ஹிஜாப் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் மேல்முறையீடு

டெல்லி: ஹிஜாப் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கடந்த மார்ச் 18-ம் தேதி கர்நாடக நீதிமன்றத் உத்தரவிட்டது.

முக்கிய மாநாடு: இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்பில் இன்று தொடங்கவிருக்கும் பிம்ஸ்டெக் அமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அவர் உரையாற்ற உள்ளார். இதனை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் பதிவிட்டுள்ளார். அவரை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து பேச உள்ளனர். இதனிடையே, இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்திய வெளியுறவுத்துறை … Read more

‘‘2 நாட்கள் மின்வெட்டை நிறுத்துங்கள்’’ – பொது வேலைநிறுத்தத்தால் மின் பாதிப்பை தடுக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பொது வேலைநிறுத்தத்தின் போது மின்விநியோகத்தில் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மின்சார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர். … Read more

இந்தியாவில் 2-வது நாளாக 1,500-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக 1,500-க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று பாதிப்பு 1,421 ஆக இருந்தது. இந்நிலையில் 2-வது நாளாக 1,500-க்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி பாதிப்பு விகிதம் 0.29 சதவீதம் ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.26 சதவீதம் ஆகவும் பதிவாகி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேருக்கு கொரோனா; 31 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 1,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தினசரி எண்ணிக்கை நேற்றை காட்டிலும் இன்று வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவத்தொடங்கியது தொற்று  முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என  பாதிப்பை ஏற்படுத்தியது. வருகிற ஜூன் மாதம் நான்காம் அலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில் கொரோனா குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை வருகிற 31ஆம் தேதிக்கு பிறகு செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் … Read more

விரைவில் ரத்தாகிறது கொரோனா 'காலர் ட்யூன்'

செல்போன் அழைப்புகளில் வரும் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 2020 ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்த தொற்று முதன்முதலாக நாட்டில் பரவத் துவங்கியபோது, மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வினை வழங்க கொரோனோ தொற்று தொடர்பான தகவல்களைக் கொண்ட அறிவிப்புகள், செல்போன் அழைப்புகளில் காலர் ட்யூன்களாக இடம்பெற்று வந்தன. ஒருவரை எவ்வளவு அவசரமாக தொடர்புகொண்டு பேச வேண்டும் என்று … Read more

இந்திய தயாரிப்புகளுக்கான தேவை அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: இந்திய தயாரிப்புகளுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித் துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார். நேற்று இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர் (30 லட்சம் கோடி ரூபாய்) ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 200 பில்லியன் டாலருக்குள்ளாகவே இருந்தது. தற்போது ஏற்றுமதி … Read more

அமர்நாத் புனித யாத்திரை வருகிற ஜூன் 30-ல் தொடக்கம்

அமர்நாத் புனித யாத்திரை வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை வருகிற ஜூன் 30-ந் தேதி தொடங்குகிறது. ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையில் நடந்த அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.43நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

பொது இடத்தில் நிதிஷ்குமார் கன்னத்தில் அறைந்த வாலிபர்

பாட்னா : பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று தான் குழந்தை பருவத்தில் வசித்த பகுதிக்கு சென்றார். தலைநகர் பாட்னா அருகே உள்ள பக்தியார்பூர்தான் அந்த பகுதி ஆகும். அங்கு தனது பழைய நண்பர்களை சந்தித்து பேசினார். பிறகு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, பின்னால் இருந்து வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், யாரும் எதிர்பாராதவகையில் நிதிஷ்குமார் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சி … Read more

ஒன்றிய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது,!

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடங்கியது. எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளை … Read more