10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72% மதிப்பெண்கள்.. 58 வயதில் சாதித்த ஒடிசா எம்.எல்.ஏ
ஒடிசாவைச் சேர்ந்த 58 வயதான எம்.எல்.ஏ. அங்கட் கன்ஹர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72 சதவிகித தேர்ச்சியுடன் வெற்றிபெற்றுள்ளார். ஒடிசாவில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வை அம் மாநிலம் முழுவதும் 5.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியிருந்தனர். அவர்களோடு புல்பானி தொகுதி பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ. அங்கட் கன்ஹரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். கந்தமால் மாவட்டம், பிதாபரி கிராமத்தில் அமைந்துள்ள ருஜன்ஜி உயர்நிலைப் பள்ளியில் … Read more