மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துக்கு எதிராக கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம்
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிடும் எனக் கூறி இத்திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை முன்னிறுத்தி, கர்நாடகாவின் முயற்சிக்கும் எதிராக தமிழக சட்டப்பேரவையில் நேற்று … Read more