பீகாரில் பலத்த மழை – மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு.!

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பாட்னாவிலும், சீதாமாரி, மாதேபுரா, கிஷன்கஞ்ச் மாவட்டங்களிலும் கடும் மழைபெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. இதே போல் சட்டிஸ்கரிலும் 3 பேர் மின்னல் தாக்கி பலியாகினர்.   Source link

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்

பெங்களூரு : ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட். விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது.DSEO என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – விசாரணையில் அம்பலம்

ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும், பாகிஸ்தானில் இயங்கும் தவாத் – இ – இஸ்லாமி பயங்கரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் நகரில் தையல் கடை நடத்தி வந்தவரான கன்னையா லால் என்பவரை நேற்று முன்தினம் இரண்டு பேர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அந்த வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பெரும் … Read more

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (30-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை மாவட்டம்: சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : கோகுலம் காலனி, ராதிகா அவன்யூ, நியூ தில்லை நகர், eb காலனி, காந்திநகர், செல்வவிநாயகர் நகர், கண்ணதாசன் வீதி, விவேகானந்தர் வீதி, சங்கிலி கோனார் தோட்டம், சுண்ட பாளையம், சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : கோகுலம் காலனி, ராதிகா அவன்யூ, நியூ தில்லை நகர், eb காலனி, காந்திநகர், … Read more

இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் விடுமுறை

கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பட்டியலினத்தை சேர்ந்த முருகேசன் உள்பட 7 பேர் படுகொலை மதுரை மாவட்டம் மேலூா் மேலவளவு கிராமத்தில் படுகொலை செய்ப்பட்டனர். அவர்கள் புதைக்கப்பட்ட பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் விடுதலைக்களம் என்ற நினைவு மண்டபத்தையும், ஊராட்சித் தலைவா் முருகேசன் அரை வடிவ உருவச்சிலையையும் நிறுவி இருக்கின்றனர். இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்துவது வழக்கம். அதன்படி … Read more

மறைந்த தந்தையின் மெழுகுச் சிலையை தங்கைக்கு பரிசாக வழங்கிய அண்ணன்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவுல சுப்ரமணியம். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ஃபனி குமார் என்ற மகனும் சாய் வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு சுப்ரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மரணம் குடும்பத்தினரை மிகவும் பாதித்தது. இந்நிலையில் சாய் வைஷ்ணவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் மறைந்த தனது தந்தையின் மெழுகுச் சிலையை தங்கைக்கு திருமணப் … Read more

இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை தொடக்கம்

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் பனிலிங்க தரிசனம் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதால் இன்று அதிகாலை 4 ஆயிரத்து 890 பக்தர்களின் முதல் குழு புறப்பட்டுச் சென்றது. பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக 43 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி யாத்திரை முடிவுக்கு வரும்.பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் பக்தர்களுக்கு … Read more

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதிரடி முடிவு பேக்கிங் கோதுமை மாவு, அப்பளம், தயிர், தேன், மோர், லஸ்சிக்கு 5% வரி

* கத்தி, பிளேடு, ஷார்ப்பனர், காசோலையும் தப்பவில்லை* ஓட்டல், மருத்துவமனை அறைகளுக்கான சலுகை ரத்துசண்டிகார்: பேக்கிங் செய்யப்படாத பிராண்ட் அல்லாத உணவு பொருட்களுக்கு இருந்த வரி விலக்கை திரும்பப் பெற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காசோலை, அஞ்சலக சேவைகள், மருத்துவமனை அறை வாடகைக்கும் வரி விதிக்கப்படும். ஆயிரம் ரூபாய்க்கு கீழுள்ள ஓட்டல் அறை வாடகைக்கு வரி விதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகாரில் நேற்று முன்தினம் தொடங்கியது. … Read more

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே!!

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே அரசு இன்று பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதி உத்தரவுக்கு … Read more

கொரோனா பரவல் – மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, நேற்று 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,33,345 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 11,574 பேர் குணமடைந்தனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,08,666 ஆக … Read more