பல்வேறு உதவிகளை மறந்து 16 ஆண்டு நண்பர் சதி திட்டம்: மகாராஷ்டிர மருந்து கடைக்காரர் கொலை வழக்கில் திருப்பம்

மும்பை: மகாராஷ்டிர மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே கொலை வழக்கில், அவரது நெருங்கிய முஸ்லிம் நண்பர் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் உமேஷ் கோல்கே (54), கால்நடை மருந்து கடை நடத்தி வந்தார். இவரை கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு 2 பேர் வழிமறித்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உமேஷின் நெருங்கிய முஸ்லிம் நண்பர் யூசுப் கான் கொலைக்கு … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம .!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை … Read more

எஸ்ஐ நியமன முறைகேடு விவகாரத்தில் கர்நாடகா ஏடிஜிபி கைது: சிஐடி போலீசார் அதிரடி

பெங்களூரு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிஐடி போலீசார் மாநில ஏடிஜிபி அம்ருத் பாலை நேற்று கைது செய்தனர். முறைகேடு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில அரசு 545 போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்வதற்கு முடிவு செய்தது. இப்பணிகளை நிரப்ப கடந்த 2021 அக்டோபரில் தேர்வு நடந்தது. தேர்வு முடிவு வெளியாகும் முன்பே இதில் முறைகேடு … Read more

ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது – நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோரிடம் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைக் கட்டணம் அளிக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். அதை நுகர்வோரின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் ஆர்டர் செய்த உணவுடன் எந்த பெயரிலும் சேவைக் … Read more

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடங்குகிறது. நாட்டின் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் இந்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ம் தேதி … Read more

‘இது ஈ.டி. அரசு’ கோஷம் முதல் அணி மாறிய உத்தவ் ஆதரவாளர் வரை – மகாராஷ்டிர நம்பிக்கை வாக்கெடுப்பு காட்சிகள்

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 99 வாக்குகளும் பதிவாகின. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 39 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த 29-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து பாஜக, … Read more

“பழங்குடியினர் நலனுக்காகக் கடந்த 8 ஆண்டுகளாகப் பாடுபடும் அரசு” – பிரதமர் மோடி

ஆந்திரத்தின் பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு சிலையைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமது அரசு பழங்குடியினர் நலனுக்காகப் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆந்திரத்தில் மலைவாழ் மக்கள், பழங்குடியினருக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக 1922 – 1924 காலக்கட்டத்தில் ரம்பா புரட்சியைத் தலைமையேற்று நடத்தியவர் அல்லூரி சீதாராம ராஜு. அவரின் 125ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆந்திரத்தின் பீமாவரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை … Read more

அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முப்படைகளில் 4 ஆண்டு கால குறுகிய சேவையாக பணியாற்றுவதற்கான அக்னிபாதை ஆட்சேர்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த மாதம் 13ம் தேதி அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ்தான் இனி முப்படைகளுக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. இருப்பினும் அக்னிபாத் திட்டத்தின்படி ஆள் சேர்க்கும் தேதியை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், … Read more

இமாச்சலில் பஸ் கவிழ்ந்து விபத்து – குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

மணாலி: இமாச்சல்பிரதேச மாநிலம் ஷைன்செர்-சைன்ஞ் சாலையில் நேற்று காலை தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. குல்லு அருகேயுள்ள ஜங்க்லா மோர் பகுதிக்கு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் போலீஸாரும், மீட்புப் படையினரும் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்ஸில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகத் தெரிகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக குல்லு போலீஸ் எஸ்.பி. குருதேவ் சர்மா … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாஜக – சிவசேனா கூட்டணி அரசு வெற்றி.!

மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாஜக – சிவசேனா கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரச் சட்டப்பேரவையில் ஓரிடம் காலியாக உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 164 பேரும் எதிராக 99 பேரும் வாக்களித்தனர். நேற்றுவரை உத்தவ் தாக்கரே அணியில் இருந்த இருவர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்தனர். அதேநேரத்தில் காங்கிரசின் பத்து உறுப்பினர்கள் … Read more