ஆண்கள் கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன்: பெண்களின் பாராட்டை பெற்ற பெங்களூரு ஏர்போர்ட் நிர்வாகம்

பாலின சமத்துவத்தை வளர்க்கும் வகையில் சமூகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவும் குழந்தைகள் வளர்ப்பதில் தாய் தந்தை என இருவரது பங்கும் பொறுப்பும் இருத்தல் வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாக கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ஆண்களுக்கான கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன் என்ற புது வசதியை விமான நிலைய நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் தாய்மார்கள் மட்டுமல்லாமல் தற்போது தந்தைகளும் குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடும் வகையில் பெங்களூரு … Read more

உத்தராகண்டில் 2 ஆண்டுக்கு பிறகு ஜூலை 14-ல் கன்வார் யாத்திரை

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக … Read more

உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றி எரிந்த ஆட்டோ.. டிரைவர் உட்பட 8 பேர் உடல்கருகி உயிரிழப்பு

சத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 11 பேர் பயணித்த ஆட்டோ தீப்பற்றியது ஆட்டோ மேல் வைத்துக் கொண்டு செல்லப்பட்ட இரும்புக் கம்பி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ தீப்பற்றி எரிந்தது தீ விபத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் உட்பட 8 பேர் உடல்கருகி உயிரிழப்பு – 3 பேருக்கு சிகிச்சை உயிரிழந்தவர்கள் முட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என போலீசார் தகவல் Source link

மகாராஷ்டிராவில் இன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ரத்து

மும்பை : மகாராஷ்டிராவில் இன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநரின் உத்தரவால் ரத்து செய்யப்பட்டது. முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக மாநில சட்டப்பேரவை செயலாளர் ராஜேந்திர பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆட்டோ மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பம்… 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு

ஆட்டோ மீது மின் கம்பம் விழுந்து தீப்பிடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி அருகே ஆட்டோ ஒன்றின் மீது, உயர் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இதில் அந்த ஆட்டோ முழுக்க தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் ஆட்டோவின் உள்ளிருந்த 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே எரிந்துள்ளனர். அவர்கள் தாடிமரி மண்டலம் குண்டம்பள்ளியில் வசிப்பவர்கள் என முதற்கட்ட தகவலில் அடையாளம் காணப்பட்டுள்ளது. விவசாய பணிக்காக அவர்கள் … Read more

கோ-லொக்கேஷன் வழக்கு | என்எஸ்இ-க்கு ரூ.7 கோடி; சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.5 கோடி அபராதம் – ‘செபி’ நடவடிக்கை

புதுடெல்லி: பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (என்எஸ்இ), கோ-லொக்கேஷன் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது, என்எஸ்இ சர்வருடன் புரோக்கிங் நிறுவனங்களின் சர்வர்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இந்தக் கட்டமைப்பை முறைகேடாக பயன்படுத்தி சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பங்குச் சந்தை தொடர்பான விவரங்களை முன்னதாக வழங்கியதாக 2015-ம் ஆண்டு என்எஸ்இ மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து என்எஸ்இ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக 18 … Read more

2 நாட்கள் கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை… வெளியான வீடியோ

கொச்சி அருகே கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து 2 நாட்கள் நீரில் தத்தளித்த ஐந்து மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர். மீனவர்கள் சென்ற படகு கடல் சீற்றத்தில் சிக்கி நீரில் மூழ்கியது. அந்தவழியாக சென்ற வணிகக் கப்பல் இரு நாட்களாக கடலில் தத்தளித்த 5 மீனவர்களை மீட்டது. தகவல் அறிந்து கடலோர காவல்படை படகு வந்த நிலையில், கடல் சீற்றத்தால் மீனவர்களை பரிமாற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வணிகக் கப்பலில் இருந்து மீனவர்கள் … Read more

டெல்லியில் 'தொழில் முனைவு இந்தியா' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!!

டெல்லி : டெல்லி, விஞ்ஞான் பவனில் ‘தொழில் முனைவு இந்தியா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சார்ந்த திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.  

ஒற்றைக்காலுடன் 2 கி.மீ-க்கு குதித்தபடியே தினமும் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவி

பீகாரில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், ஒற்றைக்காலிலேயே 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு சென்று பயின்று வருகிறார். இவர் தற்போது அரசு உதவி கோரியுள்ளார். சிவான் பகுதியைச் சேர்ந்த மாணவி பிரியன்சு குமாரிக்கு பிறவியிலேயே இடது காலில் குறை இருந்தது. பெற்றோரின் ஊக்கத்தால், ஒற்றைக்காலிலேயே துள்ளித்துள்ளி குதித்தபடியே நடக்கப் பழகி உள்ளார் இவர். 11 வயதான பிரியன்சு குமாரிக்கு, மருத்துவராகி சேவை புரிவதே லட்சியம் என்கிறார். #WATCH Bihar | Siwan’s Priyanshu Kumari, a … Read more

தீஸ்தா சீதல்வாட்டின் மும்பை வீட்டில் குஜராத் மாநில போலீஸார் சோதனை

மும்பை: சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டின் வீட்டில் குஜராத் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்தனர். அவருடன் முன்னாள் காவல் துறை அதிகாரி ஸ்ரீகுமாரும் கைது செய்யப்பட்டார். தீஸ்தா சீதல்வாட்டின் கைதுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் … Read more