இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை: சட்டீஸ்கரில் பரிதாபம்

சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் தாஸ் என்பவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஆக்ஸிஜன் பற்றக்குறையால் சிறுமி உயிரிழந்து விட்டதாக அங்கு பணியாற்றிய டாக்டர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டீற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரிய நிலையில், மற்றொரு சடலம் விரைவில் வரும் என்றும் அதுவரை காத்திருக்குமாறு அங்குள்ள … Read more

2014-க்கு பிறகு ஆயுதங்கள் ஏற்றுமதி 6 மடங்கு அதிகரிப்பு – இணையமைச்சர் அஜய் பட் தகவல்

இந்தியாவின் ஆயுதங்கள் ஏற்றுமதி 7 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு நிதியாண்டின் இதுவரை 11,607 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கு நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 36,500 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு … Read more

ஆயுஷ்மான் திட்டத்துக்கு ரூ.37,185 கோடி அனுமதி

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்மருத்துவமனையில் சேருவோருக்கு இதுவரை ரூ.37,185 கோடிஅனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது: மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்காகவும் அவர்கள் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை பெறவும் ஆயுஷ்மான் பாரத்- பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம் கடந்த 2018-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் 21-ம் தேதிவரை இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் சேருவோருக்கு இதுவரை ரூ.37,185 … Read more

பிம்ஸ்டெக் மாநாட்டில் மார்ச் 30ஆம் நாள் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!

வங்கக் கடலோர நாடுகளின் பல்துறைத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 30ஆம் நாள் பங்கேற்க உள்ளார். வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பின் ஐந்தாவது மாநாட்டை இலங்கை நடத்துகிறது. காணொலியில் நடைபெறும் இந்த மாநாட்டில் மார்ச் 30ஆம் நாள் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், அதற்கு உதவுவதற்கு … Read more

ராணுவ வீரர்கள் மேற்கொண்ட வான்வழி பயிற்சி- சீன எல்லை அருகே நடைபெற்றது

சிலிகுரி: சீனாவுடனான வடக்கு எல்லை மற்றும் நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் எல்லைகளுடன் தொடர்புள்ள பகுதியாக உள்ள  மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இந்திய ராணுவத்தின் வான்வழி விரைவு குழுக்கள் பங்கேற்ற  இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  இதில் 600க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டு, வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் கீழே உள்ள இலக்குகளை குறி வைத்து குதிக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டனர். #WATCH … Read more

பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை முழுமையாக வெளியேற்ற வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சரிடம் அஜித் தோவல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘எல்லையில் அமைதியை நிலைநாட்டவும், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், கிழக்கு லடாக்கில் எஞ்சிய பகுதிகளில் இருந்து படைகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்’ என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். … Read more

சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறைக் கருத்து அல்ல! அது குற்றமும் அல்ல! – உயர்நீதிமன்றம்

சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறைக் கருத்து அல்ல! அது குற்றமும் அல்ல! என டெல்லி கலவரம் தொடர்பான வெறுப்பு பேச்சு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24, 2020 அன்று வடகிழக்கு டெல்லியில் வகுப்புவாத மோதல்கள் வெடித்தன, குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான கட்டுப்பாட்டை மீறி வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக எம்பியுமான பிரவேஷ் வர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரிய முந்தைய … Read more

கர்நாடக மாநிலத்தில் கோயில் இடங்களில் மற்ற மதத்தினர் கடை வைக்க அனுமதி மறுப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உடுப்பி, ஷிமோகா, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ யு.டி.காதர் பேசுகையில். “கோயில் திருவிழாக்களிலும், கோயில் இடத்திலும் முஸ்லிம்கள் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வருகின்றனர். முஸ்லிம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இந்த சதிச் செயலை அரசு தடுக்க வேண்டும்” என்றார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி, “கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் வைக்க எவ்வித தடையும் … Read more

நிலக்கரி உரிமைத்தொகையைச் செலுத்தாவிட்டால் நிலக்கரி எடுக்கத் தடை-முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

பொதுத்துறையைச் சேர்ந்த நிலக்கரி நிறுவனங்கள் ஜார்க்கண்ட் மாநில அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒரு இலட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயை வழங்காவிட்டால், சுரங்கங்களை அரசே எடுத்துக் கொள்ளும் என முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் சட்டப்பேரவையில் பேசிய அவர், மாநில அரசின் உரிமைத் தொகையைச் செலுத்தாவிட்டால், நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றித் தடுப்புகள் ஏற்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். இது குறித்து ஏற்கெனவே மத்திய நிலக்கரித்துறைக்குத் தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் அதிக அளவு நிலக்கரி வெட்டியெடுப்பதில் … Read more

கட்சி அமைப்புகளில் மாற்றம்- காங்கிரஸ் செயலாளர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

புதுடெல்லி: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை இழந்தது. இதைத்தொடர்ந்து அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ் தலைமையை மீண்டும் விமர்சிக்க தொடங்கினர். சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். இதைத்தொடர்ந்து அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சோனியா ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் தேர்தல் குழுவை மாற்றிவிட்டு புதிய குழுவை … Read more