மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை : மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அசாம் பறந்தனர் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் – ஆட்சியை தக்க வைப்பாரா உத்தவ் தாக்கரே?

மகாராஷ்ட்ரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் குஜராத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு அவர்கள் அசாமுக்கு சென்றனர். மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், அண்மையில் அங்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் 10 இடங்களில் 5 இடங்களை பாஜக கைப்பற்றியது. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் பலம் இருந்த சூழலில், சுயேச்சைகள், பிற கட்சி எம்எல்ஏக்கள் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் 5-ம் நாளாக விசாரணை

புதுடெல்லி: அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜெஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகிறது. ஏஜெஎல் நிறுவன பங்குகளை யங் இண்டியன் நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆஜரானார். அவரிடம் 30 மணி … Read more

குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு கடந்து வந்த பாதை!

ஜூன் 20 ஆம் தேதி தமது 64 வது பிறந்த நாளைக் கொண்டாடிய திரௌபதிக்கு பாஜக பிறந்த நாள் பரிசு அறிவித்தது. குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டில் முழு நேர அரசியலுக்காக தமது அரசுப் பணியைத் துறந்தவர் திரௌபதி. நிர்வாகத்திறனும் செயல்திறனும் மிக்கவர் என்று பெயர் பெற்றிருந்தார். பாஜகவில் இணைந்த அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக முழுமையான பதவிக்காலம் வகித்தார். ஒடிசாவின் பழங்குடியினத்தவரான … Read more

குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது ஒன்றிய அரசு

டெல்லி : பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது ஒன்றிய அரசு.ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் கொடுக்கறது? திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை

உத்திரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என தகராறு ஏற்பட்டத்தில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தையே நிறுத்திவிட்டு மணமேடையில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள மிர்சாபூரில் தர்மேந்திரா என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக ஃபரூக்காபாத்தில் இருந்து உள்ள மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியங்களை அழைத்து வந்துள்ளார் தர்மேந்திரா. திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகன் தரப்பிடம் இசைக்குழுவினர் பணம் கேட்டனர். ஆனால் மணமகள் … Read more

உத்தர பிரதேசத்தில் புல்டோசருடன் கொடி அணிவகுப்பு நடத்திய அலிகார் போலீஸார்

அலிகார்: உத்தர பிரதேசம் அலிகாரில் நடைபெற்ற போலீசாரின் கொடி அணிவகுப்பில் புல்டோசர்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் சமூக விரோதிகள், கிரிமினல் குற்றவாளிகள், கலவரங்களில் ஈடுபடுவோர்கள் சட்டவிரோதமாக கட்டிய வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளப்படுகின்றன. இந்நிலையில், அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலிகாரில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸ் போஸ்ட் மற்றும் வாகனங்கள் எரிக்கப்பட்டன. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் சமூக விரோதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் பதற்றமான … Read more

கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15 பேர் மீட்பு

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக காப்பாற்றினர். எம் வி பிரின்ஸ் என்ற சரக்கு கப்பல் சரக்கு கண்டெய்னர்களுடன் மலேசியா நாட்டில் இருந்து எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென கடலில் ஏற்பட்ட ராட்சத சூறாவளி புயல் காரணமாக அந்த கப்பல் மங்களூர் துறைமுகம் நோக்கி வந்த போது சுமார் ஒரு கடல்மைல் தொலைவில் தரை தட்டி நின்றது. தகவல் அறிந்தஇந்திய … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் 5ம் நாளாக அமலாக்கத் துறை விசாரணை: காங்கிரஸ் போராட்டம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் நேற்றும் 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் … Read more

அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டம் – போலீசார் மீது எச்சில் துப்பிய மகிளா காங்கிரஸ் தலைவர்

ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மகிளா காங்கிரஸ் தலைவர் போலீசார் மீது எச்சில் துப்பியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்பேரில், ராகுல் காந்தி கடந்த 13ந்தேதி முதன்முறையாக அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்காக ஆஜரானார். இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி … Read more