வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பு; ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை: திருத்தப்பட்ட சட்ட அறிவிப்பை வெளியிட அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்
டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் உள்ளிட்ட புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான சட்ட திருத்த அறிவிப்பை வெளியிடுமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல, வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. … Read more