குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு – ஏற்பாடுகள் மும்முரம்

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, குடியரசுத் தலைவர் பதவிக்கான தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் … Read more

சுற்றுலா யாத்திரை மூலம் இரண்டு நாடுகளை இணைக்கும் பெருமையை பெற்றது இந்திய ரெயில்வே

சுற்றுலா யாத்திரை மூலம் இரண்டு நாடுகளை இணைக்கும் முதல் ரெயில்வே என்ற பெருமையை இந்திய ரெயில்வே பெறுகிறது. ராமாயணத்துடன் தொடர்புடைய புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலாப்பயணிகள் ஒருசேர கண்டுரசிக்க ராமாயண் யாத்ரா என்ற திட்டத்தை இந்திய ரெயில்வே செயல்படுத்துகிறது. டெல்லியிலிருந்து வருகிற 21 ஆம் தேதி புறப்படும் இந்த ஆன்மீக சுற்றுலா ரயில் உத்தரப்பிரதேசம்,பீகார், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், நேபாளத்தில் உள்ள ராமாயண ஸ்தலங்களையும் ஒருங்கிணைத்து சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கிறது. மொத்தம் … Read more

உ.பி.யில் இஸ்லாமியர்கள் மீது வாலிபர்கள் சரமாரி தாக்குதல்; கட்டையால் மிரட்டும் வீடியோ வைரல்

கோண்டா: உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய ஃபக்கிரிகள் மீது சில இளைஞர்கள், கட்டையால் மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபிகள் நாயகம் தொடர்பாக பாஜ பெண் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவரையும், அவரது கருத்துக்கு ஆதரவாக டெல்லி பாஜவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் பதிவிட்டார். இருவர் மீதும் பாஜ நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பாஜவினரின் மதவெறுப்பு பேச்சுக்கு சர்வதேச அளவில் இஸ்லாமியர்களிடையே கடுமையான கண்டனங்களை பெற்று வருகிறது. இந்த … Read more

சைக்கிளில் கூலாக வலம் வந்த கொரில்லா திடீரென டென்ஷன் ஆனது ஏன்?

மிருகக்காட்சி சாலையில் கொரில்லா ஒன்று சைக்கிளில் ஹாயாக வலம் வந்ததும், பின்னர் கீழே விழுந்த ஆத்திரத்தில் அது செய்த செயலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது முதலாக, உலகத்தில் நடக்கும் பல்வேறு விசித்திர சம்பவங்களை நம்மால் எளிதில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மீன்கள் என பலதரப்பட்ட உயிரினங்களின் புத்திசாலித்தனமான செயல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஒருவேளை இவையாவும் வீடியோவாக பதிவு செய்யப்படாமல் இருந்து, செவிவழி செய்தியாக மட்டுமே … Read more

இந்தியாவிலேயே முதல் முறை… தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து இளம்பெண்..!

குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஷாமா பிந்து, எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். சோஷியாலஜி பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷாமா பிந்து, தன்மீதான சுய காதலால் ஜூன் 11ம் தேதி சோலோகாமி முறையில் தன்னைத் தானே திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார். இந்த திருமணத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், திட்டமிட்டதற்கு 2 நாட்கள் முன்னதாகவே ஷாமா பிந்து, தனக்கு தானே … Read more

பீகாரில் இறந்த மகனின் உடலை வாங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாததால் பெற்றோர் பிச்சை எடுத்த அவலம்

சமஸ்டிபூர் (பீகார்): இறந்த மகனின் உடலை வாங்க அரசு மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாததால், வேதனையடைந்த வயதான தம்பதியினர், லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் பீகாரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். பல இடங்களில் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியாமல் பெற்றோர் தவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சதார் அரசு மருத்துவமனையில் மகனின் … Read more

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கு: தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கில், தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா என்கிற ICAMA பாட்சா. இவரது கூட்டாளிகள் அதே மாவட்டத்தில் உள்ள இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி. இவர்களது கூட்டாளிகள், கோவையைச் சேர்ந்த முகமது ஆஷிக், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த முகமது இர்பான், சென்னை அயனாவரம் ரஹ்மத். கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காரில் வந்த இவர்கள் 5 பேரையும் … Read more

வேளாண் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் காரிப் பருவத்துக்கான விதைப்புப் பணி தொடங்கும்போது, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவது விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அந்த வகையில், நடப்பு 2022-23 காரிப் பருவகாலத்தில் பயிரிடப்படும் 14 வகை வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு … Read more

மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் லக் ஷயா சென்..!

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக் ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் லக் ஷயா சென் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் எதிர்கொண்டார். இதில் அவர் 21-18, 21-15 என்ற நேர் செட்களிலேயே வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். Source link

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் தேசிய பொதுச்செயலாளர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.