இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்… காஷ்மீர் குறித்து கருத்து தெரிவிக்க சீனாவுக்கு எந்த அதிகாரம் இல்லை.. ஒன்றிய அரசு!!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் விவகாரங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கருத்து தெரிவித்த எந்த அதிகாரமும் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய ஒத்துழைப்பில் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, காஷ்மீர் பற்றி குறிப்பிட்டு இருந்தார். காஷ்மீர் தொடர்பாக இஸ்லாமிய நண்பர்கள் பலரின் அழைப்புகளை மீண்டும் கேட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சீனாவும் அதே நம்பிக்கையை பகிர்ந்து கொள்கின்றது என்றும் … Read more

மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த விரும்பவில்லை: மம்தா

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பாதுஷேக் என்பவர் திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 8 பேர் எரித்துக் கொல்லப் பட்டனர். இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘ராம்புராட் கலவரம் எதிர்பாராத ஒன்று. … Read more

லாலு பிரசாத் யாதவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மறுப்பு?

ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் (73), உடல்நலக் குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் (ஆர்ஐஎம்எஸ்) அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல்நிலை திடீரென மோசமானது. இதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை சீராக … Read more

சைக்கிளில் அதிவேகமாக சாலையை கடக்க முயன்ற சிறுவன் நூலிழையில் கோர விபத்தில் இருந்து தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு

கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த தளிப்பறம்பு பகுதியில் சைக்கிளில் அதிவேகமாக சாலையை கடக்க முயன்ற சிறுவன் நூலிழையில் கோர விபத்தில் இருந்து தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மண் சாலையில் அதிவேகமாக சைக்கிளில் வந்த சிறுவன் எங்கும் இடைநிறுத்தம் இல்லாமல் சாலையைக் கடக்க முயன்ற நிலையில் எதிர் வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி சில அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டான். சாலையில் விழுந்த சிறுவனின் சைக்கிள் மீது நொடிப் பொழுதில் பேருந்து ஏறிச் சென்றதில் … Read more

கேரளாவில் இன்று முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பஸ்களுக்கு இணையாக தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து தனியார் பஸ்களின் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.12 ஆக உயர்த்த வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக மாநில போக்குவரத்து துறை மந்திரி ஆன்டனி ராஜிடமும் மனு கொடுத்தனர். பஸ் உரிமையாளர்களின் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கேரளா முழுவதும் தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு … Read more

கேரளா ரயில் போக்குவரத்து திட்டம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டிஸ்

டெல்லி: கேரளா ரயில் போக்குவரத்து திட்டம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். பல கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி பிரதமரை பினராயி விஜயன் இன்று சந்திக்க உள்ள நிலையில் மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்கக் கோரி ஹிபிஎடன் மற்றும் பிரதாபன் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மணிப்பூர் அரசு அலுவலகங்களுக்கு வாரத்தில் 5 நாள் மட்டும் பணி

இம்பால்: மணிப்பூர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று முதல்வராக பிரேன் சிங் மீண்டும் பொறுப்பேற்ற நிலையில், அமைச்சரவையின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் சனி, ஞாயிறு ஆகிய2 நாட்கள் விடுமுறை என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசுஅலுவலகங்கள் 5 நாள் மட்டுமே செயல்படும் என்ற அறிவிப்பால் அரசு ஊழியர்களின் பணி மற்றும்உற்பத்தித் திறன் மேம்படும். 2 நாள்விடுமுறையில் அவர்கள் … Read more

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220 ஆக உயர்த்த திட்டம்

இந்தியாவில் தற்போது உள்ள 140 விமான நிலையங்களை 220 ஆக அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிகரிக்க உள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர்ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் 66 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மக்களவையில் பேசிய அவர் கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இப்போது நிலைமை மாறியிருப்பதால், விமானப் போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். கடந்த ஏழு நாட்களில் சராசரியாக தினமும் மூன்று … Read more

இந்தியாவில் தினசரி பாதிப்பு 3-வது நாளாக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து கடந்த 21-ந் தேதி 1,549 ஆக இருந்தது. மறுநாள் 1,581ஆகவும், நேற்று 1,778 ஆகவும் உயர்ந்த நிலையில், 3-வது நாளாக இன்றும் பாதிப்பு உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரம் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரேநாளில் 2,531 பேர் நலம் … Read more

பத்திரிகையாளரை தாக்கிய விவகாரம் சல்மான்கானுக்கு சம்மன்

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2019 ஏப்ரல் 24ம் தேதி மும்பை தெருக்களில் சைக்கிளில் சுற்றித் திரிந்தபோது, ​​பத்திரிகையாளர் அசோக் பாண்டே என்பவர் தனது மொபைல் போனில் அவரை வீடியோ எடுத்தார். இதற்காக சல்மானின் பாதுகாவலரிடமும் அசோக் பாண்டே அனுமதி பெற்றிருந்தார். ஆனால் சல்மான் கான் அவர் வீடியோ எடுப்பதை பார்த்தவுடன், கோபத்தில் அசோக் பாண்டேவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக டிஎன் நகர் காவல் நிலையத்தில், சல்மான் கான் மீது அசோக் … Read more