"எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என மதிப்பிடவே முடியவில்லை"- மோடி பேச்சு

இந்தியா சுயசார்புடன் திகழ்வதன் அவசியத்தை தற்போதுள்ள சர்வதேச சூழல்கள் உணர்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது அவர், “கொரோனா காரணமாக உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இதைத் தொடர்ந்து வந்துள்ள உக்ரைன் – ரஷ்யா போர் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய உலகில் எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என மதிப்பிட முடியாத நிலையே உள்ளது. … Read more

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் உடல் தாயகம் கொண்டுவரப்பட்டது: முதல்வர் பசவராஜ் அஞ்சலி

பெங்களூரு: உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் தாயகம் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா (வயது 21). இவர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கார்கிவ் நகரில் சிக்கியிருந்த நவீன் … Read more

ஹிஜாப் வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே, மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு … Read more

காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் மக்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றன: குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வரும் தலைவர்கள் ஜி-23 என அழைக்கப்படுகிறார்கள். ஜி-23-ல் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளும்தான் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றதற்கு பொறுப்பு. தி காஷ்மீரு் ஃபைல்ஸ் என்ற பாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் 1990-ம் ஆண்டு காஷ்மீர் பண்டிட்ஸ் வெளியேற்றப்பட்டது குறித்து எடுக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது அவ்வாறு தெரிவித்தார். மகாத்மா கா்நதி மிகப்பெரிய இந்து மற்றும் … Read more

மணிப்பூர் மாநில முதல்வராக என்.பிரேன் சிங் இன்று மாலை பதவி ஏற்பு

இம்பால்: மணிப்பூர் மாநில முதலமைச்சராக என்.பிரேன் சிங் இன்று மாலை 3 மணிக்கு பதவி ஏற்கவுள்ளார். 2ஆவது முறையாக முதல்வராக உள்ள பிரேன் சிங்கிற்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இம்பாலில் நேற்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக பிரேன் சிங் தேர்வானார்.

கொலையும் சில கடத்தல்களும் – 4 ஆண்டுகளாக போக்குகாட்டி வந்த பெண் கைது

கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 27 வயதான பெண்ணை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். 4வருடங்களாக காவல்துறை கண்ணில் சிக்காமல் போக்குகாட்டி வந்த நித்தி என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு சாகர் என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் நித்தி காவல்துறையினர் தேடி வந்தனர். 2018ம் ஆண்டு ஜாமீன் கிடைத்தபிறகு, அந்த பெண் மாயமானார். அவரை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. இந்நிலையில், காவல்துறைக்கு மர்ம நபர் … Read more

2-வது தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி இடைவெளி குறைப்பு

புதுடெல்லி: இரண்டாவது தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 181 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள்மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு 2 டோஸ்களாக செலுத்தப் படுகின்றன. கோவேக்சின் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளியிலும், கோவிஷீல்ட் தடுப்பூசி 12 முதல் 16 வார கால இடைவெளியிலும் … Read more

இந்தியாவில் தொடர்ந்து வீழ்ச்சி- கொரோனா ஒருநாள் பாதிப்பு 1,549 ஆக குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3-ம் அலை முடிவுக்கு வந்ததை அடுத்து தினசரி பாதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 390 ஆக உயர்ந்தது. பாதிப்பை போலவே கடந்த சில நாட்களாக தினசரி பலி எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. குறிப்பாக பல மாநிலங்கள் … Read more

உத்தராகண்ட் முதலமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி: கோவா முதலமைச்சர் யார்?.. திணறும் பாஜக..!

டொராடூன்: தேர்தல் முடிவுகள் வெளியாகி 12 நாட்கள் ஆகியும் இழுபறி நீடிக்கும் கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களை பாஜக இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே யோகி ஆதித்யநாத், மீண்டும் முதலமைச்சர் என உறுதியாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. … Read more

'போரைவிட டாலரே முக்கியம்' – உக்ரைனை விட்டு தப்பியோட முயன்ற முன்னாள் எம்.பி. மனைவி

உக்ரைன் எம்பியின் மனைவி 28 மில்லியன் டாலர்கள், 1.3 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் நாட்டை விட்டு வெளியேற முயன்றார். உக்ரைன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோட்விட்ஸ்கியின் மனைவி, சூட்கேஸ்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 மில்லியன் டாலர்கள் மற்றும் 1.3 மில்லியன் யூரோ பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து தப்பி ஜகார்பட்டியா மாகாணம் வழியாக ஹங்கேரிக்குள் நுழைய முயன்றாள். எவ்வாறாயினும், ஹங்கேரிய எல்லைக் காவலர்களால் எல்லையில் பணத்துடன் அவர் … Read more