ஆர்.ஜே.டி.யில் இணைந்த ஓவைசி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர்..

பீகாரில் ஓவைசி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இணைந்தனர். மொத்தம் 5 பேர் இருந்த நிலையில், நால்வர் இணைந்துள்ளதாக தேதஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பீகார் சட்டப்பேரவையில் தங்களது கட்சி மிகப்பெரிய கட்சியாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பீகாரில் பாஜக ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. Source link

நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கிறது பக்தர்கள் வருகையால் அமர்நாத் யாத்திரை விழாக்கோலம் பூண்டது பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஜம்மு: நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை, பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்வார்கள். கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரின் நகரில் இருந்து 141 கிமீ தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதி வேண்டும் – சிறையிலுள்ள எம்.பிக்கள் மனுதாக்கல்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சிறையில் இருக்கக்கூடிய நிலையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகிய இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது வழக்கு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளைய தினம் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மாநில ஆளுநர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு கெடு விதித்து இருக்கக்கூடிய நிலையில் … Read more

வெளியானது குரூப்-1 தேர்வு முடிவு.. உள்ளே இருக்கு முழு விவரம்..!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx  வெளியாகியுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி … Read more

வெளியானது குரூப்-1 தேர்வு முடிவு.. உள்ளே இருக்கு முழு விவரம்..!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx  வெளியாகியுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி … Read more

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? – உச்ச நீதிமன்றத்தில் விசாரணை; காரசார வாதம்

புதுடெல்லி: மகாராஷ்டிர ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ், நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்த கட்சியான சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் உத்தவ் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. … Read more

சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

மத்திய அரசின் உத்தரவுகளை வரும் ஜூலை 4ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு பலமுறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  Source link

மருத்துவமனைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற நாய்

சண்டிகர்: உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி, அரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு, அந்த சிசுவுடன் அதன் பாட்டி,   தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு தெருநாய், குழந்தையை கவ்விக்கொண்டு வெளியே சென்றுவிட்டது. அதை யாருமே கவனிக்கவில்லை. இந்நிலையில் கண்விழித்த பாட்டி, குழந்தையைக் காணாமல் பதறி மற்றவர்களை உஷார்படுத்தினார். மருத்துவமனை கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு … Read more

நுபுர் ஷர்மா முதல் கன்னையா லால் வரை.. நிகழ்வுகளின் தொகுப்பு

நாடு தாண்டி அதிகமாக பேசப்பட்ட, இப்போது வரை பேசப்படும் ஒரு பெயர் நுபுர் சர்மா. காரணம் நபிகள் நாயகம் குறித்து இவங்க பேசியதுதான். அண்மையில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அப்போது பெரிதாக கண்டுகொள்ளப்படாத நுபுர் சர்மாவின் பேச்சு, altnews எனப்படும் fake news-களை கண்டுபிடிக்கும் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜூபையர் பகிர்ந்த பிறகுதான் வைரலானது. இஸ்லாமிய நாடுகள் வரையும் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக … Read more

குதிரைப் பந்தயத்துக்கு கூடுதல் வரியா? அறிக்கை அளிக்க உத்தரவு

ஆன்லைன் விளையாட்டுகள் மீதான வரியை மாற்றியமைப்பது குறித்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் இரு நாட்கள் நடைபெற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், சில மாநிலங்கள் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன என்றார்.  Source link