காஷ்மீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், நிலைதடுமாறி அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்டு … Read more

பிரதமர் மோடியின் தலைமையால், இந்தியாவை பற்றிய உலகின் பார்வை மாறியுள்ளது- ராஜ்நாத்சிங்

உத்தர கன்னடா: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கடற்படை தளத்திற்கு வருகை தந்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், இந்திய கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது : உலகில் இந்தியா பற்றிய கருத்து மாறி வருகிறது. முன்பு இந்தியாவை சர்வதேச அரங்கில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று உலகம் இந்தியாவின் பேச்சைக் கேட்கிறது. அதற்கு உங்களது பங்களிப்பும், நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையும்தான் காரணம். இது ஒரு சிறிய சாதனை அல்ல, … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,307,450 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.07 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,307,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 530,112,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 500,536,356 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,729  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீட்டுக்கு போய் சமையல் செய்… பாஜ தலைவர் சர்ச்சை பேச்சு

மும்பை: இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மும்பையில் நேற்று முன்தினம் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய பாஜ மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், `சுலே அவர்களே… இன்னும் ஏன் நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள்? வீட்டுக்கு சென்று சமையுங்கள். டெல்லி செல்லுங்கள் அல்லது மயானத்துக்கு செல்லுங்கள். எங்களுக்கு தேவை ஓபிசி இடஒதுக்கீடு’ என பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகி உயுள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அணி … Read more

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி

பாரமுல்லா: ஐம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நஜிபத் பகுதியில் உள்ளூர் போலீசார், பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.  பாதுகாப்பு படையின நடத்திய பதில் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அலி பாய், ஹனீப் பாய் மற்றும் ஷா வாலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த சண்டையில் முதாசிர் அகமது ஷேக் என்ற காவலரும் … Read more

அதானி துறைமுகத்தில் ரூ.500 கோடி கோகைன் பறிமுதல் போதை பொருட்கள் கடத்தல் தலைநகராக மாறும் குஜராத்: வெளிநாட்டில் இருந்து வந்த கன்டெய்னர்களில் பதுக்கல்

புஜ்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தபிறகு, சர்வதேச சந்தைகளில் அதிக விலை மதிப்புமிக்க போதை பொருட்களின் கடத்தல் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, போதை பொருட்கள் கடத்தலின் தலைநகரமாக குஜராத்தும் மாறி வருகிறது. கடந்தாண்டு செப்டம்பரில் முந்த்ரா துறைமுகத்திற்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட  3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி. இந்தியாவில் இதற்கு முன் இந்தளவுக்கு பெரியளவில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது கிடையாது. ஒன்றியத்தில் பாஜ … Read more

ஆட்டோவில் சென்ற நடிகையை அவமதித்த இன்ஸ்பெக்டர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் ‘நீலத்தாமரை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ச்சனா கவி. பிறகு சால்ட் அன்ட் பெப்பர், பெஸ்ட் ஆப் லக், ஸ்பானிஷ் மசாலா, நாடோடி மன்னன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவான், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இரவில் தன்னுடைய தோழிகளுடன் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஆட்டோவை மறித்த மட்டஞ்சேரி … Read more

டெல்லி ஸ்டேடியத்தில் வீரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் சென்ற ஐஏஎஸ் தம்பதி இடமாற்றம்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: டெல்லி தியாகராஜா ஸ்டேடியத்தில் வீரரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் செல்ல ஐஏஎஸ் அதிகாரி தம்பதி அதிரடியாக ஒன்றிய அரசு இடமாற்றம் செய்துள்ளது. டெல்லியில் விளையாட்டு வீரா்கள், குறிப்பாக தடகள வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு தியாகராஜா மைதானம் உள்ளது. இங்கு வீரர்கள் இரவு 8.30 மணி வரையும் பயிற்சி மேற்கொள்வார்கள். இந்த சூழலில் டெல்லி அரசின் வருவாய்துறை முதன்மை செயலாளர் சஞ்சீவ் கிர்வார் மற்றும்  அவருடைய மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரிங்கு துக்கா ஆகியோர் அங்கு நாயுடன் … Read more

'நாடாளுமன்றத்தில் சுயேச்சை குரல் ஒலிக்க வேண்டியது அவசியம்' – காங்கிரஸில் இருந்து விலகினார் கபில் சிபல்

லக்னோ: காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் (73) அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். மேலும் சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (2004 – 2014) பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். 2016-ம் ஆண்டு முதல் உ.பி. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவரது பதவிக்காலம் வரும் ஜூலை … Read more

விசாரணையில் ஆளுங்கட்சியினரின் தலையீடா? நடிகை புகாரில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர் விசாரணையும் நடக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘பலாத்கார வழக்கில் முதலில் இருந்த வேகம் தற்போது இல்லை. விசாரணையில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதுதான் இதற்கு காரணம். எனவே, உயர் நீதிமன்றம் தலையிட்டு முறையாக … Read more