பில் இது வெறும் 8 சதவீதம் ஆகும். இந்திய கார்ப்பரேட்  வரலாற்றில் வழங்கப்படும் மிகப்பெரும் நன்கொடைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு இன்று 60வது பிறந்த நாள். இதையொட்டி அவரது குடும்பத்தினர் ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்து உள்ளனர். சுகாதாரம், கல்வி … Read more

கர்நாடகா: வளர்ப்பு நாய்க்கு 100 கிலோ கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தொழிலதிபர்

கர்நாடக மாநிலம் பெல்கவியில் தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு தொழிலதிபர் ஒருவர் 100 கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் முதலாகி பகுதியை சேர்ந்தவர் சிவப்பா. தொழிலதிபரான இவர் தனது வீட்டில் பாதுகாப்புக்காக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடும் வகையில் 100 கிலோ கேக் தயார் செய்து பொதுமக்கள் மத்தியில் கேக் வெட்டி சிவப்பா பிறந்தநாள் கொண்டாடினார். பின்னர் 4000 பேருக்கு விருந்து … Read more

Maharashtra Govt Crisis:'சரத் பவாரை மத்திய அமைச்சர் மிரட்டுகிறார்' – சஞ்சய் ராவத் பகீர்!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் … Read more

வெறும் 6 மணிநேரத்தில் ரூ.2.04 லட்சம் அபராதம் வசூலித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்..!

பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறிய 249 வாகன ஓட்டிகளிடமிருந்து வெறும் 6 மணி நேரத்தில் 2 லட்சம் அபராதத்தொகையை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வசூல் செய்துள்ளார். நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் இந்த தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு கார் ஓட்டுனரிடமிருந்து மட்டும் 36,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனம் கடந்த 6 மாதங்களில் 36 முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது.  Source link

2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி முடிவு: கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி தகவல்

பெங்களூரு: 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். கர்நாடகம் இரண்டு மாநிலங்களாகவே பிரிக்கப்பட வேண்டும்; நாம் கன்னடர்களாகவே இருப்போம் என தெரிவித்தார்.  

குஜராத் கலவரம் – பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா பகுதியில் நடைபெற்ற ரயில் எரிப்பு சம்பவத்தில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்தக் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி … Read more

குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனு டிஸ்மிஸ்!

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் இரு பெட்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில், ரயிலில் பயணித்த 59 கர சேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பெரும் மதக்கலவரம் வெடித்தது. அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் … Read more

ஆபத்தான முறையில் இரயிலில் பயணம் செய்தபோது மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்த இளைஞர்… பதறவைக்கும் காட்சி

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில், ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 19 வயது இளைஞர், மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தானே- கல்வா இரயில்நிலையங்களுக்கு இடையே புறநகர் ரயில் சென்றபோது, இளைஞர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்ததை, மற்றொரு ரயிலில் வந்த பயணிகள் வீடியோ எடுத்தனர். அப்போது, இரயில் படியில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தார். Source link

ஜனாதிபதி தேர்தல்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் முர்மு

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர். ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை 18-ல் தேர்தல் நடக்கிறது.