தமிழக அரசின் தீர்மானத்திற்கு மதிப்பில்லை – கர்நாடக அமைச்சர் சர்ச்சை கருத்து

காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றும் என்று குறிப்பிட்டுள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்பதால், மத்திய அரசு அதற்கு அனுமதி … Read more

2018 முதல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது – மக்களவையில் மந்திரி தகவல்

புதுடெல்லி: பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து மக்களவையில் எம்.பி. ரஞ்சன்பென் தனஞ்செய் பட் இன்று கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு: கடந்த 2018-ம் ஆண்டு முதல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 366 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தளங்களில் பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர். சர்வதேச மற்றும் … Read more

சித்தூர் அருகே இன்று காலை கார் கவிழ்ந்து விபத்து 30 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருமலை: சித்தூர் அருகே இன்று காலை செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கடத்தி வந்த 30 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் அதிகளவு செம்மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றை கடத்தல்காரர்கள் கூலியாட்களை வைத்து வெட்டி கடத்திச்செல்கின்றனர். இந்த செம்மரக்கட்டைகள் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இதில் சர்வதேச கடத்தல்காரர்கள் செயல்படுகின்றனர். இதற்காக ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள அப்பாவி மக்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி செம்மரக்கடத்தலில் ஈடுபட வைக்கின்றனர். … Read more

மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ்: எதிர்க்கட்சித் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட திட்டம்

லக்னோ: உ.பி.யில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தான் வகித்து வந்த மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். உத்தர பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக மட்டும் 255 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவு. அதேநேரத்தில் கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை கைப்பற்றிய சமாஜ்வாதி கட்சி, இந்தத் … Read more

பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலைக்கு பழி வாங்க கொடூரச் செயல்.. 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை..

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள், வீடுகளுக்கு தீவைத்து 10 பேரை உயிரோடு எரித்துக் கொலைசெய்தனர். அம்மாநிலத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள பக்டுய் என்ற கிராமத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவரான பது ஷேக் என்பவர் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள், தங்களுடைய எதிர்தரப்பினரின் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைத்தனர். இதனை அறிந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்ற நிலையில், சம்பவ … Read more

இதயம், சிறுநீரகத்தில் பிரச்சினை- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் லாலு பிரசாத் யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்தததை அடுத்து ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் (ஆர்ஐஎம்எஸ்) இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக, லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தின் ஐந்தாவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.60 லட்சம் … Read more

60 கி.மீ. ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை… ஒன்றிய அரசு அறிவிப்பால் தமிழகத்தில் 6 சுங்கச்சாவடிகள் மூடப்படும் என எதிர்பார்ப்பு!!

டெல்லி : தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் பல சுங்கச் சாவடிகள் விதிகளை மீறி செயல்படுகிறது என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008 சட்டப்படி, 60 கி.மீ. குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல் திருமாவளவன் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை … Read more

பாஜகவிற்கு வாக்களித்ததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக முஸ்லிம் பெண் புகார்: முத்தலாக் மிரட்டல் விடுத்ததாக கணவர் மீது உ.பி போலீஸ் வழக்குப் பதிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பாஜகவிற்கு வாக்களித்ததால் ஒரு முஸ்லிம் பெண் தன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவருக்கு முத்தலாக் அளிப்பதாக மிரட்டியதாகவும் கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமுள்ள மாவட்டம் பரேலி. இதன் பவுண்டியா பகுதியிலுள்ள இஜாஜ்நகரில் தன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிப்பவர் உஜ்மா அன்சாரி. இவர், அப்பகுதியின் பாராதாரி காவல் நிலையத்தில் தன் கணவர் மீது கடந்த வாரம் ஒரு புகார் அளித்திருந்தார். … Read more

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் – மாநில அரசு அதிரடி ஆக்‌ஷன்!

அலுவலகங்களுக்கு தாமதமாக வந்த அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்து மாநில அரசு வழங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் நவி மும்பை மாநகராட்சி நிர்வாகத்தில், அரசு ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் இரண்டு முறை நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஊழியர்கள் பலர் தாமதமாக வருவது உறுதியாகியது. … Read more

பிரதமர் மோடியை வீழ்த்த புதிய அணி: தேர்தல் வியூகம் வகுப்பதற்கு பிரசாந்த் கிஷோருக்கு ரூ.300 கோடி

ஐதராபாத்: 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணியை உருவாக்க வேண்டும். மேற்கு வங்காள முதல் -மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருவருமே தங்களை மாற்று தலைவராக முன்னிறுத்தி கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். மம்தா பானர்ஜி காங்கிரஸ் அல்லது மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி … Read more