எல்.ஐ.சி.யின் புதிய “தன் சஞ்சய்” ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம்.!

பாலிசி தாரர்களின் குடும்பங்களுக்கு 22 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை கிடைக்கும் வகையில் ”தன் சஞ்சய்” என்ற புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் இந்த காப்பீடு திட்டத்தில், 3 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து பாலிசி பிரீமியத்தை மொத்தமாகவோ, அல்லது தவணை முறையிலோ செலுத்தலாம் என எல்.ஐ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலிசிதாரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில் குடும்பத்தினருக்கு 3 லட்சத்து … Read more

தேர்தல் பிரசாரத்திற்கு வரமுடியவில்லை; கொரோனா வந்துடுச்சி மன்னிச்சிடுங்க! தனிமைப்படுத்திக் கொண்ட ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், டெல்லியின் ராஜேந்திர நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை. என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்.  ராஜேந்திர நகர் தொகுதி மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். தொகுதி … Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் வீட்டில் சடலமாக மீட்பு.. மகாராஷ்டிராவில் பரபரப்பு

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் அவர்களது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது தொடர்பாக சாங்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீக்‌ஷித் கெடம் கூறுகையில், மும்பையிலிருந்து சுமார் 350 கி.மீ  தொலைவில் உள்ள சாங்கி மாவட்டத்தில், அருகருகே உள்ள இரண்டு வீட்டில் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இறந்தவர்களான மாணிக் மற்றும் போபாட் வான்மோர் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரின் குடும்பங்களும் அருகருகே வசித்து வந்துள்ளனர். மூத்த சகோதரரான மாணிக் கால்நடை மருத்துவராக பணியாற்றியுள்ளார். இவரின் வீட்டில் 6 … Read more

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தந்தை தேர்ச்சி, மகன் தோல்வி

புனே: மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வில், 43 வயது தந்தை தேர்ச்சி பெற்றார். மகன் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில் வசிப்பவர் பாஸ்கர் வாக்மரே (43). இவர் குடும்ப சூழல் காரணமாக 7-ம் வகுப்புக்குப்பின், வேலைக்கு சென்று விட்டார். இவரது மகன்சாகில் சமீபத்தில் 10-ம் வகுப்புபொதுத்தேர்வு எழுதினான். தொடர்ந்து படிக்க வேண்டும் என விரும்பிய பாஸ்கர், 30 ஆண்டுகளுக்குப்பின், தனது மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு … Read more

200 புதிய விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா…

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், 200 புதிய விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அவற்றில் 70 சதவீதம் சிறிய ரக விமானங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிறிய ரக விமானங்களை வாங்குவதற்கு ஏர்பஸ் மற்றும் போயிங்குடன் ஏர் இந்தியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  Source link

பெங்களூருவில் ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரு: பெங்களூருவில் ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெங்களூருவில் மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்து பன்னோக்கு மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

'கர்ப்பிணி பெண்களுக்கு பணி நியமனம் மறுப்பு ஏன்?' – இந்தியன் வங்கிக்கு நோட்டீஸ்

புதிய ஆட்சேர்ப்பு விதிகளை திரும்பப் பெறக் கோரி இந்தியன் வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியன் வங்கி அண்மையில் புதிய பணி நியமனம் பெறுபவர்களின் உடல்நலத் தகுதி குறித்து வெளியிட்டிருந்த வழிகாட்டல்கள் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. அந்த வழிகாட்டுதலில், மருத்துவப் பரிசோதனையின்போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தைக் கடந்திருப்பது தெரியவரும் பட்சத்தில், பிரசவத்துக்கு பிந்தைய ஓய்வுக்காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாகத் தகுதியற்றவர் என்று கருதப்படுவார். பிரசவம் முடிந்து … Read more

அக்னிபாதை: எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்; 500 ரயில்கள் நிறுத்தம்- போராட்டம்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் முழு அடைப்பு போராட்டம் காரணமாக சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ரயில்கள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு சேவையாற்றும் ‘அக்னிபாதை’ திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்குஎதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திட்டத்தைக் கைவிடக் கோரி பிஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ரயில்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் … Read more

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக பாரத் பந்த் – 500 ரயில்கள் ரத்து.. உஷார் நிலையில் போலீஸ்!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, அக்னிபத் என்ற ராணுவத்தில் சேரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு, 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவர். 75 சதவீத இளைஞர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு ஊதியம் … Read more

பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கியதில் எட்டு மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர்.  Source link