மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும்- யுஜிசி அறிவுரை

புதுடெல்லி: மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும், பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET) மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவித்தது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, இனி இந்த தேர்வு மூலமாகவே, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும்,  … Read more

என்னது மாட்டு இறைச்சி காலியா? ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட இளைஞர் – ஒருவர் பலி

கேரளாவில் ஒரு கடையில் மாட்டு இறைச்சி காலியானதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது மூளமட்டும் பகுதி. இங்கு சாலையோரத்தில் உள்ள ஒரு கையேந்தி பவனுக்கு மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்று இரவு வந்துள்ளனர். மது அருந்தியிருந்த அவர்கள், சாப்பிடுவதற்கு மாட்டு இறைச்சி கேட்டுள்ளனர். ஆனால், கடையில் இருந்த ஊழியர் மாட்டு இறைச்சி காலியாகி விட்டதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் … Read more

திடீரென மதம் பிடித்ததால் புழுதி கிளப்பி ஓடி சுவற்றில் முட்டிய யானை

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கோவில் திருவிழாவிற்காக அழைத்துவரப்பட்ட யானைக்கு மதம் பிடித்ததை அடுத்து, வனத்துறையினர் அதனை மயக்க ஊசி செலுத்தி கட்டுக்குள் கொண்டுவந்தனர். சேர நல்லூரில் உள்ள பார்த்தசாரதி கோவில் திருவிழாவுக்காக மாராடி ஐயப்பன் என்ற யானை அழைத்து வரப்பட்டது. கோவில் வளாகத்தில் நின்ற யானைக்கு திடீரென மதம் பிடித்த நிலையில், அங்கிருந்த பொருட்களை மிதித்து தூக்கி வீசியதுடன், திருவிழாவுக்கு அமைக்கப்பட்ட மேடையையும் சேதப்படுத்தியது. மேலும், கோவிலின் பக்கவாட்டு சுவரையும் அந்த யானை இடித்து தள்ளியதாக … Read more

பலத்த பாதுகாப்பையும் மீறி முதல்வர் நிதிஷ் குமார் மீது திடீர் தாக்குதல் – பிகாரில் பரபரப்பு

பலத்த பாதுகாப்பையும் மீறி பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது சொந்த மக்களவைத் தொகுதிகளாக இருந்த பார்ஹ் மற்றும் நாளந்தாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு வாரகாலத்துக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று தனது சொந்த கிராமமான பக்தியார்பூருக்கு சென்ற நிதீஷ் குமார், அங்கிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரரான ஷீல்பத்ரா யாஜி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். … Read more

பாஜக ஆட்சியில் இந்துக்கள் அல்லாதோருக்கு தேடிவரும் பிரச்சனை!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் அண்மையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கோர்ட் வரை சென்ற பிறகு இந்த பிரச்னை தற்போது அடங்கியுள்ளது. இந்த நிலையில் அங்கு மற்றொரு பிரச்னை தற்போது தலைதூக்கியுள்ளது.இந்துக்கள் அல்லாத வணிகர்கள் வியாபாரம் செய்வதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுதான் அந்த பிரச்னை. முதற்கட்டமாக, உடுப்பி மாவட்டம் கவுப் மாரிகுடி திருவிழாவின்போது, இந்துக்கள் அல்லாத வியாபாரிகளை வணிகம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பேனர்கள் வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஓரிரு … Read more

புனேவில் சாலையில் நின்ற ஓலா மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வைரல்.!

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் சாலையில் நின்ற ஓலா மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், சம்பவம் குறித்து விசாரிப்பதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஓலா நிறுவனம் எஸ் ஒன் மற்றும் எஸ் ஒன் ப்ரோ என இரு ரகத்தில் மின்சார ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்நிலையில் லோஹேகான் நகரில் சாலையில் நின்ற ஓலா எஸ் ஒன் ப்ரோ மின்சார ஸ்கூட்டரில் திடீரென புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. சம்பவம் குறித்த வீடியோ … Read more

கருப்பு கொடி சம்பவத்தில் மோதல்; காங். மாஜி முதல்வருக்கு ஓராண்டு சிறை: இந்தூர் நீதிமன்றம் அதிரடி

இந்தூர்: இந்தூரில் கருப்பு கொடி காட்டிய சம்பவத்தில் ஏற்பட்ட மோதல் வழக்கில், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியன்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கின் கான்வாய்க்கு, பாஜக நிர்வாகி ஜெயந்த் ராவ் என்பவர் கருப்புக் கொடி காட்டிவார். இதனால் கோபமடைந்த திக்விஜய் சிங்குக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பு மீதும் … Read more

நடப்பாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு – யுஜிசி அறிவுறுத்தல்

நடப்பாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் அம்சம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு சில மாநில அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ள போதிலும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை பெருமளவு குறைத்துவிடும் … Read more

கேரளாவில் இரு மோட்டார்சைக்கிள்கள் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 3 பேர் சாலையில் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள்.!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே இரு மோட்டார்சைக்கிள்கள் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில்  3பேர் சாலையில் தூக்கி வீசப்படும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளி அன்று மஞ்சேரியிலிருந்து நோயாளியுடன் அதி வேகத்தில் வந்த ஆம்புலன்ஸ் ஒன்று  பையனாடு பகுதியில் சென்ற போது சாலையை கடக்க முயன்ற ஒரு மோட்டார்சைக்கிள் மீது மோதி அதே வேகத்தில் எதிரே வந்த இன்னொரு மோட்டார்சைக்கிள்  மீதும் மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் சாலையில்  தூக்கி வீசப்பட்டனர். … Read more

காஷ்மீரில் படுகொலைக்கு காரணமானவர்கள் யார்? – எஸ்ஐடி விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு – காஷ்மீரில் இந்துக்கள், சீக்கியர்களுக்கான எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் 1990-களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பயங்கரவாதம் அதிகரித்தது. காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தி வந்த தீவிரவாதிகள், தங்கள் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கொன்று குவித்தனர். இதில் காஷ்மீரை சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அதிக அளவில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகளின் அராஜகத்துக்கு பயந்து ஆயிரக்கணக்கான இந்துக்களும், சீக்கியர்களும் … Read more