முதல் முறையாக தீப்பற்றி எரிந்த மின்சார “கார்”! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய உரிமையாளர்!

மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்து பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வந்த நிலையில், முதன்முறையாக மின்சார கார் ஒன்று இந்தியாவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் டாடாவின் அதிக விற்பனையாகும் மாடலான நெக்ஸான் (Nexon) மின்சார கார் தீப்பற்றி எரிந்துள்ளது. அந்த காரின் உரிமையாளர் தனது அலுவலகத்தில் உள்ள சாதாரண சார்ஜரில் காருக்கு சார்ஜ் செய்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டிருக்கிறார். 5 கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில், காரில் அலார ஒலி எழுந்ததோடு, உடனடியாக … Read more

ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்: 69% இறக்குமதி செய்த ரிலையன்ஸ், நயாரா 

மும்பை: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ள நிலையில் இதில் 69 சதவீதத்தை ரிலையன்ஸ் மற்றும் நயாரா ஆகிய இரு நிறுவனங்கள் வாங்கி சுத்திகரித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுககு ஏற்றுமதி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா … Read more

maharashtra political crisis: சிவசேனா எம்எல்ஏக்கள் மேலும் 3 பேர் ஓட்டம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி ( மகா விகாஸ் அசாகி) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சில தினங்களுக்கு முன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். இதைத் தொடர்ந்து, அசாம் மாநிலம் கவுகாத்தில் தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து 78 ரூபாய் 32 காசுகள் என்னும் அளவைத் முதன்முறையாகத் தொட்டுள்ளது. காலையில் ஓரளவு மதிப்பு உயர்ந்த நிலையில், வணிக நேர முடிவில் வீழ்ச்சியடைந்து முந்தைய நாள் வரம்பைத் தொட்டது. இந்தியாவில் செய்திருந்த வெளிநாட்டு முதலீடுகளை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றதே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.  Source link

ஆப்கன் நிலநடுக்கம் ஆயிரம் பேர் பலி: சர்வதேச நாடுகள் உதவியை கோரும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 1,000 பேர் உயிரிழந்ததை அடுத்து சர்வதேச நாடுகளின் உதவியை தலிபான்கள் கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. மக்கள்தொகை அடர்த்திமிக்க பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் உயிர்ச்சேதங்கள் மிக அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் துவக்கத்திலேயே தெரிவித்தனர். தற்போது வரை ஆயிரம் … Read more

தெற்காசியாவில் தொடரும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று நேபாளத்தில்! என்ன காரணம்?

நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 161 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.3 என்ற அளவில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Earthquake of Magnitude:4.3, Occurred on 23-06-2022, 03:41:51 IST, Lat: 28.28 & Long: 83.81, Depth: 66 Km ,Location: 161km WNW of Kathmandu, Nepal for more information download the BhooKamp App … Read more

'அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது; பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருக்கிறார்' – காங்கிரஸ் எம்.பி.

குவாஹாட்டி: அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது; பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருக்கிறார் என்று அம்மாநில காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் சாடியுள்ளார். அசாமில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளில் பிரதமர் மோடியோ எந்த அக்கறையும் காட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் பரவலாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. கோகோய் அளித்தப் பேட்டியில் அரசை வெகுவாக சாடியுள்ளார். If there’s a … Read more

வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!

உலகளாவிய இடையூறுகள் இருந்த போதும் கடந்த ஆண்டில் 50 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி. டெல்லியில் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் புதிய வளாகமான வணிக பவனைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தியாவின் வெளிநாட்டு வணிகம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ளும் வகையிலான நிர்யாத் என்கிற புதிய இணையத் தளத்தையும் பிரதமர் தொடக்கி வைத்தார். இந்தத் தளத்தில் ஆண்டுவாரியாக இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி பற்றிய தகவல்களைப் பெற … Read more

மகனின் முகவரி தெரியாததால் பெங்களூரில் 11 மணி நேரம் தவித்த தமிழக மூதாட்டி

பெங்களூரு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் வசந்தி (60). இவரது மகன் ராஜேஷ், தனது மனைவி கவுதமியுடன் பெங்களூரு புலிகேசிநகர் அருகே கஸ்தூரிநகர் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகன், மருமகளை பார்ப்பதற்காக பெங்களூருவுக்கு வந்தார் வசந்தி. இந்நிலையில் காய்கறி வாங்குவதற்காக வசந்தி கடைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு செல்ல வழி தெரியவில்லை. செல்போனையும் வீட்டில் வைத்து சென்றதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஒரு பள்ளியின் முன்பு நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். … Read more

“அராஜக போக்கில் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகவே இருந்து இன்றைய பொதுக்குழு" – வைத்திலிங்கம்

இன்று நடைபெற்ற பொதுக்குழு முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், “அதிமுக அவைத்தலைவரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் தேர்வு செய்ய வேண்டும். இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் என்பது முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது. 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என … Read more