சந்திரபாபு நாயுடு ஆட்சியில் உளவு பார்க்க பெகாஸஸ் வாங்கப்பட்டதா?

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியின் போது எதிர்க்கட்சியினரை உளவு பார்க்க பெகாஸிஸ் கருவிகளை வாங்கியதாக எழுந்த புகார்களை விசாரிக்க 6 நபர் கொண்ட சட்டமன்றக் குழுவை ஆந்திர அரசு நியமித்துள்ளது. குழுவை அமைத்து உத்தரவிட்ட சபாநாயகர் தமினேனி சீதாராம் அனைத்துப் புகார்களையும் தீவிரமாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் திருப்பதி சட்டமன்ற உறுப்பினரான பூமானா கருணாகர ரெட்டியின் தலைமையிலான இக்குழு விசாரணையைத் தொடங்க உள்ளது . Source link

‘கூகுள்’ நிறுவனம் மீது இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் புகார்- இந்திய போட்டி ஆணையம் விசாரணை

புதுடெல்லி: இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் புகாரின் பேரில் ‘கூகுள்’ நிறுவனத்துக்கு எதிராக இந்திய போட்டி ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் (ஐ.என்.எஸ்.) பொது செயலாளர் மேரி பால்  ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்குகின்றன. அவை இணையதளத்தில் மின்னணு வடிவத்தில் கிடைக்கின்றன. ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, அந்த செய்திகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். மேற்கோள் காட்டவும் … Read more

ஏப்ரல் மாதம் முதல் வலி நிவாரணிகள் உள்ளிட்ட மருந்துகளின் விலை அதிகரிப்பு: இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தகவல்

டெல்லி: ஏப்ரல் மாதம் முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டியராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது!

பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் முதல் 10.7% வரை உயர உள்ளது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் முதல் 10.7% வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, பெரும்பாலான பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் கிட்டத்தட்ட 800 திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் 10.7 சதவீதம் … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் இந்திய – சீன அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இரு நாட்டு எல்லை பிரச்சினைகள் குறித்து இந்திய – சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதன்காரணமாக கடந்த 2020 மே 5-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்திய, சீன உறவில் … Read more

பாபா ரோட் ஷாவின் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதம்!

பஞ்சாப்பில் அமிர்தசரஸில் இஸ்லாமிய புனிதர் பாபா ரோட் ஷாவின் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதமாக  வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் இரு நாட்களுக்கு கொண்டாடப்படும் பாபா ரோட் ஷாவின் விழாவில் திரளான பக்தர்கள் மாதுபாட்டிலை காணிக்கையாக செலுத்துகின்றனர். பாபாவின் பாதத்தில் வைக்கப்பட்டு மதுபானம் மீண்டும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய மதுபானங்கள் பாபாவின் பாதத்தில் வைக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கே பிரசாதமாக  வழங்கப்பட்டது. விழாவில் வாசிக்கப்பட்ட மேள தாளங்களில் பக்தர்கள் நடனமாடியபடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  Source … Read more

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தவறானது- மத்திய நிதி மந்திரி விளக்கம்

புது தில்லி: நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு  கடந்த 22-ந்தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.  இந்நிலையில் அண்மையில் முடிவடைந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்காகவே மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்ததாகவும், தற்போது தேர்தல் முடிவடைந்ததால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும்,  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  இதை மத்திய நிதி மந்திரி … Read more

இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஒன்றிய நிதியமைச்சர் விளக்கம்

டெல்லி: இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய நிதியமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் போர்ச் சூழலே விலையேற்றத்திற்கு காரணம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

பிரஷாந்த் கிஷோருடன் ராகுல் காந்தி, பிரியங்கா சந்திப்பு?

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மற்றொரு தேர்தல் வியூக நிபுணரான சுனில் கனுகோலுவை ராகுலும் பிரியங்காவும் நேற்று முன்தினம் சந்தித்து பேசியிருந்தனர். இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையிலும் மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையிலும் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள … Read more

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். … Read more