குருவாயூர் கோவிலில் முதன்முறையாக ஹெலிகாப்டருக்கு பூஜை!

கேரளா, மாநிலம் குருவாயூர் கோவிலில் முதன்முறையாக 100கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட ஹெலிகாப்டருக்கு பூஜை நடத்தப்பட்டது. RP குரூப் சேர்மனான ரவிப்பிள்ளை என்பவர்  புதிய ஹெலிகாப்டர் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த ஹெலிகாப்டருக்கு  குருவாயூர் , கிருஷ்ணா மைதானத்தில் வைத்து வாகன பூஜை செய்யப்பட்டது. ஐந்து பிளேடுகளைக் கொண்ட, இந்தியாவின் முதல் ஏர்பஸ் டி3 ஹெலிகாப்டர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. Source link

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் பகுதியில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பஞ்சாயத்து துணை தலைவர் பாதுதேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து போக்துய் என்ற கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் வீடுகள் கொளுத்தபட்டன. 2 குழந்தைகள் உள்பட 8 பேர் எரித்துகொல்லப்பட்டனர்.இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழவினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை இன்று தொடங்கியது. சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று வன்முறை … Read more

ஒரே நாளில் 4,100 பேர் கொரோனாவால் பலி? விடுபட்ட கணக்கீட்டால் குழப்பம்

புதுடெல்லி: நாடு முழுவதும் தினசரி கொரோனா பலி பட்டியலில் நேற்று 4,100 பேர் இறந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கடந்த 22, 23, 24ம் தேதிகளில் தினசரி ெதாற்று பாதிப்பு சற்றே அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் 1,938 பேருக்கும், நேற்று 1,685 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று புதிதாக 1,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக “பாகுபலி” ஸ்பெஷல் ஷோ – ஏன் எதற்கு?

பன்மொழி சமுதாயத்தை மேம்படுத்த அனைத்து ராஜ்யசபை உறுப்பினர்களுக்கும் “பாகுபலி” படத்தை திரையிட ராஜ்யா சபை செயலகம் முடிவு செய்துள்ளது. ராஜ்ய சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மகாதேவ் சாலையில் உள்ள “பிலிம்ஸ் டிவிஷன் ஆடிட்டோரியத்தில்” ஏப்ரல் 1 ஆம் தேதியன்று “பாகுபலி” படத்தின் முதல் பாகத்தை சிறப்புக் காட்சியாக திரையிட ராஜ்யசபை செயலக பொழுதுபோக்கு கிளப் ஏற்பாடு செய்துள்ளது. தென்னிந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராஜமவுலி இயக்கி, வசூலில் இந்திய அள்வில் சாதனை படைத்த திரைப்படம் பாகுபலி. இந்தி … Read more

‘‘மீண்டும் பேசுவோம்’’ – ஏப்ரல் 1-ம் தேதி தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி: பிரதமர் மோடி ட்வீட்

புதுடெல்லி: தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர். ஆசிரியர்களுடன் ஏப்ரல் 1-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. டெல்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1, 2022 அன்று, நடைபெறும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார். மன … Read more

மே.வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு.. விசாரணையைத் தொடக்கியது சிபிஐ..!

டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் குழு, 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையைத் தொடக்கியுள்ளது. பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹட் என்னும் ஊரில் இரு பிரிவினரிடையே மோதலில் குடிசை வீடுகளைத் தீவைத்துக் கொளுத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மாநிலக் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்த இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு வாரங்களில் நிலை அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தியதை … Read more

டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஆலோசனை- பிரியங்கா காந்தி பங்கேற்பு

புது தில்லி:  காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி, உம்மன் சாண்டி, முகுல் வாஸ்னிக், தாரிக் அன்வர், ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மாக்கன் மற்றும் பொருளாளர் பவன்குமார் பன்சால் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் அமைப்புத் தேர்தல், உறுப்பினர் சேர்க்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து … Read more

ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் வருகை அதிகரிப்பு வரிசையில் நிற்பவர்களுக்கு உணவு, பால் வழங்க வேண்டும்-அறங்காவலர் குழு தலைவர் உத்தரவு

திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் வரிசையில் நிற்பவர்களுக்கு உணவு, பால் வழங்க வேண்டும் என்று அறங்காவர் குழு தலைவர் சுப்பா உத்தரவிட்டார்.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று காலை அறங்காவலர் குழு தலைவர்  சுப்பா திருமலையில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ரம்பாகீஜா பஸ் நிலையம் அருகே உள்ள அன்ன பிரசாதம் வழங்கும் கவுண்டரில் ஆய்வு … Read more

இந்தியாவில் மின்சார வாகனங்கள் தீ பிடித்த நிகழ்வுகள் – அளவுக்குமீறிய சார்ஜ்தான் காரணமா?

வேலூரில் நிகழ்ந்தது போலவே, இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்தாண்டு டிசம்பரில் ஹரியானா மாநிலம் குருகிராமில் சார்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் தீப்பற்றியதில், 60 வயது ஆண் உயிரிழந்தார். மும்பையின் அந்தேரி, ஹைதராபாத்திலும் கடந்தாண்டு மின் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தபோது இந்த விபத்துகள் நிகழ்ந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தமிழகத்திலும் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மதுரை சின்ன சொக்கிக்குளத்தில் கடந்தண்டு டிசம்பர் மாதம் … Read more

இந்தியாவில் மின் விபத்துகளால் கடந்த 3 ஆண்டுகளில் 17,781 பேர் உயிரிழப்பு: திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மின் விபத்துகளால் 17,781 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார் மின்கசிவு காரணங்களால் கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் பற்றி மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இந்த பதிலை அளித்துள்ளார். அமைச்சரின் பதிலில், “இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகளில் மின் உற்பத்தி நிலையங்கள், மின்பகிர்மானப் பிரிவுகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் ஏற்பட்ட மின்விபத்துகள் பற்றிய … Read more