பிர்பும் வன்முறை; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்; அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என உறுதி

டெல்லி: பிர்பும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை  பிரதமர் மோடி தெரிவித்தார். வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என கூறினார். குற்றவாளிகளை கைது செய்ய மேற்கு வங்க அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க ஒன்றிய அரசு தயார். மாநில அரசு உரிய  நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இதுபோன்ற குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்களையும் மன்னிக்கக் கூடாது எனவும் கூறினார்.  மேற்கு வங்காள மாநிலம்  பிர்பும் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் … Read more

திரையரங்குகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் ஒலிக்கிறது – மெகபூபா முஃப்தி கவலை

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் ஒலிக்கிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகள் தீவிரவாதிகளால் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இந்தக் கதைக்களத்தை மையமாக வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள … Read more

மேற்கு வங்க வன்முறைச் சம்பவம் | மம்தா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் – பிரதமர் மோடி உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஒருவர் குண்டு வீசிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தாமாக … Read more

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் வீர மரணம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் வீரமரணமடைந்தார். ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஜூனிமர் சௌரா பகுதியில் நேற்று தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் காவலர் அமீர் ஹூசைன் என்பவர் வீரமரணமடைந்தார். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பியோடி தலைமறைவான 3 தீவிரவாதிகளை, பாதுகாப்புப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். Source link

மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையின் சடலம்- தாய் கைது

புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள சிராக் டில்லி பகுதியில் வசித்து வந்த டிம்பிள் என்ற 26 வயது பெண், சில நாட்களுக்கு முன் தனது 2 மாத பெண் குழந்தையை காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்துவதற்காக வீட்டிற்கு வந்தபோது குழந்தை கிடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.  உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக  பேசி உள்ளனர். இதையடுத்து, … Read more

வடிகாலில் குதித்து சுத்தம் செய்த ஆம்ஆத்மி கவுன்சிலரை பாலில் குளிப்பாட்டிய மக்கள்: ெடல்லி நகராட்சி தேர்தல் நெருங்குவதால் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லி நகராட்சி தேர்தல் நெருங்குவதால் வடிகாலில் குதித்து சுத்தம் செய்த ஆம்ஆத்மி கவுன்சிலரை டெல்லி மக்கள் பாலில் குளிப்பாட்டிய சம்பவம் நடந்தது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி வரலாற்று வெற்றியை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான அரசியல் … Read more

‘பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்க இதுதான் வழி’- கிண்டலாக பேசிய சுப்ரியா சூலே எம்.பி

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் தேர்தல் வரட்டும் என்று மக்களவையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே கூறினார். பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை கிண்டலடித்துள்ள தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே, தேர்தல்கள்தான் விலைவாசியை கட்டுக்குள் வைக்கும் என்று கூறியுள்ளார். “ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடக்கட்டும். அப்போது தான் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயராமல் இருக்கும்.” என்று எரிபொருள் விலை உயர்வு … Read more

தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட வருவாயை பண்டிட் குழந்தைகளின் கல்விக்கு வழங்கலாம்: ம.பி. ஐஏஎஸ் அதிகாரி வேண்டுகோள் – இயக்குநர் அக்னிஹோத்ரி பதில்

மும்பை: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படவருவாயை பண்டிட் குழந்தைகளின் கல்விக்கு வழங்கலாம் என்று மத்திய பிரதேச ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டதை மையமாக கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்துநேர்மறையாகவும் எதிர்மறை யாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மத்திய பிரதேச பொதுப்பணித் துறை துணை செயலாளராக பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான், … Read more

மும்பை – நாக்பூர் இடையே 701 கி.மீ. தொலைவுக்கு 6 வழி விரைவுச் சாலை..

நாட்டிலேயே முதன்முறையாக மும்பை – நாக்பூர் விரைவுச்சாலையில் காட்டு விலங்குகள் செல்வதற்காகப் பல இடங்களில் பசுமைப் பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தின் மும்பை – நாக்பூர் நகரங்களிடையே 701 கிலோமீட்டர் தொலைவுக்கு 6 வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. காட்டுப் பகுதிகளில் விலங்குகள் சாலையைக் கடக்க வசதியாக 9 இடங்களில் பசுமைப் பாலங்கள் எனப்படும் மேம்பாலங்களும், 17 இடங்களில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் காட்டு விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்க இத்தகைய வசதிகள் … Read more

8 பேர் உயிரோடு எரித்துக் கொலை- வன்முறை நடந்த பகுதிக்கு நாளை செல்கிறார் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் பிர்மம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர், கொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதில், 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. மம்தா பானர்ஜியை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மத்திய விசாரணைக்குழு விசாரணை … Read more