இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடு – சீனாவை முந்தியது அமெரிக்கா!

இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரியவந்துள்ளது. 2020-21 இல் 51.62 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 2021-22ல் 76.11 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதிகள் 2020-21 இல் $29 பில்லியனாக இருந்த நிலையில் $43.31 பில்லியனாக உயர்ந்துள்ளது. … Read more

ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி போல் வேறெந்தக் கட்சியும் செயல்படுமா..? – அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

பஞ்சாப் ஆம் ஆத்மி அமைச்சரின் ஊழலை ஊடகங்களும், எதிர்க்கட்சியும் அறியாத போதும் அவரைப் பதவியில் இருந்து நீக்கியதாக ஆம் ஆத்மிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரசின் திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்களிடம் ஒரு விழுக்காடு கமிசன் கேட்ட விஜய் சிங்லா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரியானாவின் குருசேத்திரத்தில் ஆம் ஆத்மிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இதைச் சுட்டிக்காட்டி, வேறெந்தக் கட்சியும் இவ்வாறு செய்யுமா? என வினவினார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் 7 ஆண்டுகளாகத் … Read more

பிரபல பஞ்சாபி பாடகர் சுட்டுக் கொலை – பாதுகாப்பை விலக்கிய மறுநாளில் நடந்த பயங்கரம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பிரபல பாடகராக இருந்து வருபவர் சித்து மூஸ்வாலா. காங்கிரஸ் கட்சியில் கடந்த டிசம்பர் மாதம் இணைந்தார். இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சித்து மூஸ்வாலா மர்ம கும்பலால் சுடப்பட்டார். இதில் அவரும், அவருடன் இருந்த 3பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் சித்து மூஸ்வாலா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பட்டப் பகலில் பிரபல பாடகர் … Read more

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாக். ட்ரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்

ஜம்மு: இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோனை கதுவா மாவட்ட பகுதியில் இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தல்லி ஹரியா சக் எல்லையில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) இன்று காலை பறந்து சென்றது. இப்பகுதியானது இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த இந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் … Read more

'வீட்டுக்கு சென்று சமையுங்கள் சுப்ரியா சூலே' – கருத்துக்கு மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்

தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே ‘வீட்டுக்குச் சென்று சமைக்கட்டும்’ எனக் கூறிய மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்புக் கேட்டுள்ளதாக அம்மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர் தெரிவித்தார். ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக நடத்திய போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே குறித்து பேசிய மகாராஷ்ட்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், “அரசியலில் ஏன் நீங்கள் இருக்கிறீர்கள், வீட்டுக்குப் போய் சமையல் செய்யுங்கள். டெல்லி செல்லுங்கள் அல்லது கல்லறைக்குச் செல்லுங்கள், … Read more

பஞ்சாபில் 424 விஐபிக்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ.க்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக விஐபிக்கள் 424 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. பலருக்கு பாதுகாப்பு முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக 2 சீக்கிய மத அமைப்புகளின் தலைவர்கள், தேராக்களின் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏ.க்கள், … Read more

குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டே தூய்மை பணி செய்யும் பெண்..!

ஒடிசாவில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தனது பெண் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு சாலைகளில் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார். மயூர்பஞ்சு மாவட்டத்தை சேர்ந்த லக்ஷ்மி என்ற பெண் பரிபாடா நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தனியாக வசித்து வருவதால் தனது குழந்தையை வைத்துக்கொண்டே பணி செய்வதாக கூறும் அவர், இது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.  Source link

நாடு திரும்பினார் சத்குரு: குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளித்த இந்திய கடற்படை

மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஐரோப்பாவில் எலும்பு வரை ஊடுருவும் குளிரிலும், அரேபிய பாலைவனங்களில் சுட்டெரிக்கும் வெயிலிலும் 67 நாட்களில் 26 நாடுகளில் பைக்கில் பயணித்த சத்குரு, வெற்றிகரமாக இன்று (மே 29) பாரத மண்ணில் காலடி எடுத்து வைத்தார். குஜராத்தில் உள்ள ஜாம்நகர் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் இசை குழுவினர் சத்குருவிற்கு மேள தாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ஜாம்நகர் அரச குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் தரைப்படை, கடற்படை மற்றும் … Read more

தேரில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாப பலி: 8 பேர் படுகாயம்

திருமலை: விழா முடிந்து தேரை ஷெட்டில் நிறுத்துவதற்காக இழுத்து சென்றபோது உயரழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நல்ெகாண்டா மாவட்டம் கேதேபள்ளியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கென கடந்த ஆண்டு இரும்பால் ஆன புதிய தேர் உருவாக்கப்பட்டது.கடந்த மாதம் நடந்த ராமநவமியின்போது இந்த தேரில் சுவாமி வீதி உலா நடந்தது. அதன்பின்னர் கோயில் அருகே தேரை நிறுத்தியிருந்தினர். … Read more