LIC பங்கு விற்பனை – மத்திய அரசின் திருத்தங்களை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் வகையில் நிதி சட்டத்திலும், எல்.ஐ.சி. சட்டத்திலும் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. பங்குகளை விற்க வழிவகை செய்யும் வகையில் நிதிச் சட்டத்திலும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சட்டத்திலும் மத்திய அரசு சில திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து எல்.ஐ.சி. பாலிசிதாரரான பொன்னம்மாள் … Read more

“கள யதார்த்தத்தில் இருந்து கட்சி விலகியிருக்கிறது” – ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி அடிப்படை உண்மைகளில் இருந்து விலகி இருப்பதாகக் கூறி, அக்கட்சியின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத் தலைவர் விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் கரண் சிங்கின் மகனும், ஜம்மு – காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “ஜம்மு – காஷ்மீர் மக்களின் உணர்வுகள் … Read more

மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதி – பசவராஜ் பொம்மை

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களுருவில் அனைத்து கட்சி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சட்டப்பூர்வமாக எந்த மதிப்பும் இல்லை என்றார். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் … Read more

பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் எரித்துக் கொலை – மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணை தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.  நேற்று இரவு பைக்கில் வந்த 4 பேர் ஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவரது கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான … Read more

டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அமித்ஷாவுக்கு அழைப்பு

டெல்லி: டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.

இந்தியாவில் கிளைகள் தொடங்க இத்தாலி, பிரான்ஸ் உயர் கல்வி மையங்கள் ஆர்வம்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க தயங்கிவந்த நிலையில், தற்போது இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த உயர் கல்வி மையங்கள் இங்கு தங்கள் கல்வி மையங்களைத் திறக்க ஆர்வம் காட்டியுள்ளன. தேசிய கல்விக் கொள்கையின்படி, உலகத் தரம் வாய்ந்த கல்வி மையங்களின் கிளைகளை இந்தியாவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டின்போது அறிவித்தார். குஜராத்தில் உருவாக்கப்படும் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (கிஃப்ட்) மூலம் வெளிநாடுகளில் உள்ள தரம்வாய்ந்த … Read more

ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் இந்தியா தடுமாறுகிறது – ஜோ பைடன்

ரஷ்ய விவகாரத்தில் இந்தியா தடுமாறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டியுள்ளார். வாஷிங்டனில் தொழிலதிபர்களுடனான சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிப்பதில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஓரணியில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், குவாட் கூட்டமைப்பிலும் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளதாகவும், இந்தியா மட்டுமே விதிவிலக்காக உள்ளதாகவும் பைடன் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் நேட்டோவில் பிரிவினை ஏற்படுத்தலாம் என புதின் எதிர்ப்பார்த்தாகவும், ஆனால், இந்தளவு ஒற்றுமையாக இருக்கும் என … Read more

உத்தவ் தாக்கரேவின் மைத்துனருக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனருக்குச் சொந்தமான நிறுவனங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இதில், உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு சொந்தமான ரூ.6.45 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.   முன்னதாக, உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் சிவசேனாவை சேர்ந்த அனில் பராப் ஆகியோருக்கு நெருங்கிய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்காளம் … Read more

125வது வயதில் பத்மஸ்ரீ விருது பரஸ்பரம் யோகா சாமியார் – மோடி மரியாதை

புதுடெல்லி: தனது 125வது வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா சாமியாரும் மோடியும் பரஸ்பரம் காலில் விழுந்து மரியாதை செய்து கொண்டனர். குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று பல்வேறு சாதனையாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். அப்போது காசியை சேர்ந்த யோகா குரு சுவாமி சிவானந்தா (125), தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைப் பெறுவதற்கு முன் அரங்கத்தில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி பார்த்து கைகூப்பி வணங்கினார். பின்னர் திடீரென மோடியின் அருகே சென்று அவரது … Read more

பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை! 6 மணி நேரம் போக்கு காட்டிய பின் சிக்கியது!

புனேவில் உள்ள பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் 3 வயது ஆண் சிறுத்தை நுழைந்தது. ஆறு மணி நேரப் போராட்டத்திற்கு பின் சிறுத்தையை பத்திரமாக வெளியேற்றினர் வனத்துறையினர். உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்புகளுக்குள் வன விலங்குகள் நுழைந்த சம்பவங்கள் பல உண்டு. ஆனால் முதன்முறையாக தொழிற்சாலைக்குள் அதிரடி விசிட் கொடுத்திருக்கிறது ஒரு சிறுத்தை. அதுவும் சாதாரண தொழிற்சாலை அல்ல! சொகுசு கார்களை தயாரிப்பதில் உலகளவில் முன்னணியில் இருக்கும் பென்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை அது! புனேவில் உள்ள அந்நிறுவனத்தின் … Read more