ஹரியாணா எம்எல்ஏ.வை நீக்கியது காங்கிரஸ்

புதுடெல்லி: ஹரியானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாய். மாநிலங்களவை தேர்தலில் இவர், கட்சி மாறி, பாஜக ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்திகேயா சர்மா என்பவருக்கு வாக்களித்தார். இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன் தோல்வியடைந்தார். இதனால் குல்தீப் பிஷ்னாயை, அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். குல்தீப் பிஷ்னாயின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யும்படியும், … Read more

ஒரு கிலோ உடல் எடை குறைத்தால் ரூ.1000 கோடி நிதி: அமைச்சர் சவால்!

மத்திய பிரதேச மாநிலம் மால்வா பகுதியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். அப்போது, உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பாஜக உறுப்பினர் அனில் பிரோஜியா என்பவர் நிதின் கட்கரியிடம் தொகுதி வளர்ச்சிக்கான நிதி வழங்கும்படி கோரியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என … Read more

கோடை வெயில் உஷ்ணத்தை தாங்க முடியாமல் திண்டாடும் விலங்குகள்

கோடை வெயில் உஷ்ணத்தை தாங்க முடியாமல் பஞ்சாபின் ஜிராக்பூரில் உள்ள மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகள் திண்டாடி வருகின்றன. பஞ்சாபில் கடந்த இரண்டு வாரங்களாக 40 டிகிரி செல்சியசுக்கு மேல் கோடை வெப்பம் தகித்து வருகிறது. வெப்பத்தின் உஷ்ணத்தில் இருந்து சிங்கம், புலி, யானை, மான் வகைகள் மற்றும் பறவை இனங்களை காக்க நீரோடை, நீர் காற்றாடி மற்றும் தண்ணீர் தெளிப்பான்களை பூங்கா நிர்வாகத்தினர் பொருத்தி உள்ளனர்.  Source link

காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து ராணுவம் துப்பாக்கிச் சூடு: 10 மணி நேர சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!

புல்வாமா: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற கடும் துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள திராத்கம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இது தரப்பினர் இடையே … Read more

ராஞ்சி கலவரம் – 6 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தும் உயிர் பிழைத்த இளைஞர்!

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஞ்சியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், போலீஸாரால் 6 முறை சுடப்பட்ட இளைஞர் அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்திருக்கிறார். நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் நுபுர் சர்மா, அனில் ஜிண்டால் ஆகியோர் அண்மையில் தெரிவித்த கருத்துகள் மிகவும் சர்ச்சையானது. வளைகுடா இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது. இதனைத் தொடர்ந்து, நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மேற்குறிப்பிட்ட … Read more

சோனியாவுக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் வாங்கியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உட்பட பலர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி கடந்த 2-ம் தேதியும், சோனியா காந்தி கடந்த 8-ம் தேதியும் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் கோரிக்கையை ஏற்று, நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும் அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு செல்வதாக இருந்த ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஃபைசல் … Read more

ஜிவிகே குழுமம் மீது 6 வங்கிகள் வழக்கு

12 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாத ஜிவிகே குழுமத்தின் மீது ஆறு வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன. 2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பரோடா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியன ஜிவிகே குழும நிறுவனங்களுக்கு மொத்தம் 12 ஆயிரத்து 114 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதையடுத்து ஜிவிகே குழுமத்தின் மீது வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன.  … Read more

இந்தியா-வில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது.. 4 பேர் பலி…..ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 8,582 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,32,22,017 ஆக உயர்ந்தது.* புதிதாக 4 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

நூபுர் சர்மா சர்ச்சை கருத்தை கண்டித்து போராட்டங்கள்: போலீஸார் கவச உடையில் செல்ல உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: சர்ச்சை கருத்து தொடர்பாக நடைபெறும் போராட்டங்களின் போது போலீஸார் கவச உடையில் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி பற்றி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் முஸ்லிம்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேற்கு வங்கம் மற்றும் … Read more