1400 -க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: 1400 -க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடதீர்கள் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்தார். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடங்களை விரைவில் ஒதுக்கவில்லை என்றால் நீதிமன்றமே அதை செய்ய நேரிடும் என எச்சரித்துள்ளார்.

’நோட்டீஸ் வந்தால் பதிலளிக்கிறோம்’ – மேகதாது விவகாரத்தில் பசவராஜ் பொம்மை பேச்சு!

மேகதாது விவகாரத்தை விவாதிப்பது என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். எதிர்வரும் 17ம் தேதி நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என ஆணையத்திற்கு கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதற்கு ஆணையமும் அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை … Read more

புலம்பெயர் வாக்காளர்களுக்கு தொலைதூர வாக்குப் பதிவு வசதி: சென்னை ஐஐடியுடன் ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: புலம்பெயர் வாக்காளர்கள் நாடு முழுவதும் அதிகளவில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் இவர்கள் அனைவராலும் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது. இதுவும் வாக்குப்பதிவு சதவீதம் குறைய ஒரு காரணம். இவர்களுக்கு தொலைதூர வாக்குப்பதிவு வசதியை அறிமுகம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கெனவே திட்டமிட்டது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலத்தின் தொலைதூர மலைக் கிராமங்களான துமக் மற்றும் கல்கோத் ஆகிய பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை … Read more

விமான பயணிகளுக்கு பறந்த உத்தரவு – இனிமே இது கட்டாயம்!

முகக்கவசம் அணியவில்லை என்றால் விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர், சமீபத்தில் விமான பயணம் மேற்கொண்ட போது விமானத்தில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற புகார் எழுப்பினார். இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய … Read more

ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா சொந்த ஊர் வந்தார்.. வெள்ளி விமானம் பரிசளித்து பார்வையாளர்கள் கரவொலி..!

சொந்த ஊரான ரோஹடக்கிற்கு திரும்பி வந்த பெண் போர் விமானியான அபிலாஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்மக்கள் அவருக்கு வெள்ளியால் செய்த விமானத்தைப் பரிசாக வழங்கினர். அபிலாஷாவுக்கு பெற்றோர் முன்னிலையில் ஊர்மக்கள் பலத்த கரவொலிகளுடன் வரவேற்பு அளித்தனர். ஹரியானாவைச் சேர்ந்த 26 வயதான அபிலாஷா பராக் இந்திய இராணுவத்தின் முதல் பெண் போர் விமானியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அபிலாஷா இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானியாக … Read more

டெல்லியில் 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் மோடி

டெல்லி: டெல்லியில் 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரை இணைக்கும் வகையில் கண்காட்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

பிஹார் மாநிலத்தில் 191 கி.மீ. தூரம் ரயில் இன்ஜினுக்கு அடியில் பயணம் செய்த மனநோயாளி

பாட்னா: பிஹார் மாநிலத்தில் ஒருவர் ரயில் இன்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ பயணம் செய்துள்ளார். எனினும், அவர் பாதுகாப்பாக பயணம் செய்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பிஹார் மாநிலத்தின் ராஜ்கிர் நகரில் இருந்து வாரணாசிக்கு புத்தபூர்ணிமா சாரநாத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த திங்கட் கிழமை புறப்பட்டது. அந்த ரயில் பிஹார் மாநில தலைநகர் பாட்னா வழியாக அதிகாலை 4.10 மணியளவில் கயா வந்தடைந்தது. ரயிலை நிறுத்திவிட்டு அதன் இன்ஜின் ஓட்டுநர் சவுத்ரி கீழே இறங்கினார். … Read more

13 ஆண்டுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் லாலுபிரசாத் யாதவுக்கு: ரூ6 ஆயிரம் அபராதம்

மெதினி நகர்:  கடந்த 2009ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து ஜார்கண்ட் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2009ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ஜார்கண்ட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்தார். மெதினி நகரில்  உள்ள ஹெலிபேடில் தரையிறங்குவதற்கு பதிலாக விமானி அங்கிருந்த நெல் வயலில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக … Read more

சங்கராச்சாரியார்களின் கோரிக்கையை ஏற்று வாரணாசியில் போராட்டத்தை முடித்த துறவி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக இந்து அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. இந்நிலையில் அந்த சிவலிங்கத்துக்கு அன்றாடம் பூஜை செய்ய அனுமதி கோரி அயோத்தி மடத்தின் அதிபதி சுவாமி அவிமுக்தேஷ் வரானந்த் உண்ணாவிரதம் தொடங்கினார். இதில் உணவு, நீர் அருந்தாமல் வாரணாசியின் கங்கை படித்துறையில் உள்ள வித்யாமடத்தில் அமர்ந்தார். இதனால், அவரது உடல்நிலை மோசமானது. இச்சூழலில் உண்ணாவிரதத்தை முடிக்கக் கோரி நேற்று ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சரஸ்வதி கடிதம் … Read more

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: சீனா விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.கடந்த 2010-2014ம் ஆண்டு ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது. இந்த … Read more