'4 வரி அறிக்கையில் 40 இலக்கண பிழை'- பாட்னா பல்கலை பேராசிரியரை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்ஸ்!

பாட்னா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கை ஒன்று நெட்டிசன்களால் பெரிதளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அந்த சுற்றறிக்கை முழுவதும் இலக்கண பிழையால் நிறைந்து உள்ளதால் மத்திய அரசின் செயலாளராலேயே கண்டிக்கப்பட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தின் அனைத்து முனைவர் பட்ட அறிஞர்களும் தங்கள் வருகையைப் பதிவேட்டில் குறிக்குமாறு கேட்டு கடந்த ஜூன் 10ம் தேதி வேதியியல் துறையால் அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதனை வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் பினா ராணி கையெழுத்திட்டுள்ளார். இந்த … Read more

மாநிலங்களவை குழு, உ.பி. மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவிகளை இழக்கிறது – சமாஜ்வாதிக்கு பெரும் பின்னடைவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கு தேசிய அளவில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை குழு மற்றும் உ.பி.யின் மேலவை எதிர்க்கட்சி ஆகியவற்றின் தலைவர் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகிறது. ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 1992 அக்டோபர் 4-ம் தேதி புதிதாக உ.பி.யில் உருவானது சமாஜ்வாதி கட்சி. இதன்நிறுவனர் முலாயம்சிங் யாதவிற்குபின் அவரது மகன் அகிலேஷ்சிங் யாதவ் தலைவராக உள்ளார். இந்த இருவருமே உ.பி.யின் முன்னாள் முதல்வராக இருந்த கட்சிதேசிய … Read more

National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி ஆஜர்!

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணக்காக, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக, காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது, அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், விசாரணைக்காக ஆஜராகும்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சோனியா காந்தி, … Read more

எதிர்ப்பை அடுத்தே புதுச்சேரிக்குள் வர சொகுசு கப்பலுக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை – தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னையில் இருந்து வந்த சொகுசு கப்பலில் இருக்கும் ஒரு சில அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிப்பதால் புதுச்சேரிக்கு வர மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடற்கரையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் மாநில அரசின் எண்ணம் என்றும் தெரிவித்தார்.  Source link

நேஷனல் ஹெரால்டு வழக்கு…டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்.பி. ராகுல் காந்தி ஆஜர்.: காங்கிரஸ் கட்சியினர் தர்ணா

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்.பி. ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக என்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகி உள்ள நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு விவரம், ஜவஹர்லால் நேரு உள்பட சுதந்திர போராட்ட … Read more

உறவுக்கார பெண் மரணம்! மனவேதனையில் எரியும் சிதையில் குதித்து உயிரை மாய்த்த இளைஞர்!

மத்தியப் பிரதேசத்தில் உறவுக்கார பெண் அகால மரணமடைந்த வேதனையில், அப்பெண்ணின் எரியும் சிதையில் குதித்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் உள்ள மஜ்கவான் கிராமத்தில் ஜோதி தாகா என்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் ஜூன் 11 அன்று நடைபெற்றது. இடுகாட்டில் ஜோதியின் உடலுக்கு எரியூட்டிய பின், உறவினர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அப்போது அவரது உறவுக்காரரான கரன் … Read more

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்ட திராப்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப் பதாகக் கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படை யினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. கொல்லப் பட்டவர்கள் மூவரும் … Read more

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி பேரணி..!!

டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி பேரணியாக செல்கிறார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக செல்கின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி சற்று நேரத்தில் ஆஜராகிறார்.

முகமது நபி குறித்து அவதூறு கருத்து: பிரதமர் மோடிக்கு சசிதரூர் கேள்வி

புதுடெல்லி: பாஜக செய்தி தொடர்பாளர்கள் நுாபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரும் முகமது நபிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மதச்சார்பற்ற நாடான நமது நாட்டில் இதுபோன்ற பேச்சுகள் தேவையற்றது. நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? இந்த … Read more

ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்திச் சென்ற மர்ம பெண்.!

ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் 3 வயது சிறுமியை மர்ம பெண் கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மிர்சாவலி- ஹூசைன் தம்பதியினருக்கு 3 வயதில் ஷபிதா என்ற மகள் உள்ளார். கடந்த 8ம் தேதி ஷபிதா தாயுடன் ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனார். புகாரின்பேரில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது ஷபிதாவை மர்ம பெண் ஒருவர் அழைத்து செல்லும் காட்சி … Read more