ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு
டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேஷனல் ஹெராய்டு பத்திரிகை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேஷனல் ஹெராய்டு பத்திரிகை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்தது.
ஹைதராபாத்தில் திடீரென 500 ரூபாய் தாள்களை தெருவில் வீசிய நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள தெரு ஒன்றில் திடீரென ஒரு இளைஞர் 500 ரூபாய் தாள்களை கொத்தாக வீசியெறிந்துவிட்டுச் சென்றார். இதனைக்கண்ட சிலர் சிதறிக் கிடந்த பணத் தாள்களைப் பொறுக்கினர். சிலர் அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். WATCH | Man tosses 500 rupee notes on Hyderabad streets; cops begin probe.#Hyderabad #ViralVideo pic.twitter.com/cgItEKUK7T … Read more
மே மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 49 இலட்சத்து 80 ஆயிரம் பீப்பாய் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது. இது 2020 டிசம்பருக்குப் பின் உள்ளதிலேயே மிக அதிகமாகும். முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட 19 விழுக்காடு அதிகமாகும். மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. Source … Read more
டெல்லி: நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறிய காயத்தில் இருந்து 10 நாட்களில் குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேம்பட்ட வசதிகளுடன் மலிவு விலை செயற்கை கால்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இயந்திரவியல் துறை பேராசிரியர் கனகராஜ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இதனை உருவாக்கியுள்ளனர். ஸ்பிரிங் அசிஸ்டட் டீப் ஸ்க்வாட் தொழில்முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கால்கள் முழங்கால் சுழலும் வசதி, இந்திய கழிப்பறையை பயன்படுத்தும் வசதி, குறுக்கு கால் போட்டு உட்காருவது என இந்தியர்களின் வாழ்க்கை முறையை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஸ் முன் பாய்ந்து குழந்தை உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீசுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அவனிஷ் சரண் என்ற நபர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரிக்ஷாவில் இருந்து விழுந்த குழந்தையை போக்குவரத்து காவலர் ஒருவர் சரியான நேரத்தில் எப்படி காப்பாற்றினார் என்பதே அந்த வீடியோ. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் 41 க்கும் அதிகமான லைக்குகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது. To his credit, the traffic policeman … Read more
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு (75) கடந்த 2-ம் தேதிகரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப் பட்டது. இந்நிலையில், டெல்லியில்உள்ள கங்கா ராம் மருத்துவமனை யில் நேற்று சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறும்போது, ‘‘தற்போது சோனியா காந்தி ஸ்திரமாக இருக்கிறார். மருத்துவ மனையில் அவரது உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் நலம் விரும்பிகள், கட்சி தொண்டர்கள், … Read more
உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து காவலர் மீட்ட காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் காசிப்பூர் பகுதியில் பரபரப்பான சாலையில், வேகமாக திரும்பிய மின்சார ஆட்டோவில் இருந்து குழந்தை ஒன்று கீழே விழுந்தது. இதைக் கண்ட போக்குவரத்து காவலரான சுந்தர் லால், துரிதமாக செயல்பட்டு எதிரே வந்த பேருந்தை நிறுத்தி அக்குழந்தையை மீட்டார். இது தொடர்பான வீடியோக் காட்சியை சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவனிஷ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த நிலையில், … Read more
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஒரு கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட அதிசய சம்பவம் நடந்துள்ளது. இதை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் பிஜுகுமார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி 20க்கும் மேற்பட்ட கோழிகளை வாங்கி வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி பிஜுகுமாரின் மகளை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து அந்த கோழிக்கு … Read more