உ.பி. மதரஸாக்களில் குறைந்துவரும் மாணவர்கள்: 2016-ல் 4 லட்சமாக இருந்தவர்கள் 1.2 லட்சமாகக் குறைந்தனர்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் மதரஸாக் களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முன்ஷி எனும் எட்டாம் வகுப்பு மற்றும் மவுல்வி எனும் பத்தாம் வகுப்பிற்கான சான்றிதழ்கள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முன்ஷி, மவுல்வி படிப்பு முடித்து சான்றிதழ் பெற்ற வர்களுக்கு, இதர பொதுக் கல்விக் கானப் பள்ளிகளில் உ.பி. அரசின் விதிப்படி, பிளஸ் 2 வகுப்பில் சேர்க்க வேண்டும். ஆனால், இந்த அனுமதியை அரசு பள்ளிகள் மட்டும் அளிக்கின்றனவே தவிர தனியார் பள்ளிகள் அளிப்பதில்லை. … Read more

ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த கரடி.. பயத்தில் மக்கள்..

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா ரயில் நிலையத்தில், கரடி ஒன்று சுற்றித் திரிந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை பகுதியில் நேற்றிரவு கரடி சுற்றித் திரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வருவதற்குள் அந்த கரடி அங்கிருந்து மாயமான நிலையில், அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் கரடி சுற்றித்திரிந்ததை அங்கிருந்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், அது … Read more

பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை விடுமுறை- பஞ்சாப் அரசு அறிவிப்பு

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அபாரமாக வெற்றிப் பெற்று காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டி ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றிப் பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட விழாவில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். அப்போது வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், தனது பதவியேற்பு விழாவில் கலந்துக் … Read more

எம்எல்சி பதவியை ராஜினாமா செய்த யோகி: 25ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பு

லக்னோ: வரும் 25ம் யோகி ஆதித்யநாத் உ.பி முதல்வராக பதவியேற்க உள்ளதால் தனது எம்எல்சி பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தைப் பெற்றதையடுத்து, தற்காலிக முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார். இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்  சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வரும் 25ம் தேதி மாலை 4 … Read more

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கடந்த 2021 நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளை ஒன்று ரூ.50 அதிகரித்துள்ளது. 2021 அக்டோபர் 6 ஆம் தேதிக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் … Read more

நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பற்றிய விவரங்கள் இல்லை- தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் எதுவும் எங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகமை தகவல் அரியும் உரிமை சட்டத்தில் பதில் அளித்துள்ளது. நாது முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவும் நீட் தேர்வால் கனவாகவே போய்விடுகிறது என நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒரு பக்கம் போராடி வருகின்றனர். இதற்கிடையே, கிராமப்புற மாணவர்கள் எத்தனை பேர் … Read more

சாலை கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: சாலை கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். சாலை பாதுகாப்பு விதிகளை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலம் தமிழகம். சாலை பாதுகாப்பில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்கியதால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?

வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது தொடர்பாக மக்களவையில் பதிலளித்துள்ள மத்திய வனத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, 2020ம் ஆண்டு இந்தியாவில் பீகார், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் புலிகள் தாக்கி 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2021ம் ஆண்டில் 14 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை 2020ம் ஆண்டில் புலி தாக்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 2021ம் ஆண்டில் … Read more

சாலையோர வியாபாரிகளுக்கு பிணையில்லா வங்கிக் கடன்: தமிழகத்தில் 1,59,065 பேர் பயன்

புதுடெல்லி: பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,59,065 பேர் பிணையில்லா கடன் பெற்று பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியதாவது: கோவிட் சமயத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்குவதற்காக, பிணையில்லாத பணி மூலதனக் கடனை எளிதாக்குவதற்காக, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பிரதமரின் சாலையோர … Read more

இந்தியாவில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு 33 பேர் பலியாகியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 23 ஆயிரத்து 913 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link