2ஆவது போட்டியிலும் கோட்டைவிட்ட இந்தியா!!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், 4 தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 21 பந்துகளில் 34 … Read more

கொடுங்கையூர் லாக் அப் மரணம் – 5 காவலர்கள் சஸ்பெண்ட்!!

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் லாக் அப் மரணம் என்பது தொடர்கதையாகி வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு சிறை மரணம் குறைவதாக இல்லை. அண்மையில் சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் விசாரணையின் போது உயிரிழந்தார். அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ஒரு உயிரிழந்துள்ளார். விசாரணை கைதி ராஜசேகர் என்பவரிடம் காவல் நிலையத்தில் விசாரணை … Read more

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

ஜன்ஜ்கிர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜன்ஜ்கிர் சம்மா மாவட்டத்தில், மூடப்படாமல் கைவிடப்பட்ட, 80 அடி ஆழ்துளை கிணறு ஒன்றில், ராகுல் என்ற 11 வயது சிறுவன் தவறி விழுந்தான். அவனுக்கு காது கேட்காது, பேசவும் முடியாது. இவனை மீட்கும் பணியில், மாநில பேரிடர் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் குழுவினர் 40 மணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் குஜராத்தில் இருந்து வந்த ரிமோட் கன்ட்ரோல் ரோபோ மீட்பு குழுவும் இணைந்துள்ளது. சிறுவனை மீட்க ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் … Read more

திருமலை ஏழுமலையான் கோவிலில் கனமழை.. சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதி..!

திருப்பதியில் பெய்த பலத்த மழை காரணமாக சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வார விடுமுறை நாள் என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திரண்டனர். இந்த நிலையில், திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காத பக்தர்களும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத பக்தர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். Source link

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் திரண்ட கட்சியினர் கைது.. அமலாக்கத்துறை அலுவலகம் அருகே 144 தடை; போலீஸ் குவிப்பு!!

டெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார். அந்த வேளையில் நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாக டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரக பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி வழங்குமாறு காங்கிரஸ் கோரி இருந்த நிலையில், டெல்லி காவல்துறை பேரணிக்கு அனுமதி … Read more

அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுமதி மறுத்த ஹாஸ்டல் வார்டன்! சிறுவன் தற்கொலை

கர்நாடகாவில் அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டன் அனுமதி மறுத்ததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹோசகோட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பூர்வாஜ், ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். சிறுவனின் தாய்க்கு ஜூன் 11 அன்று பிறந்தநாள் வரவே, வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டனிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். ஆனால் வார்டன் மொபைலை தர மறுத்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் குடும்பத்தினரும் அவரை தொடர்புகொள்ள வார்டனுக்கு கால் … Read more

அதிர்ச்சி! பைக் ரேஸால் பறிபோன பெண்ணின் உயிர்!!

சென்னையை அடுத்த முடிச்சூரை சேர்ந்த விஸ்வா என்பவர்  தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து தாம்பரம் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸ் சென்றுள்ளார். அனைவரும் சாலையில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதியுள்ளனர். இதில் அப்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக … Read more

அடுத்த அலைக்கு ஆயத்தமாகிறதா சீனா!?

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த அலை ஏற்பட உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பீஜிங்கில் தொற்று எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. அதைக் கட்டுப்படுத்த சீன அரசு ஊரடங்கு, உள்ளிட்டக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. இதனால் 2 வாரங்களுக்கு முன்னிருந்து பீஜிங் அரசு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில், பீஜிங்கில்   வணிக சந்தைகள் அதிகம் காணப்படும் சாயோயாங் பகுதியில் … Read more

தினசரி மின் தேவை கூடுதலாக 45,000 மெகாவாட் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மின் தேவை நடப்பு ஆண்டில் உச்சம் தொட்டுள்ளது. தினசரி மின் தேவை கூடுதலாக 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் மெகாவாட் வரையில் அதிகரித்துள்ளது என்று மத்திய மின் துறைஅமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர்கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் மின் தேவையும் அதிகரித்துள்ளது. தவிர, இவ்வாண்டு வட மாநிலங்களில்வெப்ப அலை தீவிரமாக உள்ளது. இதனால் அன்றாட மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஜுன் 9-ல் நாட்டின் மின் தேவை2.10 … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பைத் தொடரலாம் – ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ரஷ்ய தூதரகத்தின் உயர் அதிகாரி ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள், முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் ரஷ்ய பல்கலைக் கழகங்களில் கல்வியை தொடரலாம் என்று தெரிவித்தார். இதனிடையே, இந்திய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், ரஷ்ய பல்கலைக் கழகங்களில் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று ரஷ்ய … Read more