திருப்பதியில் 2வது நாளாக அலைமோதும் பக்தர்கள்: அறைகள் கிடைக்காமல் தவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களாக இலவச தரிசன டிக்கெட், ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்டவை தினந்தோறும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வார விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்தபடி உள்ளனர். இதனால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுன்டர்களான அலிபிரி பூதேவி … Read more

அரசு நிறுவனங்களில் இனி 5 நாட்கள் தான் வேலை – மணிப்பூர் அரசு அறிவிப்பு

மணிப்பூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி வாரத்துக்கு 5 நாட்கள் தான் வேலை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநில, முதல்வராக என். பிரென் சிங் மீண்டும் பதவியேற்றுள்ளார். இதனிடையே, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, மணிப்பூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு வாரத்துக்கு 6 நாட்களாக இருந்து வரும் வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கப்படும் என பிரென் சிங் வாக்குறுதி அளித்திருந்தார். … Read more

இந்தியாவில் எரிபொருள், சமையல் எண்ணெய், உரங்கள் விலை கட்டுக்குள் உள்ளது – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

எரிபொருள், சமையல் எண்ணெய், உரங்கள் ஆகியவற்றின் விலைகள் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் கட்டுக்குள் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். துபாயுடன் தடையற்ற வணிக உடன்பாடு செய்துகொண்டது குறித்துப் பேட்டியளித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் சாதனை அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீரில் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் குழுவினர் வந்து சென்றதாகவும் தெரிவித்தார். உக்ரைன் போரால் உலக நாடுகளில் எரிபொருள் விலை விரைவாக உயர்ந்துள்ள நிலையிலும், … Read more

திருப்பதி அருகே மினி வேன் மீது டிராக்டர் மோதியதில் 12 பேர் காயம்

திருப்பதி: பூதலப்பட்டு- நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மினி வேன் மீது டிராக்டர் மோதியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 நாட்கள் தொடர் மின்வெட்டு – வெளியானது அதிர்ச்சி தகவல்!

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தின் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்கவும், தடையில்லா மின்சாரம் கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள், வரும் 28, 29 ஆகிய தேதிகளில், அதாவது … Read more

வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி – டி.ஆர்.டி.ஓ.

ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பாலசோர் கடற்கரையில், இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், வானில் மிக நீண்ட தூரத்தில் உள்ள அதி வேகமாக நகரும் இலக்கை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை துல்லியமாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  Source link

ஆயுர்வேத சந்தையில் இந்தியா முன்னோடி: சென்னை இளைஞருக்கு பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்ற தலைப்பில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தி வருகிறார். அதன்படி இன்று அவரது 87வது அத்தியாய உரையில், ‘நாட்டின் ஏற்றுமதி 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி சாதனை  படைத்துள்ளது. விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள், பொறியாளர்கள், சிறுதொழில்  புரிவோர் உள்ளிட்ட பலரது உழைப்பால் ஏற்றுமதியில் சாதனை இலக்கு  எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான … Read more

நாட்டிலே முதல் முறையாக குஜராத்தின் ஹசிரா துறைமுக நகரில் ஸ்டீல் கழிவுகளை கொண்டு இரும்பு சாலை அமைப்பு.!

நாட்டிலே முதல் முறையக குஜராத்தின் ஹசிரா துறைமுக நகரில் ஸ்டீல் கழிவுகளை கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவைகள் ஒன்றிணைந்து சாலையை அமைத்துள்ளன. மற்ற சாலைகளை காட்டிலும் 30 சதவீதம் தடிமன் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மழை மற்றும் பேரிடர் காலங்களில் சாலை சேதமடைவதை தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னோடித் திட்டமாக ஸ்டீல் சாலை கருத்தப்படுவதாகவும், … Read more

சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல்..!

டெல்லி: சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தை சேர்ந்த ஒருவருக்கும், சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள ஒரு கிராமத்தை பெண்ணுக்கும் இன்று காலை திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதற்காக தர்மாவரத்தை சேர்ந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 52 பேர், தனி பஸ்சில் நேற்று மாலை புறப்பட்டனர். இரவு 11.30 மணியளவில் பாக்ராபேட்டை மலைப்பாதை வழியாக … Read more

வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி – இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. போர்க் காலங்களில் தொலைதூரத்தில் வரும் எதிரி நாட்டின் விமானத்தை தரையில் இருந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை, இந்திய ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (டிஆர்டிஓ) அண்மையில் தயாரித்தது. சென்சார், ரேடார் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் பலாசோரில் இன்று சோதித்து பார்க்கப்பட்டது. இதற்காக வான் பரப்பில் தொலைதூரத்தில் அதிவேகமாக செல்லும் விமானம் … Read more