மத்திய பல்கலை.களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: யுசிஜி தகவல்

டெல்லி: மத்திய பல்கலை.களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுசிஜி தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு மதிப்பெண், வெயிட்டேஜ் முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது உணவு  தெரிவித்துள்ளது.

Fastag இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்காதீர்: மக்களவையில் நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: ”புதிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்த தெளிவு, மத்திய பட்ஜெட்டில் இல்லை” என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி.யான கே.நவாஸ்கனி மக்களவையில் விமர்சனத்தை முன்வைத்தார். மக்களவையில் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கான மானியக் கோரிக்கையில் இன்று ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்.பி. நவாஸ்கனி உரையாற்றியனார். அப்போது அவர் பேசியது: “நாட்டின் வளர்ச்சிக்கும், மாநிலங்களின் வளர்ச்சிக்கும், ஒவ்வொரு பகுதிகளின் வளர்ச்சிக்கும் சாலைப் போக்குவரத்து மேம்பாடும் நெடுஞ்சாலை திட்டங்களும் அவசியமானது. மற்ற போக்குவரத்துகளைவிட சாலை போக்குவரத்து சாமானிய மக்கள் … Read more

கர்நாடகா : கேஸ் சிலிண்டர் வெடித்து அண்ணன், தம்பி உயிரிழப்பு

கர்நாடக மாநிலத்தில், பழைய பொருட்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனர். உடுப்பி நகரில் ரஜாக், ரஜாப் ஆகிய இருவர் நடத்தி வந்த பழைய பொருட்கள் கிடங்கில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்ததால் கிடங்கில் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தீ வேகமாகப் பரவியதால், உள்ளே சிக்கி கொண்ட இருவரும் வெளியே வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூன்று ஊழியர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Source link

கேரள லாட்டரியில் சென்னையை சேர்ந்த வங்கி பெண் அதிகாரிக்கு ரூ.25 லட்சம் பரிசு

திருவனந்தபுரம்: சென்னையை சேர்ந்தவர் சுப்பராவ் பத்மம். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி கேரளாவில் உள்ள கோவில்களுக்கு புனித யாத்திரை செல்வார். அவ்வாறு செல்லும்போது ஆலுவாவில் உள்ள சாலையோர கடையில் கேரள லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். அந்த கடையை சுமிஜா என்ற பெண் நடத்தி வருகிறார். சுப்பராவ் பத்மம் வாங்கும் லாட்டரி சீட்டுகள், விற்பனையாளர் சுமிஜாவிடம் இருக்கும். அதற்கு பரிசு … Read more

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர் சேர்க்கைக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் … Read more

’மதக் கருத்துகளை திணிக்க கூடாது’ – பகவத்கீதையை பள்ளிகளில் பாடமாக்க கல்வியாளர்கள் எதிர்ப்பு

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் பள்ளிகளில் பகவத்கீதையை பாடமாக கொண்டு வருவதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாகவும் மாறிவருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத்தில் வரும் கல்வியாண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணம் சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடகாவிலும் இப்பாடம் சேர்க்கப்படும் என்று அம்மாநில முதல்வர் … Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல், பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல் உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதை உடனடியாக வழங்கக் கோரி மத்திய அரசுக்கு அரசு … Read more

நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு… இராணுவத்திலும் இடம் உண்டு : நம்பிக்கையுடன் ஓடு ராஜா… பையன பாருங்க பைக்கர்ஸ்

பெற்றோர் வாங்கிக் கொடுத்த 2 லட்ச ரூபாய்க்கு பைக்கை வீலிங் செய்து போலீசிடம் பறி கொடுக்கும் ஊதாரி இளைஞர்கள் மத்தியில், குடும்பத்தின் வறுமையான சூழலிலும், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் வேலை பார்த்துக் கொண்டே தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி பயிற்சி செய்யும் 19 வயது சிறுவனின் விடா முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. பெற்றோர் சம்பாத்தியத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து அதிவேக பைக்குகளை அடம் பிடித்து … Read more

விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன் – பிரதமர் மோடி

புதுடெல்லி: சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 132 பேருடன் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து கடுமையான புகை எழுந்துள்ளது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.  இந்நிலையில், சீனாவில் 132- பேருடன் சென்ற விமானம் … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டு 5,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.