நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை உதவி இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரி ராகுல்காந்தியிடம் கேள்விகளை கேட்டு வருகிறார். ராகுல் காந்தி அளிக்கும் பதில்களை மற்றொரு அதிகாரி பதிவு செய்து வருகிறார். ராகுல்காந்தியிடம் 5 அல்லது 6 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது. 

ஆதார் கார்டுடன் இணைக்கப்படுகிறதா வாக்காளர் அட்டை? மீண்டும் பரிந்துரை அனுப்பிவைப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடுவதைத் தடுப்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பதவியேற்றதும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைகளை அனுப்பினார். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றன. அதுகுறித்து அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில், மீண்டும் பரிந்துரைகளை தேர்தல் ஆணையம் … Read more

அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜர்: பேரணியாக சென்ற தலைவர்கள், தொண்டர்கள் தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஏற்கெனவே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், திக்விஜய் சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் … Read more

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு – பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை!

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பொது இடங்களில் பொது மக்கள் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், நான்காவது அலை … Read more

பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 6 பேர் நள்ளிரவில் கைது.!

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரரும், பாலிவுட் நடிகருமான சித்தாந்த் கபூரை போதைப்பொருள் உட்கொண்ட வழக்கில் பெங்களூர் போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நடந்த நடன பார்ட்டியில் சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 6 பேர் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் உட்கொண்டிருந்ததையடுத்து அவர்களை போலீசார் கைதுசெய்தனர். Source link

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அமைச்சர் சத்யேந்திர ஜெயினை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஹவாலா பண மோசடி வழக்கில் அமலாகத்துறையினர் கைது செய்தனர்.   அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் ரூ.2.82 கோடி பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு … Read more

'4 வரி அறிக்கையில் 40 இலக்கண பிழை'- பாட்னா பல்கலை பேராசிரியரை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்ஸ்!

பாட்னா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கை ஒன்று நெட்டிசன்களால் பெரிதளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அந்த சுற்றறிக்கை முழுவதும் இலக்கண பிழையால் நிறைந்து உள்ளதால் மத்திய அரசின் செயலாளராலேயே கண்டிக்கப்பட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தின் அனைத்து முனைவர் பட்ட அறிஞர்களும் தங்கள் வருகையைப் பதிவேட்டில் குறிக்குமாறு கேட்டு கடந்த ஜூன் 10ம் தேதி வேதியியல் துறையால் அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதனை வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் பினா ராணி கையெழுத்திட்டுள்ளார். இந்த … Read more

மாநிலங்களவை குழு, உ.பி. மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவிகளை இழக்கிறது – சமாஜ்வாதிக்கு பெரும் பின்னடைவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கு தேசிய அளவில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை குழு மற்றும் உ.பி.யின் மேலவை எதிர்க்கட்சி ஆகியவற்றின் தலைவர் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகிறது. ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 1992 அக்டோபர் 4-ம் தேதி புதிதாக உ.பி.யில் உருவானது சமாஜ்வாதி கட்சி. இதன்நிறுவனர் முலாயம்சிங் யாதவிற்குபின் அவரது மகன் அகிலேஷ்சிங் யாதவ் தலைவராக உள்ளார். இந்த இருவருமே உ.பி.யின் முன்னாள் முதல்வராக இருந்த கட்சிதேசிய … Read more

National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி ஆஜர்!

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணக்காக, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக, காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது, அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், விசாரணைக்காக ஆஜராகும்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சோனியா காந்தி, … Read more

எதிர்ப்பை அடுத்தே புதுச்சேரிக்குள் வர சொகுசு கப்பலுக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை – தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னையில் இருந்து வந்த சொகுசு கப்பலில் இருக்கும் ஒரு சில அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிப்பதால் புதுச்சேரிக்கு வர மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடற்கரையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் மாநில அரசின் எண்ணம் என்றும் தெரிவித்தார்.  Source link