வாழத்தக்க சிறந்த நகரங்களின் பட்டியல்! முதல் 100 இடங்களுக்குள் ஒரு இந்திய நகரம் கூட இல்லை!

உலகின் வசிக்கத்தக்க சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து சென்னை உள்ளிட்ட 5 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் வசிக்கத்தக்க இந்த ஆண்டுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலை பொருளாதார புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. 173 நகரங்கள் கொண்ட பட்டியலில் இந்தியாவில் இருந்து 5 நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. சிறந்த நகரத்திற்கான தரத்திற்கு முதல் 100 இடங்களுக்குள் இருப்பது குறியீடாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து ஒரு நகரம் கூட முதல் 100 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய … Read more

உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு 125 மணல் ரத சிற்பங்களை கடற்கரையில் உருவாக்கி சாதனை

புரி: உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை வெள்ளிகிழமை தொடங்கியது.இதையொட்டி புரி கடற்கரையில் மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரத சிற்பங்களை மாணவர்களுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார். இந்த சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது. ஒடிசா மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை மிகவும் புகழ்பெற்றது. 9 நாட்கள் நடக்கும்இந்த ரத யாத்திரை வெள்ளிக்கிழமை தொடங்கியது. மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன்பட்நாயக் முக்கிய நிகழ்வுகளின்போது அதைப் பிரபலப்படுத்தவும் … Read more

PM Modi Andhra Visit: மோடியுடன் செவ்ஃபி எடுத்து கொண்ட பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திர மாநிலத்துக்கு வருகை தந்திருந்தார். அவரது பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ஆந்திர மாநிலம், பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125 ஆவது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அத்துடன் அவரது 30 அடி உயர வெண்கல சிலையையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், … Read more

5 வயது சிறுவனை மயக்கம் அடையும் அளவிற்கு அடித்த ஆசிரியர்.. மிருகத்தனமாக அடித்த ஆசிரியருக்கு மக்கள் தர்ம அடி..!

பீகாரில், 5 வயது சிறுவனை மயக்கமடைந்து விழும் அளவிற்கு மிருகத்தனமாக அடித்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தலைநகர் பட்னாவில் உள்ள டியூசன் சென்டரில் பணியாற்றி வரும் சோட்டு என்ற அந்த ஆசிரியர் 5 வயது சிறுவனை கட்டையால் கண்மூடித்தனமாக அடிக்கும் காணொளி இணையத்தில் வைரல் ஆனது. ஒரு கட்டத்தில் கட்டை உடைந்த போது கோபம் தனியாத அந்த ஆசிரியர் சிறுவனின் முடியை பிடித்து இழுத்து அவனை சகட்டுமேனிக்கு அறைந்தார். வலி தாங்கமுடியாமல் கதறி அழுத … Read more

முதுநிலை ஆசிரியர் போட்டி தேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி: முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2 லட்சத்து 13 ஆயிரத்து 893 பேர் எழுதியுள்ளனர். முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை trb.tn.nic.in இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேரை துணிச்சலாக பிடித்த கிராம மக்கள்: காஷ்மீர் ஆளுநர் ரூ.5 லட்சம் பரிசு

ஜம்மு: ஜம்முவில் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகளை உள்ளூர் கிராம மக்களே பிடித்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு ஆளுநர் மனோஜ்சின்ஹா ரூ.5 லட்சம் வழங்கினார். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் நேற்று கூறியதாவது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர் தலிப் உசைன், பைசல் அகமது தர் ஆகிய 2 பேர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தின் ரீஸி மாவட்டம் டக்சன் தோக் கிராமத்தில் … Read more

தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு..!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சட்டப்பேரவை ஏற்றுக்கொண்டதாக பேரவை முதன்மைச் செயலாளர் தெரிவித்ததையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக அஜித்பவார் பொறுப்பேற்றுக்கொண்டார்.  Source link

ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கான பில்களில் சேவை கட்டணம் விதிக்க கூடாது: ஒன்றிய அரசு

டெல்லி: ஹோட்டல்களில் உணவுக் கட்டணத்துடன் ஜிஎஸ்டியும் சேர்க்கப்படுவதால் சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஹோட்டல்களில் சேவை கட்டணம் விதித்தால் 1915 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாய் குரைத்ததால் ஆத்திரம் – பக்கத்து வீட்டுக்காரரின் மண்டையை பிளந்த இளைஞர்!

தன்னை பார்த்து நாய் குரைத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அந்த நாயையும், அதன் உரிமையாளரையும் இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாஸ்ச்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் தரம்வீர் தய்யா (35). இவர் இன்று அதிகாலை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த வளர்ப்பு நாய், தரம்வீர் தய்யாவை பார்த்து குரைத்துள்ளது. தொடர்ந்து தன்னை பார்த்து குரைத்ததால் ஆத்திரமடைந்த அவர், அந்த நாயின் வாலை பிடித்து தூக்கியுள்ளார். … Read more

மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது: வாட் வரியை குறைக்க ஏக்நாத் ஷிண்டே முடிவு

மும்பை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரி குறைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முக்கிய அறிவிப்பாக இதனை அவர் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு, முறையே ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்தது. மேலும் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க … Read more