பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து ராஜஸ்தானில் களமிறங்க ஆம் ஆத்மி திட்டம்

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி இப்போது ராஜஸ்தானில் களமிறங்க கவனம் செலுத்துகிறது. ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆம் ஆத்மி அமைப்பை பலப்படுத்த ஜெய்ப்பூரில் இரண்டு நாள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலப் பொறுப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங் மார்ச் 26- 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் நலக் கொள்கைகள் குறித்து மக்களுக்குத் … Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே செயல்பட வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக செயல்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.  கடந்த பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.07 சதவீதம் உயர்ந்தது. மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.11 சதவீதமாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் மற்றும் உணவு பொருட்கள் அல்லாதவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று அரசு வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி … Read more

உத்தரகாண்ட் மாநில புதிய முதல்வர் யார்? – நீடிக்கும் குழப்பம்; அமித்ஷா ஆலோசனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று  வருகிறது. உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பா.ஜ.க. 47 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. எனினும் காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்தார். இதனால் அந்த மாநில புதிய முதலமைச்சர் குறித்து குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் டேராடூனில் உத்தரகாண்ட் … Read more

இந்தியாவில் கரோனா பரவல் 4-வது அலைக்கு வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து

தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் துணை திரிபான பிஏ2 என்ற வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர சுகாதார சேவைகள் முன்னாள் இயக்குநரும் மாநில அரசின் தொழில்நுட்ப ஆலோசகருமான டாக்டர் சுபாஷ் சாலுங்கே கூறும்போது, “உலகின் மற்ற நாடுகளில் நடந்தது போல் இந்தி யாவில் கரோனா நான்காவது அலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாம் பாதுகாப்பை குறைத்துக் கொள்ள முடியாது. நான்காவது அலை பற்றி நமக்கு தெரியாத ஒரே … Read more

அந்தமான் அருகே நாளை புயல் உருவாகும்!

தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளைக் காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், நாளை மாலை புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இன்று காலை ஐந்தரை மணி நிலவரப்படி கார் நிக்கோபாருக்கு வடமேற்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும், போர்ட் பிளேருக்குத் தென்மேற்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியது. இது வடக்கு நோக்கி மேலும் நகர்ந்து வலுப்பெற்று அடுத்த 24 மணி … Read more

திருப்பதியில் ஒரே நாளில் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி: கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதியில் கடந்த 2 ஆண்டாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொற்று பரவல் குறைந்ததையடுத்து ரூ.300 டிக்கெட்டில் தினமும் 30 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசன டிக்கெட் 30 ஆயிரம் பக்தர்களும் என 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, சாதாரண பக்தர்கள் … Read more

சோனியா குடும்பம் மட்டுமே தேர்தல் தோல்விக்கு பொறுப்பாக முடியாது: காங். மூத்த தலைவர் கருத்து

கலபுர்கி: ‘தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தியின் குடும்பம் மட்டுமே பொறுப்பு என்பதை ஏற்க முடியாது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறி உள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரசில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கிடையே அதிருப்தி தலைவர்கள் கொண்ட கட்சியின் ஜி-23 குழுவில் முக்கியமானவரான குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.  அதன் பின்னர் அவர்,‘‘ சோனியா … Read more

சந்திரபாபு நாயுடு பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தினாரா? – தீயாய் பரவும் குற்றச்சாட்டு

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆட்சிக் காலத்தில் சர்ச்சைக்குரிய இஸ்ரேலிய ஸ்பைவேரான பெகாசஸைப் பயன்படுத்தியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய ஆந்திர பிரதேசத்தின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குடிவாடா அமர்நாத், “முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பதவிக் காலத்தில் (2014-19) பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தினார். இதனை மத்திய அரசு விசாரிக்க வேண்டும்; அவர் தனது பதவிக்காலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பல … Read more

காஷ்மீரில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த சிஆர்பிஎஃப் உறுதி: மத்திய அமைச்சர் அமித் ஷா புகழாரம்

ஜம்முவுக்கு நேற்று வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, சிஆர்பிஎப் படையின் 83-வது ஆண்டு அணிவகுப்பு விழாவில் பங்கேற்று பேசியதாவது: நாட்டின் வடகிழக்கு, ஜம்மு காஷ்மீர், நக்ஸல் பாதித்த பகுதியில் உள்நாட்டு பாதுகாப்பை வழங்கு வதில் சிஆர்பிஎப் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. வரும்காலங்களில் இங்கு சிஆர்பிஎப் படையை நிறுத்த வேண்டிய அவசியமே ஏற்படாது. அந்த அளவுக்கு அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 33 ஆயிரம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு … Read more

இந்தியாவில் புதிதாக 1,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட குறைந்து ஆயிரத்து 761 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 127 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 56 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 26 ஆயிரத்து 240 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link