'சிவசேனா தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை' – உத்தவ் தாக்கரே உருக்கமான பேச்சு

மும்பை: “எதிர்பாராத விதமாக அதிகாரத்துக்கு வந்தவன் நான். அதே பாணியில் இப்போதும் வெளியேறவும் செய்கிறேன்” என மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியாகும் முன்பாக, மகாராஷ்டிரா முதல்வர் மாநில மக்களுக்கு சமூக வலைதளம் உரையாற்றினார். தனது உரையில், “இந்த தருணத்தில், என்னை ஆதரித்த என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சகாக்களுக்கு எனது நன்றியை … Read more

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே..

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு அதிருப்தி எம்.எல்.ஏ.கள் என்ன விரும்பினார்களோ அதனை கொடுத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தகவல் அடுத்து அமைய இருக்கும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த சோனியா காந்தி, சரத் பவாருக்கு நன்றி – உத்தவ் தாக்கரே Source link

எல்இடி விளக்குகளுக்கு ஜிஎஸ்டி வரி 12-ல் இருந்து 18% ஆக உயர்வு: நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: எல்இடி விளக்குகளுக்கு ஜிஎஸ்டி வரி 12-ல் இருந்து 18% ஆக உயர்வு என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. சூரிய சக்தியில் தண்ணீர் சுட வைக்கும் இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%லிருந்து 12%ஆக உயர்வு எனவும், கிரைண்டர், அரசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%லிருந்து 18%ஆக உயர்வு எனவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகள் மீதான ஜிஎஸ்டி வரி 12%லிருந்து 18%ஆக உயர்வு  நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 11 ஆயிரத்து 793-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து … Read more

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் – ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்கு சிவசேனா கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்களின் அதிருப்தி காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி வியாழன் அன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதமானது என அதனை எதிர்த்து சிவசேனா … Read more

மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

மகாராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவையில் நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா உறுப்பினர்கள் 39 பேர் தெரிவித்தனர். இதையடுத்து ஜூன் 30ஆம் நாள் சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்குக் கோரிப் பெரும்பான்மையை மெய்ப்பிக்கும்படி உத்தவ் தாக்கரேக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து … Read more

காத்மாண்டில் பானிபூரிக்கு தடை

காத்மாண்டு: நொறுக்கு தீனிகளில் மிக முக்கியமானது பானிபூரி. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் என்பது மிகையாகாது. சமீப காலமாக மாலை வேளைகளில் பானி பூரி கடைகளுக்கு மக்கள் படையெடுப்பது வழக்கமாக உள்ளது. சிறிய தள்ளுவண்டிகளில்கூட பலர் இந்த வியாபாரத்தை செய்கின்றனர். ஆங்காங்கே சிறிய இடங்களில் பானிப்பூரி கடை முளைத்துள்ளதை கண்கூடாக பார்ப்பதுண்டு.இந்நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பானிபூரி … Read more

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா!

நாளை காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.   மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் இன்று இரவு 9 மணிக்கு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே அரசு நாளை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் … Read more

100வது நாளை எட்டும் உ.பி. அரசு இலக்குகளை அடைய அமைச்சர்களுக்கு யோகி உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாள்களை எட்ட உள்ள நிலையில், இலக்குகளை திட்டமிட்டப்படி அடையுமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பாஜ வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 2வது முறையாக மார் 25ம் தேதி பதவியேற்றது. அதனைத்தொடா்ந்து அனைத்து துறைகளுக்கும் முதல் 100 நாள்கள், 6 … Read more

டிவி, ஏசியை முழுமையாக அணைக்காவிட்டால் ஆண்டுக்கு ரூ.1000 கூடுதல் மின்கட்டணம் கட்ட நேரிடுமா?

டி.வி, ஏ.சியை பயன்படுத்திய பிறகும் முழுமையாக அணைக்காமல் விட்டு விட்டால், ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மின்னணு பொருட்கள் பலவற்றை ரிமோட் மூலம் இயக்கும் நிலையில், பயன்படுத்திய பிறகு அவற்றின் சுவிட்ச்களை பலரும் ஆஃப் செய்யாமல் வைத்திருக்கின்றனர். இதுதொடர்பாக தனியார் அமைப்பு ஆய்வு மேற்கொண்டதில், டிவி, சவுண்ட் சிஸ்டம், ஏசி உள்ளிட்டவைகளை பயன்படுத்திய பிறகு ஸ்விட்ச்கள் ஆனில் வைத்திருந்தால் அவை தொடர்ந்து மின்சாரத்தை இழுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. … Read more