அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுமதி மறுத்த ஹாஸ்டல் வார்டன்! சிறுவன் தற்கொலை

கர்நாடகாவில் அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டன் அனுமதி மறுத்ததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹோசகோட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பூர்வாஜ், ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். சிறுவனின் தாய்க்கு ஜூன் 11 அன்று பிறந்தநாள் வரவே, வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டனிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். ஆனால் வார்டன் மொபைலை தர மறுத்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் குடும்பத்தினரும் அவரை தொடர்புகொள்ள வார்டனுக்கு கால் … Read more

அதிர்ச்சி! பைக் ரேஸால் பறிபோன பெண்ணின் உயிர்!!

சென்னையை அடுத்த முடிச்சூரை சேர்ந்த விஸ்வா என்பவர்  தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து தாம்பரம் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸ் சென்றுள்ளார். அனைவரும் சாலையில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதியுள்ளனர். இதில் அப்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக … Read more

அடுத்த அலைக்கு ஆயத்தமாகிறதா சீனா!?

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த அலை ஏற்பட உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பீஜிங்கில் தொற்று எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. அதைக் கட்டுப்படுத்த சீன அரசு ஊரடங்கு, உள்ளிட்டக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. இதனால் 2 வாரங்களுக்கு முன்னிருந்து பீஜிங் அரசு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில், பீஜிங்கில்   வணிக சந்தைகள் அதிகம் காணப்படும் சாயோயாங் பகுதியில் … Read more

தினசரி மின் தேவை கூடுதலாக 45,000 மெகாவாட் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மின் தேவை நடப்பு ஆண்டில் உச்சம் தொட்டுள்ளது. தினசரி மின் தேவை கூடுதலாக 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் மெகாவாட் வரையில் அதிகரித்துள்ளது என்று மத்திய மின் துறைஅமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர்கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் மின் தேவையும் அதிகரித்துள்ளது. தவிர, இவ்வாண்டு வட மாநிலங்களில்வெப்ப அலை தீவிரமாக உள்ளது. இதனால் அன்றாட மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஜுன் 9-ல் நாட்டின் மின் தேவை2.10 … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பைத் தொடரலாம் – ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ரஷ்ய தூதரகத்தின் உயர் அதிகாரி ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள், முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் ரஷ்ய பல்கலைக் கழகங்களில் கல்வியை தொடரலாம் என்று தெரிவித்தார். இதனிடையே, இந்திய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், ரஷ்ய பல்கலைக் கழகங்களில் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று ரஷ்ய … Read more

நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக ரகசிய வாக்குமூலத்தில் கூறிய விவரங்களை வெளியிடுவேன்: தங்கம் கடத்தல் சொப்னா எச்சரிக்கை

திருவனந்தபுரம்:   நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக நான் ரகசிய வாக்குமூலத்தில் கூறிய அனைத்து விவரங்களையும் விரைவில் வெளியிடுவேன் என்று சொப்னா கூறினார். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சொப்னா அளித்த ரகசிய வாக்குமூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பினராய்  விஜயன் பதவி விலகக் கோரி கடந்த 5 நாட்களாக கேரளா முழுவதும் காங்கிரஸ், பாஜ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சொப்னா … Read more

“உங்களுக்கு உங்கள் மதம்! எனக்கு என் மதம்!”- அரசு, தனியார் இணையதளங்களை முடக்கிய ஹேக்கர்கள்

இந்தியாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். நபிகள் நாயகம் பற்றி பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம், தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை அமைப்பு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், நாக்பூரிலுள்ள அறிவியல் கல்வி நிறுவனம், டெல்லி பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட பல அமைப்புகளின் இணையதளங்கள் கடந்த சில நாட்களில் முடக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் … Read more

முடிவுக்கு வருகிறதா பாஸ்டேக்? – சுங்கச்சாவடிகளில் விரைவில் புதிய வசூல் முறை அறிமுகம்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் புதிய வசூல்முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி, சுங்கச்சாவடியைக் கடந்துசெல்லும் ஒரு வாகனம்,அந்த நெடுஞ்சாலையில் முழுமையாக பயணிக்காவிட்டாலும் அந்தச் சாலைக்குரிய முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதாக உள்ளது. இந்த நடைமுறைக்கு மாற்றாக, ஒரு வாகனம் நெடுஞ்சாலையில், எவ்வளவு தொலைவு பயணித்திருக்கிறதோ அதற்கற்றே வகையில் கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. வாகனம் சுங்கச்சாவடியுள்ள நெடுஞ்சாலையில் நுழைந்ததும் வாகனத்தில் பொருத்தப்பட் டிருக்கும் ஜிபிஎஸ், அந்த வாகனம்நெடுஞ்சாலையில் பயணிக்கும்தொலைவை … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று விசாரணை..!

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராக உள்ளார். கடந்த 2ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில் இன்று அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார். இதனிடையே அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.   Source link

ரூ.1.5 லட்சம் கோடி செலவில் 96 நவீன போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்: இந்திய நிறுவனங்களுக்கு ஜாக்பாட்

புதுடெல்லி: வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.1.5 லட்சம் கோடி செலவில் 96 நவீன போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், இந்திய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் எல்லை மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா தனது விமானப்படையை மேலும் பலப்படுத்த உறுதிபூண்டுள்ளது. இதற்காக, புதிதாக மேலும் 114 விமானங்கள் விமானப்படைக்கு வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், செலவை குறைப்பதற்காக 96 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மொத்த … Read more