எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ் – மாநில அரசியலில் கவனம் செலுத்த திட்டம்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அகிலேஷ் யாதவ், செவ்வாய்க்கிழமையன்று சபாநாயகர் ஓம் பில்லாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இனி அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநில அரசியலில் அதிக கவனம் செலுத்துவார் என சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அவருடைய முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளராக … Read more

ராணுவத்தில் சேர்வதற்காக இரவில் 10 கி.மீ. ஓடி பயிற்சி எடுக்கும் இளைஞர்: திரைப்பட இயக்குநர் பகிர்ந்த வீடியோ வைரல்

புதுடெல்லி: தனியார் நிறுவன ஓட்டலில் பணியை முடித்த பின்னர் இரவு 12 மணிக்கு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடி பயிற்சி எடுக்கும் இளைஞர் குறித்த வீடியோவை திரைப்பட இயக்குநர் வினோத் காப்ரி சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள பரோலா கிராமத்தில் வசித்து வருகிறார் 19 வயது இளைஞர் பிரதீப் மெஹ்ரா. இவர் நொய்டாவிலுள்ள மெக்டொனால்ட் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 8 மணிக்கு பணிக்கு … Read more

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்: நகர்புற பகுதிகளில் 28 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக இன்று அளித்த பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித்  துறை இணை மந்திரி  சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளதாவது: அனைவருக்கும் வீடு எனும் இலக்கை எட்டுவதற்காக பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தை 2016 ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி முதல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி சிறந்த வீடுகளைக்  கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் … Read more

உலகில் காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 4வது முறையாக டெல்லி முதலிடம்

டெல்லி: உலகில் காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 4வது முறையாக டெல்லி முதலிடம் என சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாசுபட்ட முதல் 50 நகரங்களில் இந்தியாவை சேர்ந்த 35 நகரங்கள் உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உங்கள் அறிக்கையை கேட்கவில்லை” – ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு மம்தா காட்டமான பதில்

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற தீவைப்பு சம்பவத்தில் 8 பேர் பலியானது குறித்து ஆளுநர் ஜக்தீப் தங்கர் வெளியிட்ட வீடியோவிற்கு “உங்கள் அறிக்கையை கேட்கவில்லை” என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமான பதிலை அளித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்குப் பழிவாங்கும் வகையில், இன்று காலை வங்காளத்தின் பிர்பூமில் கிட்டத்தட்ட ஒரு டஜன் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. எட்டு பேர் இந்த சம்பவத்தில் … Read more

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால பொருட்களை பார்வையிட்டார் பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால அரிய கலைப் பொருட்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் உட்பட 29 பழங்காலப் பொருட்களை ஆஸ்திரேலி யாவில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது. இந்த பழங்காலப் பொருட்கள் ராஜஸ்தான், குஜராத்,மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை. ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு இந்தியா கொண்டுவரப்பட்ட 29 பொருட்களும் சிவன், சக்தி, விஷ்ணு, ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் … Read more

நாட்டின் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

நாட்டின் 25 மாநிலங்களில் உள்ள 68 நகரங்களில் 2 ஆயிரத்து 877 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 எக்ஸ்பிரஸ் சாலைகளின்  ஓரங்களில் ஆயிரத்து 576 சார்ஜிங் மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அவர் தெரிவித்தார். மின்சார வாகன பயன்பாட்டுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் சார்ஜிங் மையம் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் … Read more

இமாச்சலபிரதேச தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை

புதுடெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ் தலைமையை மீண்டும் விமர்சனம் செய்தனர். தேர்தல் தோல்வி தொடர்பாக 5 மாநில தலைவர்களை பதவி விலக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலகினார்கள். இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார். … Read more

பாஜ நிர்வாகி, மகளுடன் தற்கொலை

திருவனந்தபுரம்: குடும்ப தகராறு காரணமாக பாஜ நிர்வாகி மகளுடன் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாம்பாடி பகுதியை வந்தவர் வினீஷ் (49). மீனடம் பகுதி பாஜ செயலாளராக இருந்தார். அவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியின் மகள் பார்வதி (17). மகன் விஷ்ணு. இதற்கிடையே நேற்று முன்தினம் வினீஷ், மகள் பார்வதியை அழைத்துக்கொண்டு இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே குழித்தாளுவில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் … Read more

LIC பங்கு விற்பனை – மத்திய அரசின் திருத்தங்களை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் வகையில் நிதி சட்டத்திலும், எல்.ஐ.சி. சட்டத்திலும் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. பங்குகளை விற்க வழிவகை செய்யும் வகையில் நிதிச் சட்டத்திலும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சட்டத்திலும் மத்திய அரசு சில திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து எல்.ஐ.சி. பாலிசிதாரரான பொன்னம்மாள் … Read more