பிஎச்டி படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயமாகிறது; ஆய்வுகளில் தரத்தை உருவாக்க யுஜிசி முயற்சி

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பிஎச்டி படிப்பில் சேர முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அவர்கள் தேசிய தகுதித்தேர்வு (நெட்) மற்றும் ஆராய்ச்சிக்கான மானியத்தொகை (ஜெஆர்எப்) தேர்ச்சி பெற்றிருந்தால் உதவித்தொகை பெற முடியும், பட்டம் பெற்றபின்பு கல்லூரிகளில் … Read more

டெல்லியில் ஏப்ரல் 1 முதல் பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்குத் தனிப்பாதை

டெல்லியில் ஏப்ரல் 1 முதல் பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கெனத் தனிப் பாதை பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் விதிமுறைகளை மீறுவோருக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது. போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், பயணிகள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பேருந்துகளுக்கு 15 தடங்களில் தனிப்பாதையை நடைமுறைப்படுத்த உள்ளதாகக் தெரிவித்துள்ளது. இந்தப் பாதைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பேருந்துகளும் சரக்கு வாகனங்களும் மட்டுமே செல்லலாம் என்றும், இரவு 10 மணி … Read more

ஹிஜாப் விவகாரத்தில் அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லுமென்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். தேர்வுகள் நடைபெறுவதற்கும் வழக்குக்கும் தொடர்பு இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹிஜாப் விவகாரத்துக்கு உணர்ச்சியூட்ட வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மாடியில் பழத் தோட்டம்: ஆண்டு முழுவதும் மகசூல்

திருவனந்தபுரம்: துபாயில் வேளாண் பணி செய்து வந்த அப்துரசாக் கடந்த 2018-ம்ஆண்டு கேரளா திரும்பினார். தனது வீட்டு மொட்டை மாடியில் 135 பழ மரங்களை நட்டு வளர்த் துள்ளார். 135 பிளாஸ்டிக் டிரம்களில் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இதில் இருந்து அப்து ரசாக் ஆண்டு முழுவதும் மகசூலும் எடுத்து வருகிறார். இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழிடம் அப்துரசாக் கூறிய தாவது: தாய்லாந்துக்கு சென்றிருந்த போது அங்கு பிளாஸ்டிக் டிரம்மில் பழமரங்கள் வளர்க்கும் நுட்பத்தைக் கற்றுக் கொண்டேன். மரங்களை … Read more

எரிவாயு விலையை உயர்த்தியது இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் அரசு நிறுவனம்

டெல்லியில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 59 ரூபாயாக உள்ளது. அரசுத் துறை நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் டெல்லியில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்களை வைத்துள்ளது. இதேபோல், வீடுகளுக்குக் குழாய்களில் சமையல் எரிவாயு வழங்குவதையும் செய்து வருகிறது. நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைத் தொடர்ந்து இந்திரப் பிரஸ்தா நிறுவனமும் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது. Source link

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலக தயார்: கெஜ்ரிவால்

புதுடெல்லி : டெல்லியில் உள்ள 3 மாநாகராட்சிகளுக்கு ஒருங்கிணைக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதனிடையே மசோதாவின் மூலமாக மாநாகராட்சி தேர்தலை ஒத்திவைக்க மத்திய அரசு முயல்வதாக டெல்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் கூறியதாவது:- பா.ஜ.க., இப்போது டெல்லி மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய முயன்று வருகிறது, எதிர்காலத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான தேர்தல்களிலும் இதேபோன்று செய்யப்படலாம். … Read more

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடலாம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழகம்  நாடலாம் என  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால் கூட அதை செய்ய தயாராக இருக்கிறோம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அணையில் எது செய்வது என்றாலும் கேரள எல்லைக்குள் சென்றுதான் மேற்கொள்ளவேண்டியுள்ளது எனவும் ஆனால் நிறைய நேரங்களில் கேரளா எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது எனவும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

உ.பி முதல்வர் யோகிக்கு உதவியது போல் முதல்வர் சவுகானுக்கு ‘புல்டோசர் மாமா’ பட்டம்: ம.பி தேர்தலில் வெற்றி பெற வியூகம்

புதுடெல்லி: உ.பி.யில் கடந்த ஆட்சியில் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் முக்தார் அன்சாரி, அத்தீக் அகமது உள்ளிட்டோரின் பல கோடி ரூபாய் சொத்துக்களை முதல்வர் ஆதித்யநாத் இடித்து தள்ள உத்தரவிட்டார். இதனால், ஆதித்யநாத் ‘புல்டோசர் பாபா’ என்று அழைக்கப்பட்டார். அந்த பட்டத்தை முன்வைத்தும் உ.பி. தேர்தலின் போது செய்த பிரச்சாரம் நல்ல பலனை கொடுத்தது. தேர்தலின் போது உ.பி. வந்த ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானும், ‘புல்டோர் பாபா’ என்று ஆதித்யநாத்தை புகழ்ந்து பிரச்சாரம் … Read more

காஷ்மீர் விவகாரம்: சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அரசியல், பொருளாதாரம், வணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 57 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவர். அந்தவகையில், நடப்பாண்டுக்கான கூட்டமைப்பு பாகிஸ்தானில் நடைபெற்றது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 48ஆவது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி.. உயிரை துச்சமென கருதி இளைஞரை மீட்ட ரயில்வே காவலரின் சிசிடிவி காட்சி.!.!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் விதால்வாடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளைஞரை ரயில்வே போலீசார் சட்டென மீட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நடைபாதையில் நின்றிருந்த இளைஞர்,நிலையத்திற்குள் ரயில் வந்ததும் தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட ரயில்வே காவலர் ஒருவர் தன் உயிரை துச்சமென கருதி சட்டென தண்டவாளத்தில் இறங்கி இளைஞரை பத்திரமாக மீட்டார். ரயில்வே போலீசார் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   … Read more