ஒடிசாவில் ஆற்றில் கவிழ்ந்த லாரி வெடித்து சிதறி கோர விபத்து: காப்பாற்ற சென்றவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
புபனேஸ்வர்: ஒடிசாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து வெடித்து சிதறியதால் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த மாநிலத்தின் Paradwip பகுதியில் இருந்து நள்ளிரவு 2 மணி அளவில் பெட்ரோல், டீசல் ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் மேகார் பகுதியை நோக்கி சென்றன. இடாமதி என்ற பகுதியில் குசுமி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் மீது சென்று கொண்டிருந்த போது முதலில் சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. … Read more