புதுச்சேரியில் பரவலாக பூத்துக்குலுங்கும் மஞ்சள் கொன்றை பூக்கள்

கோடைக்காலத்தில் பூக்கும் தன்மை கொண்ட மஞ்சள் கொன்றை பூக்கள் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பூத்துக்குலுங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கின்றன. கடற்கரை சாலை , சட்டப்பேரவை சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலை பகுதிகளிலும், பாரதி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கொன்றைப்பூக்கள் அதிகளவில் பூத்துள்ளன. மரங்களில் இருந்து உதிர்ந்து விழுந்துள்ள பூக்கள் சாலைகளை மஞ்சள் நிறத்தில் அலங்கரித்துள்ளன. சுற்றுலாப்பயணிகள் பலரும் கொன்றை பூக்கள் அதிகமுள்ள மரங்களின் கீழ் சிறிது நேரம் தங்கி இளைப்பாறியும் … Read more

முக்கியமான கேள்விகளுக்கு உணர்ச்சிகரமான பதில் கொடுங்கள்- சட்ட அமைச்சருக்கு ஜேடியு எம்.பி பதில்

மக்களவையில் இன்று கைதிகளின் வாக்குரிமை குறித்த கேள்விக்கு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்தார். அந்த பதிலில், “நாட்டில் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை ஒவ்வொரு வாக்காளருக்கும் உண்டு. சிறையில் உள்ளவர்களும் வாக்களிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது” என அமைச்சர் கூறினார். இதற்கு ஜேடியு தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், ஒருவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படும்போது, அவரது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது. வாக்களிப்பது … Read more

நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என நிதி மசோதா மீதான விவாதத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 9.1 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.

மேற்கு வங்க படுகொலை சம்பவம் – நாடாளுமன்றத்தில் கதறி அழுத பாஜக பெண் எம்.பி.

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக எம்.பி. ரூபா கங்குலி சோகத்தில் கதறி அழுதார். மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அண்மையில் குண்டு வீசி கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள போஹாத் கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 22-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் திடீர் வன்முறை ஏற்பட்டது. இதில் 3 … Read more

8 பேர் கொலையில் திரிணமூல் காங். தலைவர் கைது: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வட்டார தலைவர் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதி யில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் … Read more

மேற்கு வங்கத்தில் வீட்டில் தீவைத்து 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து மாநிலங்களவையில் பேசி கண்ணீர் விட்டு அழுத பாஜக உறுப்பினர்.!

மேற்கு வங்கத்தில் வீட்டில் தீவைத்து 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து மாநிலங்களவையில் பேசிய பாஜக உறுப்பினர் ரூபா கங்குலி கண்ணீர் விட்டு அழுதார். மேற்கு வங்கத்தில் கூட்டுப் படுகொலைகள் அதிகரித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். இனியும் அங்கு வாழ முடியாது எனக் கருதியும், வன்முறைக்கு அஞ்சியும் மாநிலத்தை விட்டு மக்கள் வெளியேறுவதாகத் தெரிவித்தார். கொடூரக் கொலைபற்றிப் பேசும்போது கண்ணீர்விட்டு அழுத அவர், கண்ணீரைத் துடைத்தபடி மீண்டும் பேசினார்.   … Read more

ஓட்டு போடுவதை கட்டாயமாக்க சட்டம் கொண்டு வரப்படுமா? பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி: வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவதற்கு அமைப்புகள் அல்லது மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் பரிந்துரைகள் வந்துள்ளதா? வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டம் உள்ளதா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்கு மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவரும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார். அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களைப் பெறுவதற்கும், மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிக எண்ணிக்கையில் வெளியே வருவதற்கும், ஓட்டு போட்டதற்கான … Read more

சினிமா பிரபலம் என்பதால் விலக்கு அளிக்க முடியாது: நடிகை கங்கனா வழக்கில் நீதிமன்றம் அதிரடி

மும்பை: சினிமா பிரபலம் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து கங்கனாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று அந்தேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சினிமா பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், பாலிவுட் நடிகை கங்கனா மீது கிரிமினல் அவதூறு புகார் ஒன்றை அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு பெருநகர மாஜிஸ்திரேட் ஆர்.ஆர்.கான் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கங்கனா … Read more

போபாலை சேர்ந்தவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களா? காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் கருத்தால் சர்ச்சை

போபால் நகரைச் சேர்ந்தவர்கள் என்றாலே பொதுவாக ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற கருத்து உள்ளதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை மையமாக வைத்து, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி எடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் தற்போது நாடு முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனியார் தொலைக்காட்சி … Read more

உ.பி. முதல்வராக யோகி ஆதித்யாத் மீண்டும் பதவியேற்பு: ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழா; 50 ஆயிரம் பேர் பங்கேற்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். 50 ஆயிரம் பேர் பங்கேற்கின்ற பிரமாண்ட ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். உத்தர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக கூட்டணி 273 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் … Read more