’ஸ்டைலான அரசியல்வாதி’.. மாடலாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி!

ஆம் ஆத்மி கட்சியை சேர்நத் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் மாடலாக உருவெடுத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் ராகவ் சதா (33), அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மாடலிங் துறையில் ஈர்ப்புக் கொண்ட இவர், அண்மையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில், ஷோஸ் ஸ்டாப்பராக வலம் வந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய அளவிலான பேஷன் ஷோவில், மிகவும் ஸ்டைலான அரசியல்வாதி என்ற … Read more

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

பனாஜி: கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்லில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.  இதையடுத்து கோவா பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரமோத் சாவந்த் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.   ராஜ்பவனில் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த பிரமோத் சாவந்த், அமைச்சரவையில் இடம் பெறுவோர் பட்டியலை ஒப்படைத்தார்.  இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில் சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.  … Read more

ஜனநாயகத்தில் எதிர்கட்சி வலுவாக இருக்க வேண்டும்; காங். பலவீனமாக இருப்பது நல்லதல்ல: ஒன்றிய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி கருத்து

புனே: ஜனநாயகத்தில் எதிர்கட்சி வலுவாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பது நல்லதல்ல என்று ஒன்றிய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, புனேயில் நடைபெற்ற பத்திரிகை விருது விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘தேசிய அரசியல்வாதியான நான், மாநில அரசியலுக்கு (மகாராஷ்டிரா) திரும்புவதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஒரு காலத்தில் தேசிய அரசியலுக்கு செல்ல … Read more

கப்பல் போக்குவரத்து கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு ஏன்? – பாரிவேந்தர் எம்.பி

இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இந்திய கப்பல் போக்குவரத்து கழக பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றால் அதன் விவரம் என்ன, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதா, தனியார் மயமாக்கப்படுவதற்கான காரணம் என்ன, அதனால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் போன்ற கேள்விகளை பாரிவேந்தர் எம்.பி. எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சகம், … Read more

எஸ்எஸ்எல்சி தேர்வு தொடக்கம் – ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை: கர்நாடக அரசு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர மாநில அரசு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்க உள்ளது. இதையடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் உறுதி அவர் மேலும் கூறியதாவது: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் … Read more

பொது வேலைநிறுத்தத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பித்த கேரள அரசு

கொச்சி: மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைத்து விடுத்தன. அதன்படி இன்று போராட்டம் தொடங்கியது. மத்திய தொழிற்சங்கங்களின் இந்த ‘பாரத் பந்த்’ காரணமாக பல மாநிலங்களில் பகுதி வாரியான பாதிப்பு இருந்தது. வங்கி சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. கேரளாவிலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், … Read more

ஒன்றிய அரசைக் கண்டித்து ஸ்டிரைக்; கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

திருவனந்தபுரம்: ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் நடத்தும் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள், ஆட்டோக்கள் உள்பட எந்த வாகனங்களும் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலை நேரத்தை 12 மணிநேரமாக மாற்றக்கூடாது என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இன்று முதல் 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு … Read more

கேரளா: காரில் வந்தவர்களை துரத்தி தாக்க முற்பட்ட ஒற்றை காட்டு யானை

கேரளாவில் திடீரென சாலையில் ஒற்றை யானை நின்றபோதும் வாகனத்தில் இருந்தக் குழந்தைகள் உட்பட அனைவரையும் சுதாரித்து கொண்ட ஓட்டுநர் எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளோடு காரில் சென்று இருக்கிறார். இரவு 10.30 மணி அளவில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் கார் சென்றபோது திடீரென சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று நின்றிருக்கிறது. காரை கண்ட யானை பலமுறை தாக்க முற்பட்டு இருக்கிறது. … Read more

காங்கிரஸ் மீண்டெழ 'விரும்பும்' பாஜக: மாநிலக் கட்சிகளைக் கண்டு அச்சமா?

மும்பை: அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டெழ வேண்டும் என்று பாஜக விருப்பம் தெரிவிப்பது, தேசிய அளவில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரிப்பதைக் கண்டு அக்கட்சி அஞ்சுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. “ஜனநாயகத்திற்கு வலுவான காங்கிரஸ் கட்சி அவசியம். காங்கிரஸ் வலுவிழந்தால் எதிர்கட்சி இடத்தை மாநிலக் கட்சிகள் பிடித்துவிடும்” என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த … Read more

ஹிஜாப் சர்ச்சை விவகாரம்: பெண்கள் மீதான விமர்சனத்தை நிறுத்துங்கள்- உலக அழகி ஹர்னாஸ் சாந்து

மும்பை: இஸ்ரேலில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ் 2021’ போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு 2000-ல் லாரா தத்தா இந்தியாவில் இருந்து தேர்வானார். அதன் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து பஞ்சாபை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இந்தியா திரும்பி இருந்த அவரை கவுரவிக்கும் வகையில் கடந்த 17-ந் தேதி அன்று விழா நடந்தது. அதில் நிருபர் ஒருவர் அவரிடம் ஹிஜாப் பிரச்சினை குறித்து கேள்வி … Read more