உ.பி., முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு!

உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக, பாஜகவைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றார். அண்மையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக, கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10 ஆம் தேதி எண்ணப்பட்டு … Read more

2 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா உயர்நிலைப் பேச்சு

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இந்தியா – சீனா இடையிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சீனப் படைகளை விரைவாகவும், முழுமையாகவும் விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தியுள்ளது.  டெல்லி சவுத் பிளாக்கில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் எல்லைத் தகராறு குறித்து இருவரும் முதன்மையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான … Read more

உ.பி முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யநாத் நேற்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட மெகா விழாவில் யோகி ஆதித்யநாத் இன்று இரண்டாவது முறையாக உ.பி முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, … Read more

குருவாயூர் கோயிலில் முதன் முறையாக சொகுசு ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தினசரி ஏராளமானோர் தாங்கள் புதிதாக வாங்கும் வாகனங்களை பூஜைக்காக கொண்டு வருவது வழக்கம். ஆனால் முதல் முறையாக குருவாயூர் கோயிலில் வாகன பூஜைக்காக ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய விவரம் வருமாறு: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரவி பிள்ளை. தொழிலதிபர். அவர் வாங்கிய புதிய சொகுசு ஹெலிகாப்டர் குருவாயூர் கோயிலுக்கு வாகன பூஜைக்காக கொண்டு வரப்பட்டது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி … Read more

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சந்திப்பு

புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று பஞ்சாபில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று சந்தித்துப் பேசினார். பஞ்சாபின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக … Read more

ஜனநாயகத்தைக் கேலி செய்யும் தேர்தல் முறை!

சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச சட்டசபை பொதுத் தேர்தலில் எம்.எல்.ஏ.வாகத் தேர்வானார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் . இதைத் தொடர்ந்து மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கவே, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார் உ.பி.யில் 2027 சட்டசபைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள அகிலேஷ் முடிவு செய்துள்ளார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல ஏதோ ஒரு அரசியல் காரணங்களுக்காகப் பதவியைத் துறப்பது… இல்லையில்லை மாற்றிக்கொள்வது தொடர்ந்து … Read more

உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக 2ஆவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு..!

உத்திரப்பிரதேசத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா யோகி ஆதித்யநாத் மீண்டும் உ.பி முதல்வராக பதவியேற்பு பிரதமர் மோடி முன்னிலையில் உ.பி முதல்வர் பதவியேற்பு.! அமித் ஷா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு.! பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பதவியேற்பு.! உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட பதவியேற்பு விழா உத்திரப்பிரதேச முதல்வராக தொடர்ந்து 2ஆவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு யோகி ஆதித்யநாத்திற்கு உ.பி ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் பதவி … Read more

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்- பஞ்சாப் முதல்வர் அதிரடி

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவியேற்றப் பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியத்தில் மாற்றம் செய்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் எம்எல்ஏ ஒரு முறை ஓய்வூதியமாக மாதம் ரூ.75,000 பெறுகிறார். அதன்பிறகு, ஒவ்வொரு அடுத்தடுத்த காலத்திற்கும் ஓய்வூதியத் தொகையில் 66 சதவீதம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நீக்கி பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட பகவந்த் மான் அதில் கூறியிருப்பதாவது:- எம்எல்ஏக்கள் … Read more

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் 2 பேர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்பு..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் 2 பேர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பாதக் ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றனர். உத்திரப்பிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தியா – சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா – சீனா இடையேயான லடாக் எல்லைப் பிரச்சினை தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். முன்னதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இஸ்லாமாபாத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அங்கு காஷ்மீர் குறித்த சர்ச்சையான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. … Read more