வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளருக்கு நேர்ந்த துயரம் – பதைபதைக்க வைக்கும் காட்சி

ஆந்திர மாநிலத்தில் காவல் ஆய்வாளர் மீது கார் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில், முஷுராபாத் காவல் ஆய்வாளர் ஜஹாங்கீர் யாதவ், வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற சொகுசு கார், ஜஹாங்கீர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். காயங்களுடன் உயிர் பிழைத்த காவல் ஆய்வாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அண்மை காலங்களில் இது போன்ற சாலை விபத்துகள் … Read more

குடியரசுத் தலைவர், பிரதமரை சிரம் தாழ்ந்து வணங்கிய 126 வயது சுவாமி சிவானந்தா

உத்தர பிரதேசம் வாரணாசியை சேர்ந்த சுவாமி சிவானந்தாவுக்கு 126 வயதாகிறது. யோகா குருவான அவர் இந்த வயதிலும் நாள்தோறும் யோகாசனம் செய்து வருகிறார். அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. விருதை பெறுவதற்காக, சுவாமி சிவானந்தா யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நடந்து வந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை பார்த்ததும், அவருக்கு முன்பாக தரையில் முழங்காலிட்டு விழுந்து வணங்கினார். அப்போது பிரதமரும் சிரம் தாழ்ந்து வணங்கி அவருக்கு மரியாதை செலுத்தினார். விருது பெறுவதற்கு முன்பாக … Read more

மெர்சிடஸ் பென்ஸ் கார் ஆலைக்குள் புகுந்த குட்டி சிறுத்தை புலியால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் புகுந்த குட்டி சிறுத்தை புலியால் பரபரப்பு ஏற்பட்டது.  Mercedes-Benz ஆலை வளாகத்திற்குள் சிறுத்தை புலி சுற்றித்திரிவதை பார்த்த காவலாளி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, ஆலை ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு பணிகள் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க மருந்து செலுத்தி 3 வயது ஆண் சிறுத்தை புலியை … Read more

மற்ற திட்டங்களை விட வருங்கால வைப்புநிதிக்கு அதிக வட்டி: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் நிதி ஒதுக்க மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான (இ.பி.எப்.) வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைக்க இ.பி.எப்.ஓ. அமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அது இன்னும் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு வரவில்லை. வட்டி குறைப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கவலைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், சுகன்யா சம்ரிதி யோஜனாவுக்கு 7.6 சதவீதமும், … Read more

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களை சேர்ந்த 29 பழங்கால சிலைகள் மீட்பு: பிரதமர் மோடி ஆய்வு

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட  சிலைகள் உள்ளிட்ட 29 பழங்கால பொருட்களை ஒன்றிய அரசு மீட்டு டெல்லி கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட  பழங்கால சிலைகளை கண்டுபிடித்து அவற்றை மீட்பதற்கு தொல்லியல் ஆராய்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தொல்லியல் துறை தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 1976ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மொத்தம் 13 பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டன. 2014ம் ஆண்டு முதல் … Read more

நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரை புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்.!

நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரை புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர், வரும் அக்டோபருக்குள் புதிய நாடாளுமன்றத்தின் கட்டட பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை 480 கோடி ரூபாய் செலவில் 44 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.. செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் … Read more

நீண்ட இழுபறிக்குப் பின் உத்தரகாண்ட், கோவா பாஜ முதல்வர்கள் தேர்வு

டேராடூன்: நீண்ட இழுபறிக்குப் பின் உத்தராண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமியையும், கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்தையும் பாஜ எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். மணிப்பூரில் பிரேன் சிங் புதிய முதல்வராக பதவியேற்றார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜ மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதில், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருப்பதாக … Read more

டெல்லியில் நடந்த விழாவில் 64 பேருக்கு பத்ம விருதுகள்: முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத்தின் பத்ம விபூஷண் விருதை மகள்கள் பெற்றனர்

புதுடெல்லி: பத்ம விபூஷண் உள்ளிட்ட பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை அவரது மகள்கள் பெற்றுக் கொண்டனர். கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான பத்ம … Read more

நிலக்கரி ஊழல் வழக்கு மம்தாவின் மருமகனிடம் 8 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த நிலக்கரி ஊழல் விவகாரத்தில் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜி, பல நூறு கோடி ரூபாயை சட்ட விரோதமாக பெற்று உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அவர் மீது பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கும், … Read more

காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – மக்களவையில் பாஜக எம்.பி.கோரிக்கை

புதுடெல்லி பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காஷ்மீரில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பிரச்சினையை பாஜக உறுப்பினர் சுனில் குமார் சிங் எழுப்பினார். 1984ம் ஆண்டு முதல் 1989 ஆண்டு வரை காஷ்மீரில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதல் குறித்து மத்திய அரசு விசாரணையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  இதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார். மேலும் 1989 ஆண்டு … Read more