2021ல் 30 லட்சத்துக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன – மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில் வருமாறு: கடந்த 2020-21ம் ஆண்டில் வளர்ச்சி பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்டவற்றில் மொத்தம் 30 லட்சத்து 97 ஆயிரத்து 721 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை பல்வேறு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அந்தந்த மாநில அரசுகளே வழங்கியுள்ளன. இதில் தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த ஆண்டு … Read more

மணிப்பூர் மாநில முதல்வராக இரண்டாம் முறையாக பதவியேற்றார் பிரேன் சிங்

இம்பால்: மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாம் முறையாக பிரேன் சிங் பதவியேற்றார். இம்பாலில் பிரேன் சிங்கிற்கு மாநில ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

மூவர்ணக் கொடியின் இடத்தை காவிக்கொடி பிடிக்கும் – ஆர்எஸ்எஸ் பிரமுகரின் பேச்சால் சர்ச்சை

மங்களுரூ: இந்துக்கள் ஒன்றிணைந்தால், ‘பக்வா த்வாஜ்’ (காவிக் கொடி) நாட்டின் தேசிய கொடியாக மாறும் என சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான கல்லாட்கா பிரபாகர் பட் தெரிவித்துள்ளார். இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, மங்களூருவின் புறநகரில் உள்ள குட்டார் பகுதியில் இருக்கும் விஷ்வ இந்து பரிஷித் (விஎச்பி)-ன் கர்னிக்கா கோரகஜ்ஜா ஆலையம் சார்பில் மாபெரும் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லாட்கா பிரபாகர் பட் பேசுகையில், … Read more

இந்தியாவின் பழைமையான கலைப்பொருட்களைத் திருப்பிக் கொடுத்ததற்கு ஆஸ்திரேலியாவுக்கு நன்றி கூறிய பிரதமர்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட கலைப்பொருட்களை ஆஸ்திரேலியா திருப்பிக் கொடுத்ததற்கு நாட்டு மக்களின் சார்பில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்திய – ஆஸ்திரேலிய நாடுகளிடையான மாநாட்டில் இரு நாட்டுப் பிரதமர்களும் காணொலியில் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் வணிகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி,  அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளிடையான உறவுகளில் குறிப்பிடத் தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். … Read more

திருப்பதியில் இன்று வெளியிடப்பட்ட தரிசன டிக்கெட்டுகள் 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்டது. திங்கள் முதல் புதன்கிழமை வரை தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. வார இறுதி நாட்களான வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் 8,40,000 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1 மணி நேரத்தில் அனைத்து … Read more

தமிழகத்தில் 2,214 கி.மீ. தூரத்திலான நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்துக!: ஒன்றிய அரசுக்கு திமுக எம்.பி. வேலுச்சாமி கோரிக்கை..!!

டெல்லி: தமிழகத்தில் 2,214 கி.மீ. தூரத்திலான நெடுஞ்சாலை பணிகளை ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. வேலுச்சாமி கோரிக்கை விடுத்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி. வேலுச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்த இன்னிங்க்ஸ் அரசியலில்.. மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ஹர்பஜன் சிங்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக நியமித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள எம்.பி.க்கள் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 31ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. … Read more

தொகுதியில் 18 மணி நேரம் வேலை செய்ய பஞ்சாப் மாநில எம்எல்ஏ.க்களுக்கு இலக்கு: முதல்வர் பகவந்த் மான் நடவடிக்கை

சண்டிகர்: பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களுக்கு முதல்வர் பகவந்த் மான் இலக்கு நிர்ணயித்துள்ளார். பஞ்சாபில் மொத்தம் உள்ள 117சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். கடந்த சனிக்கிழமை பெண் ஒருவர் உட்பட 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். பஞ்சாப் அமைச்சரவையில் 18 அமைச்சர்கள் இடம்பெறலாம். எனினும், தனது அமைச்சரவையை சிறியதாக வைத்துக் கொள்ள பகவந்த் மான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மொகாலியில் ஆம் … Read more

அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் – வானிலை மையம்

12 மணி நேரத்தில் புயல் – மீனவர்களுக்கு எச்சரிக்கை அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் – வானிலை மையம் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் … Read more

கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவன் அடித்து கொலை

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிபள்ளியை சேர்ந்தவர் உதய் கிரண் (வயது 8). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அங்குள்ள மரத்தில் மர்மமான முறையில் சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கினார். கலிகிரி போலீசார் சிறுவனின் உடலை பரிசோதனை செய்த போது சிறுவனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த … Read more