மகள் சடலத்தை 10 கிமீ தோளில் சுமந்த தந்தை: அமரர் ஊர்தி வருவதில் தாமதம்

அம்பிகாபூர்: சட்டீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்தாலா கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது 7 வயது மகள் சுரேகா, கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள லக்கான்பூர் சுகாதார மையத்தில் தனது மகளை ஈஸ்வர் நேற்று முன்தினம் காலை அனுமதித்தார். சுரேகாவின் ஆக்சிஜன் அளவு 60க்கும் கீழ் இருந்ததாக தெரிகிறது. மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்துள்ளனர். எனினும், சுரேகா சிகிச்சை பலனின்றி காலை 7.30 மணிக்கு உயிரிழந்தார். … Read more

கிறிஸ்தவ அமைப்புகளின் வருமானத்தை கண்காணிக்க கோரிய வழக்கு தள்ளுபடி: அபராதம் விதிப்பதாக எச்சரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கிறிஸ்தவ அமைப்புகளின் செயல்பாடுகள், வருமானத்தை கண்காணிக்க வாரியம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். ‘இந்துக்களை சில கிறிஸ்தவ அமைப்புகள் வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்துக்கு மதமாற்றம் செய்து வருகின்றன. எனவே கிறிஸ்தவ அமைப்புகள், அவற்றின் சொத்துகள், வருமானம், செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் தனியாக கண்காணிப்பு வாரியம் அமைக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார். அந்த வழக்கு … Read more

இலவச ரேஷன் திட்டம் – செப்டம்பர் மாதம் வரை நீட்டித்தது மத்திய அரசு

புதுடெல்லி: உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடி, வருவாயின்மை ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டனர். கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாக்கும் வகையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிடைக்கும் உணவு தானியத்துடன், ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் கிடைக்கப்பெறும். இத்திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு … Read more

800 மருந்துகள் விலை 10.7 சதவீதம் உயர்வு: ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்

புதுடெல்லி:  நாடு முழுவதும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. ஐந்து மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றின் விலை 4 மாதங்களுக்கு மேல் உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கடந்த 5 நாட்களாக இவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 800 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்த்தப்பட … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்றுபாதிப்பு தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார துறை இணையமைச்சர் பாரதி பர்வீண் பவார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவல்களை மாநில அரசுகளிடம் கோரியிருந்தோம். இதுவரை சில மாநிலங்கள் மட்டுமே பதில் அளித்துள்ளன. அந்த மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.மாநிலங்களின் சுகாதார கட்டமைப்பை … Read more

திடீரென தீப்பற்றி எரிந்த திருப்பதி எழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான இலவச பேருந்து

மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான இலவச பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் பல்வேறு இடங்களுக்குச் செல்ல இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலவச பேருந்து ஒன்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான பணிமனையில் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் திருமலைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், … Read more

உத்தர பிரதேச மாநில அரசியலில் துறவியின் புரட்சி: 2-வது முறை முதல்வராக பதவி ஏற்ற ஆதித்யநாத்தின் நீளும் சாதனை பட்டியல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்த உத்தராகண்டின் மலைப் பிரதேசத்தின் கர்வால் மாவட்டத்தின் பஞ்சூரில் ஜூன் 5, 1972-ல் பிறந்தவர் அஜய்சிங் பிஷ்த். வன இலாகா அதிகாரியான அனந்த்சிங் பிஷ்த் மற்றும்சாவித்ரி தேவியின் மகனாகப் பிறந்த அஜய்சிங் தற்போது யோகி ஆதித்யநாத் என்றழைக் கப்படுகிறார். தான் பிறந்த பவுரி மற்றும் ரிஷிகேஷில் பள்ளிப் படிப்பை முடித்தார். உத்தராகண்டின் பிரபலமான எச்.என்.பகுகுணா கர்வால் பல்கலை.யில் பிஎஸ்சி கணிதப் பிரிவில் பட்டம் பெற்றார். பாஜக மாணவர் அணியான அகில … Read more

“ராகிங்” என்ற பெயரில் முட்டி போட வைத்து 2ம் ஆண்டு மாணவரை சரமாரியாகத் தாக்கிய கொடூரம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் இரண்டாமாண்டு மாணவனை முட்டி போட வைத்து சரமாரியாகத் தாக்கிய சீனியர் மாணவர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த ஜெயகிரன் என்ற மாணவரை இரவு 11 மணிக்குத் தங்கள் அறைக்கு வரவழைத்த சீனியர் மாணவர்கள், அவரை முட்டி போட வைத்து, செல்போன் சார்ஜரின் ஒயர், செருப்பு, பிளாஸ்க் … Read more

பா.ஜ.க.வினருடன் மோதல்- திக்விஜய் சிங்கிற்கு ஓராண்டு சிறைத்தண்டனை

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கடந்த 2011ம் ஆண்டு போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியினருக்கும், காங்கிர கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அப்பகுதி வழியாக சென்றபோது, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த காபியா என்பவர் பலத்த காயமடைந்தார். இந்த மோதல் தொடர்பாக திக்விஜய் சிங், உஜ்ஜைன் எம்.பி. பிரேமசந்த் … Read more

காய்ச்சல் முதல் இருதய நோய் வரையிலான மருந்துகளின் விலை 10 சதவீதம் உயர்வு

உணவு, எரிபொருட்களை தொடர்ந்து மருந்துகளின் விலையும் 10 சதவிகிதம் உயர இருப்பதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மளிகை பொருட்களை போல மாதாந்திர பட்ஜெட்டில், மருந்து மாத்திரைகளை பட்டியலிடும் குடும்பங்கள் பல நம்நாட்டில் உள்ளன. அதிலும், முதியோர்கள் உள்ள குடும்பங்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மருந்துகளுக்காக செலவிட வேண்டிய சூழல் உள்ளது. அத்தகையோரின் பட்ஜெட்டில் அடுத்த மாதம் முதல் துண்டு விழ செய்ய போகிறது மருந்துகளின் விலை உயர்வு. … Read more