யுனிடெக் முன்னாள் அதிகாரியின் மனைவி பிரீத்திக்கு நிபந்தனை பெயில்.!

யுனிடெக் முன்னாள் நிர்வாகியான சஞ்சய் சந்திராவின் மனைவி பிரீத்திக்கு கடுமையான நிபந்தனைகளுடன் 5 மணி நேர பெயில் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியில் காலமான தமது பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள அனுமதி கோரியிருந்த பிரீத்தியை பெயிலில் விட்டால் அவர் யுனிடெக் வழக்கின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று அமலாக்கத்துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் கண்காணிப்பில் மொபைல் போன் இல்லாமல், பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு ஜாமீனில் செல்ல நீதிமன்றம் பிரீத்தியை அனுமதித்தது. போலியான கம்பெனிகள் மூலமாக 410 … Read more

நல்ல ஆரோக்கியத்தை தொடர, யோகா உலகை ஒன்றிணைக்கிறது- பிரதமர் மோடி கருத்து

புது தில்லி: 114 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்காக கத்தார் தலைநகர் தோகாவில் யோகா அமர்வை நடத்தியதற்காக அங்குள்ள இந்திய தூதரகத்தின் முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தோகாவில்  உள்ள இந்தியத் தூதரகத்தின் மகத்தான முயற்சியை பாராட்டுகிறேன். நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தைத் தொடர யோகா உலகை ஒன்றிணைக்கிறது.  பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவுவதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் … Read more

மார்ச்-25: பெட்ரோல் விலை ரூ.104.43, டீசல் விலை ரூ.94.47

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.43-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.47-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கேரள தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – பயணிகள் அவதி

கேரளாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தினமும் வேலைக்குச் செல்பவர்களும், பள்ளி, கல்லூரி செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பல்வேறு இடங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க அரசு … Read more

உ.பி.யில் மீண்டும் முதல்வரானார் யோகி ஆதித்யநாத்: 2 துணை முதல்வர்கள் உட்பட 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

புதுடெல்லி: லக்னோவில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்ய நாத் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். உத்தர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து லக்னோவின் அடல் பிஹாரி வாஜ்பாய் எகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிரம்மாண்ட … Read more

ஊருக்குள் புகுந்த கரடியை கம்புகளுடன் விரட்டிய கிராம மக்கள்

ஒடிசா மாநிலம் மாயூர்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கரடி நடமாடுவதால் மக்கள் அச்சத்தில்  ஓடி ஒளிந்தனர். சிலர் துணிந்து கம்புகளுடன் கரடியை விரட்டினர். கரடி ஊருக்குள் புகுந்து விட்டதால் அதை செல்போனில் படம் எடுத்து வைத்த ஊர் மக்கள் அதனை விரட்ட முயற்சி செய்தனர். அந்தக் கரடிக்கு வயதாகி விட்டதால் ஓட முடியவில்லை என்றும் அதன் உடல் நலம் இல்லை என்றும் சிலர் தெரிவித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் அது அமர்ந்துவிட்டது. இதைக் கண்ட ஊர் … Read more

இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் நடந்தே சென்ற தந்தை- வைரலான வீடியோ

சர்குஜா:  சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  கடந்த சில நாட்களாக அதிக காய்ச்சலால் அந்த சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். அவளது ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. சுகாதார மருத்துவ மையத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்து நிலையில் சிறுமி உயிரிழந்து விட்டதாக அங்கு பணியும் டாக்டர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த … Read more

கன்டெய்னர்கள் பாரம் தாங்காமல் கங்கையில் சரக்கு கப்பல் கவிழ்ந்தது: 3 பேர் மாயம்

சாகிப்கன்ஜ்: ஜார்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு சரக்கு கப்பல் புறப்பட்டது. பீகார் மாநிலத்தின் கதிஹார் நோக்கி அது சென்று கொண்டிருந்தது. கப்பலில் கன்டெய்னர்கள் ஏற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில், கப்பலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதோடு,  அதிக எடையுள்ள கன்டெய்னர்களை எடுத்து சென்றதால் சமநிலையை இழந்தது. இதன் காரணமாக ஒரு கன்டெய்னர் கப்பலில் இருந்து சரிந்து விழுந்தது. இதன் காரணமாக கப்பல் நிலை தடுமாறி அதில் இருந்த கன்டெய்னர்கள் ஒன்றன் பின் … Read more

போர் நீடிப்பதால் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி – ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசனை

உக்ரைன் – ரஷ்யா போர் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வரும் நிலையில் இந்தியா சந்தித்து வரும் பொருளாதார பிரச்னைகளை சமாளிப்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் பெங்களூருவில் இக்கூட்டம் நடைபெற்றது. உக்ரைன் போர் காரணமாக உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை, போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி, இறக்குமதிகள், இதனால் ஏற்படும் அந்நியச்செலாவணி பற்றாக்குறை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் உள்ளிட்டவை குறித்து இதில் … Read more

ஆர்எஸ்எஸ் அமைப்பில் விரைவில் முஸ்லிம், கிறிஸ்தவர்களும் இணைவார்கள்: கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு

பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பில் விரைவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணைவார்கள் என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா சட்டப்பேரவையில் பேசியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. க‌ர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று பேசுகையில், “அரசியலில் ஒருவர் எந்த சித்தாந்தத்தை பின்பற்றினாலும் மற்ற‌வருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜக,காங்கிரஸ் என‌ எந்த அமைப்பைசேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற அமைப்பினரை தரக்குறைவாக பேசக் கூடாது”என்றார். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர் காகேரி, ”ஏன் திடீரென எங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி பேசுகிறீர்கள்?”என்றார். … Read more