'யாரோ விட்டுச்சென்ற அடையாளம்' – விமானத்திற்குள் குட்கா கறையைக் காட்டி ஐஏஎஸ் அதிகாரி ட்வீட்

புதுடெல்லி: விமானத்திற்குள் யாரோ ஒருவர் குட்கா மென்று துப்பிய கறையை பகிர்ந்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரன். அவரது ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பேருந்து தொடங்கி விமானம் வரையில் ஜன்னலோர இருக்கையில் பெரும்பாலான மக்கள் பயணம் செய்ய விரும்புவார்கள். அந்த இருக்கையில் அமர்ந்து பயணிக்க விரும்பாதவர்கள் மிகவும் குறைவு. இருந்தாலும் சமயங்களில் அந்த ஜன்னல் ஒரே இருக்கை சுகாதாரமற்ற முறையில் இருக்கும். எச்சில் துப்புவது, பாக்கு – குட்கா போன்றவற்றை மென்று துப்புவது, பபுள் கம் … Read more

கர்நாடகாவில், இரவு நேர ஹோட்டலில் உணவு கேட்டு வந்தவர்களுக்கு உணவு இல்லை என்று சொன்னதால், கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.!

கர்நாடகாவில், இரவு நேர ஹோட்டலில் உணவு கேட்டு வந்தவர்களுக்கு உணவு இல்லை என்று சொன்னதால், கடைக்கு தீ வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. கொப்பல் அருகே, ஆனேகுந்தி கிராமத்தில் சாலையோர தாபா ஹோட்டல் இயங்கி வருகிறது. நேற்று இரவு 4 பேர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நிலையில், அங்குள்ள ஊழியர்கள் உணவு இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் ஹோட்டல் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டி தீ வைத்து விட்டு சென்றுவிட்டனர். அந்த ஊழியர்கள் ஊர் … Read more

கேரளாவில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

கேரளா: கேரள மாநிலம் செத்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக்  இவரது மனைவி பாத்திமா ஹானான்  இவர் திருமணத்திற்கு பிறகும் தனியார் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் ஹானான் இறைச்சி உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். பிறகு அவரை உடனே அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு தொடர் சிகிச்சையிலிருந்த … Read more

பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் தான்: உச்ச நீதிமன்ற உத்தரவின் 10 முக்கிய அம்சங்கள்

பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் (தொழில் முறை) தான் என்றும், அதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த உத்தரவில், ‘பாலியல் தொழிலும் ஒரு தொழிலே. அதை செய்வோருக்கும் சட்டத்தின் கீழ் சமமான மரியாதையும், பாதுகாப்பும் உண்டு. வயது வந்தோர் இருவர் அல்லது பாலியல் தொழிலாளியுடன் உவந்து உறவில் ஈடுபடுவோர் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச … Read more

வானில் உள்ள குறுகிய தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதனை.!

வானில் உள்ள குறுகிய தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. மேற்கு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்பட்ட காட்சி, சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்; நடிகையின் புகாரில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர் விசாரணையும் நடைபெறுகிறது. இம்மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில நாட்களுக்கு முன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் பலாத்கார வழக்கில் முதலில் இருந்த வேகம் தற்போது இல்லை. விசாரணையில் ஆளுங்கட்சியினர் … Read more

பட்டியாலா சிறையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு க்ளார்க் வேலை ஒதுக்கீடு: சிறப்பு உணவுக்கு அனுமதி

பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து அண்மையில் சிறை சென்றார். அவருக்கு, சிறை நிர்வாகம் க்ளார்க் வேலை ஒதுக்கியுள்ளது. இது குறித்து பட்டியாலா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள், சித்துவின் கைதி எண் 241383. அவர் சிறை எண் 7ல் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு க்ளார்க் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தனது அறையில் இருந்தே வேலைகளை செய்வார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு அறைக்கே கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர். சிறைத் … Read more

ஏரிக்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி: திருமணத்திற்கு சென்றபோது அதிகாலை சோகம்

திருமலை: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ரெட்டிவாரி கிராமத்தை சேர்ந்தவர் கங்கிரெட்டி. இவரது மனைவி மதுலதா. மகள் குஷிதாரெட்டி, மகன் தேவன்ஷ்ரெட்டி. இவர்களது உறவினர் ஒருவரின் திருமணம் இன்று சித்தூர் மாவட்டம் பலமனேரில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கங்கிரெட்டி தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலை காரில் புறப்பட்டார். மதனப்பள்ளி அருகே உள்ள புங்கனூர் சாலை வழியாக வந்தபோது ஏரி மீதுள்ள சிறுபாலத்தை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராமல் கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதனை … Read more

குஜராத்: ஆன்லைன் கேம் விளையாட போனுக்காக மோதல் – ‘தம்பியை கொலை செய்து கிணற்றில் வீசிய 16 வயது சிறுவன்’

அகமதாபாத்: ஆன்லைன் கேம் விளையாடும்போது ஏற்பட்ட மோதலில், சிறுவன் ஒருவன் தனது தம்பியை கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் உள்ள காம்லெஜ் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியது: “இவர்களது குடும்பம் ராஜஸ்தானிலிருந்து வந்துள்ளனர். கடந்த 23-ஆம் தேதி இரு சிறுவர்களும் மாறி மாறி ஒரே போனில் வீடியோ மேம் விளையாடியுள்ளனர். இதில் தனக்கான வாய்ப்பு வரும்போது சிறுவனின் தம்பி போனை வழங்க மறுத்திருக்கிறார். … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த பாம்புகள்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பல்வேறு அறைகள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு பத்மாவதி விசாரணை மையம் அருகே உள்ள பாண்டவா விருந்தினர் மாளிகையில் நாகபாம்பு ஒன்று வந்தது. உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தார். இதேபோன்று ஜி.என்.சி சோதனை சாவடி அருகே உள்ள தேவஸ்தான தோட்டத்துறை நர்சரியில் சாரைப்பாம்பு … Read more