வடகிழக்கு மாநிலத்தின் முதல் திருநங்கை மருத்துவரின் சான்றிதழ்களில் பெயர், பாலினத்தை மாற்ற நீதிமன்றம் உத்தரவு

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தைச் சேர்ந்த திருநங்கை மருத்​து​வரின் கல்​விச் சான்​றிதழ்​கள் அனைத்​தி​லும், பெயர் மற்​றும் பாலினத்தை ஒரு மாதத்​துக்​குள் மாற்றி வழங்​கும்​படி சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மணிப்​பூரைச் சேர்ந்​தவர் பியான்சி லாய்​ஷ்​ராம். இவர் வடகிழக்கு மாநிலங்​களைச் சேர்ந்த முதல் திருநங்கை மருத்​து​வர். போபாய் லாய்​ஷ்​ராம் என்ற பெயரில் ஆணாக இருந்​தவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை மூலம் திருநங்​கை​யாகி மாறி அந்த சான்​றிதழ் மூலம் ஆதார் எண், வாக்​காளர் அடை​யாள அட்டை மற்​றும் … Read more

கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

புதுடெல்லி: இந்​தியா – சீனா இடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க இரு நாடு​களும் முடி​வெடுத்​துள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்​தியா – சீனா இடையே 539 நேரடி விமானங்​கள் இயக்​கப்​பட்​டன. ஏர் இந்​தி​யா, இண்​டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்​டர்ன் விமானங்​கள் இயக்​கப்​பட்​டன. அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரண​மாக இரு நாடு​களிடையே சர்​வ​தேச விமானப் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்​தி​யா​வின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் … Read more

ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம்

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற விசா​ரணை​யில், ‘ஆளுநர் ஒன்​றும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி’ என்று மத்​திய அரசு தரப்​பில் வாதிடப்பட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலை​வருக்கு கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டது. இதையடுத்​து, குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதிபி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன … Read more

ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத 50,000 ரேஷன் அட்டைதாரர்களின் பெயர்கள் நீக்கம்

ராஞ்சி: ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூமில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாத 50,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களின் பெயர்களை அதிகாரிகள் அதிரடியாக நீக்கியுள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கிழக்கு சிங்பூமில் மொத்தமுள்ள 1,64,237 செயல்படாத ரேஷன் கார்டுகளில், 50,323 பேரின் பெயர்கள் சரிபார்ப்பு இயக்கத்தின்போது நீக்கப்பட்டுள்ளன. 576 அட்டைதாரர்கள் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டாலும், 1,13,338 பேரின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. துணை ஆணையர் கர்ண் சத்யார்த்தியின் உத்தரவின் பேரில், சரிபார்ப்பைத் தொடர்ந்து … Read more

பிரதமர், முதல்வரை நீக்க வகை செய்யும் மசோதா: கடும் அமளிக்கிடையே மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்

புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தாலே, அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். மக்களவையில் நேற்று 130-வது திருத்த அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித் ஷா … Read more

பிரதமர் மோடி முன்னிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21-ம் தேதி அந்த பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் … Read more

டெல்லிவாசிகள் குறைகளைத் தீர்க்க புதிய செயலி: பாஜக அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி மக்களின் பல்வேறு துறைகளின் குறைகளைத் தீர்க்க ’டெல்லி மித்ரா’ எனும் செயலியை செயல்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக அம்மாநில முதல்வர் ரேகா குப்தா அரசு அறிவித்துள்ளார். இதன் மூலம் தலைநகரான டெல்லி மக்கள் பல்வேறு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளைத் திறம்பட நிவர்த்தி செய்ய, ஒற்றைச் சாளர அமைப்பாக இந்த … Read more

10 ஆண்டுகளில் கடத்தலில் பிடிபட்ட தங்கம் எவ்வளவு? – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கடத்தலில் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த தகவலை, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித் துறையின் இணை அமைச்ச பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவையில் எழுந்த ஒரு கேள்விக்கான எழுத்துபூர்வமாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ள்ளார். அதில், ”உலகில் அதிகம் கடத்தப்படும் பொருட்களில் தங்கம் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தங்கம் அதிக அளவில் கடத்தப்படுகிறது. … Read more

“சுதர்சன் ரெட்டி… அரசியலமைப்பை காப்பதில் ஒருமித்த எண்ணம் கொண்டவர்!” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, நாட்டின் அரியலமைப்பின் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருப்பவர். சித்தாந்த ரீதியாக இணையான பார்வையை கொண்டிருப்பவர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி நேற்று (ஆக.19) அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவரை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன … Read more

பிரதமர், முதல்வர்கள் பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? – ஒரு தெளிவுப் பார்வை

ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரோ, ஒரு மாநில முதல்வரோ, ஏன் நாட்டின் பிரதமரோ பதவி பறிப்புக்கு உள்ளாக வழிவகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமையுடன் முடியவிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மூலம் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது மத்திய அரசு. இந்த மசோதாவை மக்களவையில், கடும் அமளி துமளிகளை மீறியும் மத்திய உள்துறை அமைச்சர் … Read more